(Reading time: 13 - 25 minutes)

" ப்ரீ ... சொல்றத கேளு ... நீ அழுதா மட்டும் நடந்தது சரியாகிடுமா ?"

" அதுக்காக அழாம இருக்கனுமா ?"

" அடியே , உனக்காகத்தான் இன்னைக்கு லீவ் போட்டேன் .. நீ இப்படி அழுதுட்டே இருக்க போறன்னா  சொல்லிடு நான்  போறேன் " என்று பூரணி கோபமாய் பேச முயல அவள் கைகளை பிடித்து தடுத்து நிறுத்தினாள்  ப்ரியா ..

" என்ன நீ, பொசுக்கு பொசுக்குன்னு கோபப்படுற ? என்னையே இந்த பாடு  படுத்துற .. உன்னையும் ஒருத்தன் கல்யாணம் பண்ணா அவன் நிலைமை பாவம் " என்று ப்ரியா சொல்லவும் தோழியை சரிமாரியாய் அடித்தாள்  பூரணி ..

" ராட்சசி .. என்னை பாடா படுத்திட்டு இப்போ என்னையே குறை சொல்லுறியா ? போயி குளிச்சிட்டு வா நாம ஷாப்பிங் போகலாம் " என்றாள்  பூரணி

" ஹீ ... ஷாப்பிங் ஆஅ ? அப்போ 2 மினிட்ஸ்ல ரெடி ஆகிருவேன் "

" ஹே அழுக்குமூட்டை .. குளிச்சிட்டு கெளம்பு டீ .. பெர்பியும் அடிச்சு ஊரை ஏமாத்தாதே " என்றாள்  பூரணி ..

" ஹீ ஹீ தங்கம் , இந்த மாதிரி ரகசியத்தை எல்லாம் வெளில சொல்லிடாதே டீ " என்று அசடு வழிந்தாள்  ப்ரியா .. அதன்பின் அன்றைய நாள் ரெக்கை கட்டி பறந்தது .. அருகில் இருந்த திரையரங்கத்தில் படம் பார்த்துவிட்டு இருவரும் , ஷாப்பிங் முடித்துவிட்டு மாலை தான் ஹாஸ்டலை அடைந்தனர் ..

" ரொம்ப டயர்டா இருக்கு டீ குட்டி "- ப்ரியா

" நீ ப்ரெஷ் ஆகிட்டு கீழ வா .. காபி குடிக்கலாம் "

ருவருமாய் அந்த மாலைவேளையை  ரசித்தபடி தோட்டத்தில் நடை பயின்றனர் ..

" என்ன ப்ரீ, இன்னும் அதையே யோசிக்கிறியா ?"

" என்ன பண்ண சொல்லுற ? பெண்களை வெறும் சதைமலராய்  பார்க்குறத எப்போதான் நிறுத்த போறாங்க "

" என்ன பண்ணுறது .? எல்லாரும் நம்ம ப்ளேக் ஹீரோ ஆகிட முடியுமா ? " என்று பூரணி அந்த " ஹீரோ " வை பற்றி கூறவும்  ப்ரியாவின் இதழில்  புன்னகை விரிந்தது ..

" பார்க்கணும் டீ .. அவனை பார்க்கணும் .. அவன் கிட்ட சண்டை பயிற்சி கத்துக்கணும் .. ஒருவேளை அவன் சிங்கள்ன்னா , அவனை கல்யாணம் பண்ணிக்கணும் " என்று சிரித்தாள் ..

" ஆசைதாண்டி உனக்கு .. " என்று பூரணியும் கேலி செய்ய தொடங்க , ப்ளேக் ஹீரோ யாருன்னு தெரிஞ்சுப்போம் .. ப்ரியா , பூரணி வசிக்கும் அந்த பகுதியில் பெண்கள் விடுதிகள் அதிகம் .. பூக்கள் இருக்கும் இடத்தை தேடித்தானே வண்டுகள் வரும் ? அதேபோல பெண்கள் அதிகம் இருக்கும் அந்த பகுதியில் , பெண்களுக்கான ஆபத்துகளும் அதிகம்தான் ..

இப்படியாய் இரவு வேளைகளில் சிலரால் அங்கு தொந்தரவுகள் வர, ஓரிரு முறை கருப்பு நிற பைக்கில் , கருப்புநிற உடை அணிந்த ஒருவன் அந்த பெண்களை காப்பற்றி  இருந்தான் ..ஒருமுறை ப்ரியாவே அவனை தூரத்தில் இருந்து பார்க்க நேர்ந்தது ..ஆனால் அருகில் வருவதற்குள் மின்னல் போல மறைந்துவிட்டான் .. ஆனால் , அன்று அவன் அந்த பெண்களுக்கு செய்த உதவியை இன்றுவரை எடுத்து சொல்லி சிலாகித்து கொள்வாள் பிரியங்கா .. அவளும் , பூரணியும் சேர்ந்துதான் அவனுக்கு  ப்ளேக் ஹீரோ என்று பெயர் வைத்தனர் ..

" அவனை பார்க்கணும் டீ .. அவனை ஒரு தடவையாச்சும் பார்க்கணும் " என்றாள்  ப்ரியா தீவிரமாய் ..

" என் குட்டிமா ஒரு விஷயத்துக்கு ஆசைப்பட்டு அதை நடத்தாமல் இருந்திடுவேனா ? இனிமே அவனை தேடுறதுதான்  என் வேலை " என்று பூரணியும் சிரித்தாள் , அந்த ஆசை இன்றே நிறைவேறும் என்று அறியாமல் .. 

ன்றிரவு .. பைக் சத்தம் கேட்கவும் கண் விழித்தாள்  ப்ரியா ..

" ஹே பூரி ... எழுந்திரி எழுந்திரி "

" ஷ்ஷ்ஷ்ஷ் ... இந்த நேரத்துல என்ன டீ "

" பைக் சத்தம் கேட்குது "

" இவ்வளவுதானா ? ஜன்னலை சாத்திட்டு தூங்கு "

" அடியே , ஹீரோவை தேடலாம்னு சொல்லிட்டு தூங்குறியே "

" அட போடி , யாரோ ஒருத்தன் பைக் ஓட்டுறதுக்கும்  உன் ஹீரோவுக்கும் என்னடி சம்பந்தம் ?"

" அதெல்லாம் எனக்கு தெரியும் .. இது அவனாக  தான் இருக்கும் .. " என்று அவளை எழுப்பி கொண்டு கிளம்பிய வேளை, அவர்களது அறை  வெளிப்பக்கமாய் தாழிடப்பட்டு இருந்தது ..

" என்னடீ இது ? நம்ம ரூமை யாரு பூட்டினாங்க ? "- ப்ரியா

" தெரியலை இரு யாருக்காச்சும் போன்  போடலாம் "

என்று பூரணி போனை துலாவ , அவளது தொலைபேசியை காணவில்லை ..

" ப்ரீ , நைட் என் போன்ல பாட்டு கேட்டுகிட்டே தானே தூங்கினோம் ..எங்க டீ ?"

" என்னடி சொல்லுற ? போன் காணோமா ? இரு என் போன்ல பேசலாம் " என்று தனது போனை தேடிவிட்டு

" என் போனையும் காணோம் டீ " என்றாள்  பிரியங்கா ..

" என்னடி நடக்குது ? " என்று பூரணி யோசிக்க , ப்ரியா யோசனையுடன் ஜன்னலை பார்த்தாள் .. அடுத்த நொடி உதித்தது அந்த தீர்வு ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.