(Reading time: 10 - 19 minutes)

'டேய் இத சொல்லவா போன் பண்ணின?"

"ஹே லூசு நீ மட்டும் இதை அனலிசிஸ் பண்ணி உன் ஹெட் கிட்ட குடுத்த, கண்டிப்பா உனக்கு தான் டி புல் மார்க்ஸ்"

"ஹே நிஜமாவ சொல்ற?"

"ஆமா டீ, ஆனா இதை முடிச்சு குடுத்த எனக்கு நீ ட்ரீட் வைக்கணும் சரியா?"

"எல்லாம் என் தலை எழுத்து டா, இந்த ஜேர்னலிசம் எடுத்துட்டு நான் பற்ற பாடு இருக்கே, அய்யையோ"

'உன்ன யாரு எடுக்க சொன்னா? உட்காந்து மாச சம்பளத்துக்கு கம்ப்யூட்டர் தட்ட வேண்டியது தானே"

"அந்த வேலை பிடிக்கலன்னு தானே இதுல சேர்ந்தேன்"

"அப்போ ஒழுங்கா நான் சொல்றத கேளு டி"

"சரி சொல்லு"

"ஒரு பொண்ண எங்க ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வந்தாங்க டீ, அவ யார் கூடவும் பேசல, ரொம்ப பயந்து போயிருந்தா, நான் அவளுக்கு கவுன்சிலிங் குடுத்ததுல அவ சொன்னது கொஞ்சம் இண்டரஸ்டிங்"

"என்ன சொன்னா?"

"அவளும் அவ காதலனும் கொல்லிமலைல பக்கத்துல இருக்க அருவிக்கு போய் இருக்காங்க, அங்க பேய் உலவுதுன்னு ஒரு வந்தந்தி இருக்கிறதுனால யாரும் அதிகம் போக மாட்டங்கலாம், அதுனால இவங்களுக்கு தனிமை கிடைக்கும்னு நினைச்சு போன அம்மாவாசை அன்னைக்கு போயிருக்காங்க"

"ஏன் அம்மாவசை அன்னைக்கு போனாங்க?"

"மத்த நாட்கள் கூட ஒன்னு ரெண்டு பேர் வந்து போவாங்களாம் ஆனா அம்மாவசை பௌர்ணமிக்கு அங்க யாரும் போக மாட்டாங்க, இவங்க ஜாலியா இருக்கலாம்ன்னு போயிருகாங்க, சாயங்காலம் வரைக்கும் ஏதும் ஆகலையாம் கொஞ்சம் இருட்டும் போது அந்த பொண்ணோட லவர் பக்கத்துல இருக்க காட்டுக்குள்ள போலாம்ன்னு கூப்பிடிருக்கான் இந்த பொண்ணு வேண்டாம்ன்னு சொல்லியும், அங்க ஏதேதோ சத்தம் கேட்டதாவும், அந்த பையன எதுவோ அடிச்சு எரிச்சு கொன்னுட்டதாவும் இந்த பொண்ணு சொல்ற"

"ஹ்ம்ம் மர்மமா இருக்கு, அங்க பேய் இருக்குனு ஒரு கட்டு கதை இருக்கு கேள்வி பட்டிருக்கேன், பழைய பேபர் எல்லாம் ரெபர் பண்ணும் போது, ஆனா நான் நம்புனது இல்லை"

"ஹ்ம்ம் எனக்கும் நம்பிக்கை இல்லை, ஆனா இந்த பொண்ணு சொல்றாளே"

"ஹ்ம்ம் இந்த பொண்ணு எப்படி தப்பிச்சு வந்தாளாம்?"

"இவ எங்கயோ ஒளிஞ்சு இருந்திருக்க, அந்த பையன் செத்த அதிர்ச்சியில மயங்கி விழுந்துருக்கா, அடுத்த நாள் காலைல யாரோ இவள கொண்டு போய் பக்கத்துக்கு ஊர் ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்காங்க, இவ கண் முழிச்சது ரெண்டு நாள் பிறகு தான், சோ இவளுக்கு எந்த தகவலும் தெரியல யார் காப்பாத்தினது எப்படின்னு"

"தவம் நீ அந்த பொண்ண நம்பறியா?"

"கண்டிப்பா ஏன்னா கவுன்சிலிங் பண்ணப்போ அவளுக்கு நான் உபயோகிச்ச முறை 'ஈ.எம்.டி.ஆர்'"

"அப்படின்னா?!"

"உனக்கு எப்படி புரிய வைக்கிறது? ஆங்.. அந்நியன் படத்துல விக்ரம்க்கு என்ன ஆச்சுன்னு நாசர் கண்டுபிடிக்க அவர தூக்கமும் இல்லாம மயக்கமும் இல்லாம ஒரு நிலைக்கு கூட்டிட்டு போவாரே அந்த மெதட்"

"அதுல பொய் சொல்ல மாட்டாங்களா?"

"99% வாய்ப்புகள் இல்லை"

"ஹ்ம்ம் இதை வெச்சு எதாவது எழுத முடியுமான்னு பாக்கிறேன்"

"ஓகே டி"

"இன்னும் எதாவது தகவல் தெரிஞ்ச சொல்றேன்"

"டேய் நம்ம அந்த இடத்துக்கு போய் பார்த்தா என்ன?"

"லூசா நீ போடி, நான் எல்லாம் வர மாட்டேன், விளையாடதே பாரதி"

"ப்ளீஸ் டா, நிறைய தகவல் கிடைக்கலாம், இந்த ப்ராஜெக்ட் மட்டும் முடிச்சிட்ட நான் ஆசை பட்ட மாதிரி பத்திரிக்கைல நல்ல வேலை கிடைச்சுரும்"

"அதுக்காக?!"

'ப்ளீஸ் ப்ளீஸ் உனக்கு தான் இதுல எல்லாம் நம்பிக்கை இல்லையே டா"

"இல்லை தான்"

"ம்ம்ம் அப்போ இது பொய்ன்னு நிரூபிக்கலாம்.. இதுக்கு பின்னாடி யார் இருக்கான்னு தெரிஞ்சுக்கலாம்"

"சரி டி நான் யோசிச்சு சொல்றேன்"

"எப்போ?"

"ஒரு மீட்டிங் இருக்கு  நீ கிளம்பி ஹாஸ்பிட்டல் வா நேர்ல பேசி முடிவு பண்ணலாம்"

"சரி டா அறை மணி நேரத்தில அங்க இருப்பேன்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.