(Reading time: 13 - 25 minutes)

" னக்கு நேர்ந்த எந்த கொடுமையும் யாருக்கும் நேர்ந்துவிட கூடாது ..அதுக்காகவே இந்த தற்காப்பு கலையை கத்துகிட்டு , இப்போ இலவசமா கற்று தந்துகிட்டும் இருக்கேன் .. நீங்க ரெண்டு பேரும்  மட்டும் இல்ல , வேற யாருமே என்னை பத்தி தெரிஞ்சுகறதுல எனக்கு இஸ்டம் இல்லை .. அதுக்காக தான் இங்க ஒரு மாதிரி , வெளில ஒரு மாதிரி இருக்கேன் "

" உன் சிந்தனையை என்னால நியாயபடுத்த முடியல ஷக்தி " என்றாள்  பூரணி.

" அதுக்கு பேருதான் அக்கா சிந்தனை .. ஒத்த கருத்தோடு இருந்தா அதுக்கு பெயர் முடிவு .. மாற்று கருத்துகளும் இருந்தால்தான் அதை சிந்தனைன்னு சொல்ல முடியும் " ஏதேதோ சித்தாதங்களை கூறினாள்  ஷக்தி ..இறுதியாய்

" இதபத்தி வெளில தெரிய வேணாம் .. தெரிய படுத்த மாட்டிங்கன்னு நம்புறேன் " என்று கட்டளை இடும் குரலில் சொல்லிவிட்டு நடந்தாள்  .. அவள் போகும் பாதையையே வியப்புடன் பார்த்தனர் பெண்கள் இருவரும் ..

" அவ சொல்லுறதுலயும் ஒரு லாஜிக் இருக்கு குட்டிமா .. இப்போ இருக்குற காலகட்டத்துல , பெண்கள் வீட்டில் எலியாகவும் , சமுதாயத்தில் புலியாகவும் இருக்க வேண்டியது அவசியம்தான் " என்றாள்  பிரியங்கா .. அவள் சொல்வதை ஆமோதித்தாள்  பூரணி .. ஏதேதோ சிந்தனையில் இருந்தவள் களுக்கென சிரித்தாள் ..

" என்னடீ பூரி ?"

" அதுவா , நீ ப்ளேக் ஹீரோவை கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்னியே ... நான் வேணும்னா ஷக்தி கிட்ட பேசவா " என்று சொல்லி சிரிக்க , அவளை துரத்தி கொண்டே ஓடினாள்  பிரியங்கா ...

துன்ப மிலாத நிலையே சக்தி,

தூக்க மிலாக்கண் விழிப்பே சக்தி;

அன்பு கனிந்த கனிவே சக்தி,

ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி(பாரதி )

ஒவ்வொரு பெண்ணும் மகாசக்தி தான் .. அதை வார்த்தைகளால் மட்டும் இன்றி செயலினாலும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் நாம் .. மண்ணுக்குள் மடியும்வரை பெண்ணுக்குள் பிறந்து விஸ்வரூபம் எடுக்கட்டும் " சக்தி " !

நண்பர்களே " வீட்டுல எலி வெளில புலின்னு தலைப்பு பார்த்ததும் , என் அப்பா உட்பட கணவன்மார்கள் தான் கண் முன்னால நின்னாங்க .. அவங்களை கொஞ்சம் தள்ளி நிக்க சொல்லிட்டு மீண்டும் யோசிக்கும்போது , பெண்களின் அவலக்குரல் என் செவிகளை தாண்டி மனதினை தட்டி எழுப்பியது .. எந்த அளவிற்கு சொல்ல வந்ததை உங்க கிட்ட  இந்த கதையின்மூலம் கொண்டுவந்து சேர்த்தேன்னு தெரியலை .. உங்க கருத்துக்காக காத்திருக்கிறேன் .. நன்றி

This is entry #36 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest 

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.