(Reading time: 10 - 19 minutes)

இது முடிவல்ல.. - ப்ரியா

This is entry #64 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

mystery

மாவாசை இரவு..!! அந்த கொல்லிமலையின் காட்டுக்குள் பயத்துடன் ஓடி கொண்டிருந்த பாரதி காலில் ஏதோ இடற 'அம்ம்மாஆஅஆ' என்ற அலறலுடன் கீழே விழுந்தாள். கையில் இருந்த டார்ச் எங்கோ சென்று விழுந்து அதன் ஒளி அவளுக்கு எதிர் திசையில் பாய்ந்தது.

கைகளில் சிராய்ப்புடன் எழுந்தவள் உடம்பு முழுவதும் ஒட்டியிருந்த மண்ணை கூட தட்டி விடாமல் ஓட எத்தனித்தாள்.

ஆனால் அவளால் காலை அசைக்க முடியவில்லை. வியர்வையில் குளித்து இருந்த உடம்பு உதற ஆரம்பித்தது. தொண்டை குழி வறண்டு ஒரு கனத்தை உணர்ந்தாள்.கண்களை இருக்க மூடி மௌனமாய் அழுதவள் மெல்ல கண்களை திறந்து டார்ச்சின் வெளிச்சம் போன திசையில் பார்த்தாள்.

அங்கு அவன் நின்றிருந்தான்.

"தவம்ம்ம்ம்.. தவம் இங்க வா"

இவள் கூப்பிட்டாலும்  அவனிடம் எந்த அசைவும் இல்லை. முயன்று இவள் கால்களை நகர்த்த இப்பொழுது நகர்ந்தன கால்கள்!!

"அப்பாடா, தவம் உன் பக்கத்துல வந்துடறேன் அங்கேயே நில்லு டா" சொல்லிக்கொண்டே வேக வேகமாய் இவள் டார்ச்சை நோக்கி முன்னேற, சருகுகளின் சப்தம்.

அவள் நடக்காமல் நின்ற பின்னும் அது தொடர்ந்தது, தவத்தை திரும்பி பார்த்தாள் அவன் அதே இடத்தில தான் நின்று கொண்டிருந்தான். அப்படி என்றால் வருவது?!!!

காலடி ஓசை அவளை நெருங்குகையில் அவள் டார்ச்சை எடுத்து விட்டாள். எடுத்து கொண்டு தவத்தை நோக்கி அவள் ஓட, டார்ச்சின் ஒளி நின்றது, பேட்டரி நின்றிருக்க வேண்டும்.

கும்மிருட்டில் கைகளை வீசி துளாவியபடி இவள் முன்னே நடக்க, காற்று பலமாக வீசியது, அமைதியான காட்டின் நிலை ஒரு நொடியில் மாறியது.

சுழல் காற்றில் சிக்கிய அசருகுகளின் சப்தமும், தூரத்தில் இருந்த அருவியின் பேரிரைச்சலும்,ஏதேதோ பறவைகளின் ஒலியும் எங்கெங்கோ இருந்து வந்தது.

கையில் இருந்த டார்ச் சட்டென்று ஒளி பெற, அவள் முன்னே அந்த உருவத்தை பார்த்தவள் 'வீல்'  என கத்த முயல, வாயை கூட அவளால் திறக்க முடியவில்லை.

"பாரதி...."

அந்த உருவம் இவள் பெயரை உச்சரிக்க, முதுகு தண்டு சில்லிட்டது பாரதிக்கு. அங்கிருந்த ஒவ்வொரு அணுவிலும் அமானுஷ்யம் கலந்திருக்க, அணைத்து தெய்வங்களையும் துணைக்கு அழைத்தாள் அவள்.

ஒரு பக்க முகம் பாதி கருகியும் மற்றொரு பக்கத்தில் ரத்த காயங்கள், உடம்பிலும் அங்கெங்கே ரத்த காயங்களும் எரிந்ததற்கு ஆன அடையாளங்களும். அது தன் முகத்தை இவள் முகத்திற்கு அருகில் கொண்டு வர, அத்தனை பயத்திலும் அடி வயிற்றில் இருந்து குமட்டி கொண்டு வந்தது பாரதிக்கு.

அந்த உருவத்திடம் இருந்து வந்த துர்நாற்றத்தை கொஞ்சமும் அவளால் பொறுக்க முடியவில்லை.

"என்ன தெரியலையா பாரதி"  ஒரு வித ஏளனத்தோடு அது வினவ,

"நீ.. நீ.. நீ?”

" அந்த தவம் என்ன ஆனான்னு நீ பாக்க வேண்டாம்?"

"த..தவம்"

"ஆஅ அவனே தான்.. செத்து போய்ட்டான்"

அதிர்ச்சியில் அவள் கண்கள் விரிய, அவள் கழுத்தை நெரித்தது அந்த உருவம் அதன் கண்களில் தெரிந்த ஆத்திரத்தை பார்த்து கொண்டே உயிர் நீத்தாள் பாரதி.

"பாரதி பாரதி எழுந்திரு, மணி 12 ஆச்சு, நம்ம இப்போ போன தான் நமக்கு தேவையான ஆதாரம் கிடைக்கும்" தவம் பாரதியை உலுக்கி எழுப்ப, மிரண்டு எழுந்தாள் பாரதி.

அவள் எதையோ பேச முயன்று முடியாமல் சுவாசத்திற்கு தடுமாற, சட்டென அவர்கள் இருந்த கூடாரத்தின் ஒரு பகுதியை அவன் திறக்க, திகிலுடன் அதை மூடி விட்டு,

"த.. தவம் இது இங்க போய்டலாம், ஏதும் வேண்டாம்"

"ஹே இரு இரு இதுக்கு தான் முன்னாடியே கேட்டேன் எதாவது கெட்ட கனவா? ஒண்ணுமில்ல டி நான் இருக்கேன் ல"

"இல்லை தவம் போய்டலாம்"

அவள் சொல்லி கொண்டிருக்கும் போதே அவளுக்கு மட்டும் அந்த துர்நாற்றம் தெரிந்தது தொடர்ந்து அந்த குரலும் கேட்டது.

" பாரதி…."

வத்தின் அலைப்பேசி சிணுங்கி கொண்டே இருந்தது அவன் மும்முரமாய் தன் அலுவல் அறையில் அந்த கோப்புகளின் நடுவே அமர்ந்து யோசித்து கொண்டிருந்தான்.

மீண்டும் அலைப்பேசி சிணுங்க, சற்றே எரிச்சலுடன் எடுத்தவன் அதில் பாரதியின் பெயரை பார்த்தவுடன் சிந்தனையுடன் அழைப்பை ஏற்றான்.

"ஹலோ தவம்?"

"சொல்லு பாரதி"

"டேய் எரும போன் எடுக்க இவ்வளவு நேரமா?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.