எட்டு மாதங்களுக்கு முன்பு, மதன் ஒரு தொழில் சார்ந்த கூட்டத்திற்கு வெளியூர் சென்றிருந்த நேரம், அவன் அம்மா அப்பா தங்கை மூவரும் சென்ற கார் ஒரு லாரி மோதி விபத்தில் மூவரும் பலியான செய்தி அவனுக்கு பறந்தது
முதலில் அது விபத்து என்று நம்பிய அவனுக்கும் அவன் அப்பா வழி தாத்தாவுக்கும் பின்பு தான் தெரிந்தது அது அவன் தாத்தாவின் மேல் இருந்த பகையால் நடந்தது என்று.
அன்றிலிருந்து அவருடன் பேசுவதை நிறுத்தி விட்டான். அலுவலுகம் செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் எல்லாம் அவன் அம்மா அறையில் தான் இருப்பான்.
அவர்கள் இன்னும் உயிருடன் இருப்பதை போல, அவர்கள அவனுடன் பேசுவதை போல கற்பனை செய்து கொண்டு தினமும் நடக்கும் விஷயங்களை எல்லாம் பகிர்ந்து கொள்வான்.
அவனுக்கு இப்படி ஒரு மன நோய் இருப்பதே அவன் தாத்தாவிற்கு தெரிய வர மூன்று மாதங்கள் ஆனது. வெளிப்பார்வைக்கு அவன் தொழில் நடத்தி வரும் ஒரு முதலாளி, அலுவலுகத்திலும் சரி வெளி இடங்களிலும் சரி மிக இயல்பாய் நடந்து கொள்பவன் அவன் உலகத்திற்குள் சென்றதும் முற்றிலும் மாறி விடுவான்.
ஒரு நாள் கனவில் அவன் ஒரு பெண்ணை பார்த்து, அவளை அப்படியே வரைய அந்த பெண் இன்பா, வெண்பாவின் தோற்றத்தை ஒத்திருந்தாள். அந்த ஓவியத்துடன் காதல் கொண்டு, பெற்றோர் தன்காக நிச்சயம் செய்ததாக நினைத்து அவளுடன் அவன் இருப்பது போன்று அவன் கற்பனைகள் விபரீதம் அடைந்த போது தான் நிஜத்திலும் அவளை கண்டான்.
ஆனால் அவன் கண்டது வெண்பாவை. அன்று அவளுடன் அந்த அறையில் பேசிக் கொண்டிருந்தவன், அம்மா அப்பா தங்கை மூவரும் அருகில் இருப்பது போல அவன் பேச ஆரம்பித்த போது பயந்தாலும் அவன் தாத்தா முன்னமே எச்சரித்தது படி எதையும் கண்டுகொள்ளாமல் இயல்பாய் பேசி விட்டு வந்து விட்டாள். அவனும் நம்பி அனுப்பி வைத்தான். ஆனால் வெண்பாவின் இயல்பான குணத்தினால் அவள் போலிசின் உதவியை தேடி சென்று அவனை ஜெயிலுக்கும் அனுப்பி விட்டாள்.
அவளை பொறுத்தவரை மதன் ஒரு சைகோ, மேலும் ஒரு கடத்தல்காரன். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட இன்பா உடனே மதனின் தாத்தாவை பார்த்து நடந்த அனைத்தையும் அறிந்து கொண்டாள்.
மதனுக்கு தேவை நல்ல அன்பு நிறைந்த வாழ்க்கை தானே தவிர தண்டனை இல்லை என்று முடிவு செய்தவள், வெண்பா என்று போய் சொல்லி ஐ.ஜியிடம் பேசி வாபஸ் வாங்கினாள்.
அவள் தந்தையிடமும் பேசியவள் கல்யாணத்திற்கு சம்மதம் வாங்கினாள்.
ஆனால் வெண்பாவின் குற்ற உணர்ச்சி தலை தூக்க, என்னால் நீ கெட வேண்டாம் என்று எவ்வளவோ கூறியும் எதையும் காதில் வாங்காமல் இதோ கல்யாண மேடை வரை வந்து விட்டாள்.
சரவணன் இதை கேட்டு முடிக்கையில் அவன் மனம் இன்பாவின் பக்கம் சாய தொடங்கி இருந்தது, விரைந்து மணமேடையை அடைந்தவன் இன்பவிற்கு அருகில் குனிந்து,
"செல்லம்மா சாரி டா, மாப்பிள்ளை குணமாக என்ன உதவி தேவைனாலும் சொல்லு, நான் அமெரிக்கா கிளம்பும் போது நீங்களும் வாங்க அங்க மாப்பிள்ளைக்கு ட்ரீட்மென்ட் தரலாம்" என்று கூற,
அவள் பதில் கூறும் முன்,
"நீங்க தான் அமெரிக்கா மச்சானா? என்ன மச்சான் தங்கச்சி கல்யாணத்துக்கு இப்படி காலைல தான் வந்து இறந்குவிங்களா?"
"சாரி மாப்பிள்ளை இதுல இஷ்டம் இல்ல அதும் இல்லாம"
"கல்யாணம் நடக்காதுன்னு நினைச்சிங்களா?"
"சாரி மாப்பிள்ளை"
"விடுங்க மச்சான், அப்புறம் ஏற்கனவே ஒரு நல்ல டாக்டர பார்த்துட்டோம், இன்னும் ரெண்டு மூணு சிட்டிங் வந்த என்ன சரி பண்ணிடல்ம்ன்னு சொல்லிட்டரு இதெல்லாம் மீறி என் தேவதை என்கூட இருக்கா, இனி என்ன வேணும் எனக்கு?"
"இது போதும் மாப்பிள்ளை ரொம்ப சந்தோஷம்" என்று கூறி அவன் நகர்ந்து நிலாவின் அருகில் நிற்க, வெண்பாவும் மணமேடைக்கு வந்தாள்.
அவள் அப்பாவும் மதனின் தாத்தாவும் அருகில் நிற்க, முஹுர்த்த நேரத்தில் இன்பாவின் கழுத்தில் தாலி கட்டினான் மதன்.
தாலி கட்டும் போது அருகில் வந்த மதனிடம்,
"நான் உங்களுக்கு தேவதையா?" என்று இன்பா வினவ,மதன் சிரித்து கொண்டே பெருமையுடன் கூறினான்,
"நீ மட்டும் தான்"
This is entry #72 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
{kunena_discuss:926}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.