(Reading time: 10 - 19 minutes)

"ல்லை டி அந்த கேஸ் விஷயமா தான் யோசிச்சுட்டு இருந்தேன்.. அதான்"

"ஒ நானும் அதுக்காக தான் இப்போ போன் பண்ணினேன்"

"என்ன?"

"என்னவா?! சாயங்காலம் கிளம்பறோம் தானா?"

"பாரதி இன்னைக்கே கிளம்பனுமா?"

"தவம் எனக்கு கோவம் வருது"

"இல்லை நான் மட்டும்னா பரவாயில்ல நீயும் வர்றது தான், அதும் உங்க வீட்டுக்கு தெரியாம?"

"டேய் ஒரு நைட் தானா அதும் நீ இருக்கியே அதெல்லாம் ஏதும் ஆகாது நான் கண்டிப்பா வருவேன் அவ்வளவு தான்"

"ம்ம்ம்ம்"

"என்ன யோசனை.. அதெல்லாம் மூட்டை கட்டி வை, பிளைட் டிக்கெட் எல்லாம் செக் பண்ணிட்ட தானா?"

"ம்ம்ம் பண்ணிட்டேன், சேலம் ஏர்போர்ட் போய்டலாம் 7 மணிக்கு, அங்கிருந்து ப்ரெண்ட் கார் ல போய்டலாம்"

"ஒ சூப்பர் டா, எத்தன மணிக்கு போவோம்?"

"ஒரு 9 மணிக்கு எல்லாம் போய்டலாம், பாரதி..."

"என்ன?"

"இன்னொரு தடவை யோசிச்சுகோ"

"யோசிக்க ஒன்னும் இல்லை நான் இப்போவே ரெடி, பை சாயங்காலம் பாக்கலாம்"

"ம்ம்ம்ம்"

அவர்கள் பேசியது போலவே சென்னையிலிருந்து சேலம் விமான நிலையத்தை அடைந்து அங்கிருந்து காரில் கொல்லிமலை நோக்கி தொடங்கியது அவர்கள் பயணம்.காரில் இனி போக முடியாது என்று தீர்மானித்த இடத்தில் அருகில் உணவகம் ஏதேனும் உள்ளதா என தேடி சாப்பிட்டு விட்டு, காட்டுக்குள் நடந்தனர் இருவரும்.

கூடாரம் அமைப்பதற்கு தோதாக ஒரு இடத்தை தேர்வு செய்து கூடாரம் அமைத்து அதனுள் ஓய்வெடுக்கலாம் என முடிவு செய்தனர்.

கூடாரத்தின் உள்ளே கையில் டார்ச் லைட்டின் உதவியுடன் அந்த கோப்பை பிரித்து படித்துக் கொண்டிருந்தாள் பாரதி.

"பாரதி, அதை விட்டுட்டு கொஞ்ச நேரம் தூங்கு பன்னிரண்டு மணிக்கு எழுந்து போகணும்ல"

"ம்ம்ம்ம்.. இல்ல தவம் இந்த கேஸ் கொஞ்சம் கஷ்டம் தான் போல"

"இருக்கட்டும் பாத்துக்கலாம்"

"ம்ம்ம் சரி நான் தூங்கறேன்"

கூடாரத்தின் உள்ளே  உறங்கி கொண்டிருந்தவளின் கனவு ஆரம்பமானது.

"மிஸ் பாரதி.. பாரதி"

அருகில் சத்தமாக யாரோ அழைக்க, திடுக்கிட்டு விழித்தாள் பாரதி.திரு திருவென விழித்தவள், சற்று சுதாரித்து

"ஆங்.. பிரியங்கா"

"டாக்டர் தவம் வர இன்னும் கொஞ்சம் டைம் ஆகுமாம், உங்க கிட்ட சொல்ல சொன்னார்"

"ம்ம்ம் தேங்க்ஸ்"

"சாரி தூங்கிடீங்க போல, தொந்தரவு பண்ணிட்டேன்"

"இ இல்லை பரவாயில்லை"

"ஓகே நான் போகணும் பை"

"ம்ம்ம் பை"

பிரியங்கா வெளியே செல்ல, மெல்ல அந்த அறையை நோட்டம் விட்டாள் பாரதி. அது தவம் பணிபுரியும் மருத்துவமனையில் அவன் அறை.

தனக்குள்ளே பேச ஆரம்பித்தாள் பாரதி.

"என்ன நடக்குது இங்க, என்ன இதெல்லாம், ஏன்?"

அவள் சிந்தனையை தடை செய்து தவம் உள்ளே நுழைந்தான்.

"பாரதி அந்த கேஸ் போன்ல சொன்னேன்ல "

"சொல்லு"

நான் கொல்லிமலை போலாம்ன்னு இருக்கேன்"

"ஹ்ம்ம்"

"பாரதி என்ன ஆச்சு  உனக்கு?"

அவள் மனதில் மட்டும் இருந்த அமானுஷ்யம் அந்த அறையை சூழ்ந்தது. அந்த துர்நாற்றம் காற்றில் வர பாரதிக்கு வியர்த்தது.

காதோரம் அந்த குரல் கேட்டது.

" பாரதி…."

"லோ"

"ஹலோ தவம்"

"பாரதி ஒரு வித்யாசமான கேஸ் வந்திருக்கு"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.