(Reading time: 10 - 19 minutes)

"நல்லது"

சீற்றத்துடன் கிளம்பியவனை செய்வது அறியாமல் பார்த்தவர், அவன் சென்றதும் தனக்கு தெரிந்த அடியாளை அழைத்தார்.

மாலை வீட்டை அடைந்து நேரே மாடிக்கு சென்றவன், அவன் அறைக்குள் நுழைந்த போது அறை முழுவதும் அவள் வாசமும் சிரிப்பொலியும் நிறைந்திருந்தது.

அவளுக்கு அருகில் அமர்ந்து அவனுடைய சிறு வயது புகைப்படங்களை காட்டி அவன் தாத்தா ஏதோ சொல்லிக் கொண்டிருக்க, அவள் அதை கேட்டு தலை சரித்து சிரித்துக் கொண்டிருந்தாள்.அவனுடைய கோபங்கள் எல்லாம் நீர்க்குமிழிகள் போல அந்த அறையெங்கும் பறந்து திரிந்து அங்குள்ள பொருட்களின் மேல் பட்டு 'டப் டப்' என்று உடைந்தன. மதன் மீண்டும் அவளிடத்தில் மயங்கினான்.

"ஹ்ம்ம் ம்ம்ம்" அவன் தொண்டையை செரும, அவன் தாத்தா அந்த ஆல்பத்தை அலமாரியில் வைத்து விட்டு

"நான் வரேன் மா பாத்துக்கோ" என்று கூறி கண் ஜடையில் எதையோ உணர்த்த, அவளும் கண்ணசைவில் பதில் சொன்னாள்.

நீண்ட நேரம் அவளுடன் பேசிவிட்டு அவனை நல்ல படியாகவே அனுப்பி வைத்தான் மதன். அவளும் திருமணத்திற்கு சம்மதம் சொல்லி சிரித்த படியே சென்றாள்.

றுநாள் காலை மதன் நடைப்பயிற்சி முடிந்து வீடு திரும்புகையில் ஐ.ஜி அவன் வீட்டின் முன் நின்று அவன் தாத்தாவை விசாரித்து கொண்டிருந்தார். வழக்கம் போல ஏதோ தொழில் பிரச்சனை என்று எண்ணி வீட்டுக்குள் செல்ல முற்பட்டவனை தடுத்த ஐ.ஜி

"மிஸ்டர்.மதன், ஒரு பொண்ண கடத்தி அவங்களுக்கு விருப்பம் இல்லாத கல்யாணத்தை பண்ணிக்க சொல்லி மிரட்டினதா எங்களுக்கு கம்ப்ளைன்ட் வந்துருக்கு, உங்கள அரஸ்ட் பண்றோம்"

என்று கூறி அவனை ஜீப்பில் ஏற சொல்ல, ஸ்தம்பித்து போனான் மதன்.

திருமண நாள் அழகாக விடிந்தது.. மணப்பெண் அறையில் ஒப்பனைகள் நடைபெற்று கொண்டிருக்க, அங்கே மணமேடையில் அமர்ந்து பொறுமை இன்றி ஐயர் சொல்லும் மந்திரங்களை தப்பு தப்பாக சொல்லி கொண்டிருந்தான் மதன்.

மணப்பெண் அறைக்குள் நுழைந்த சரவணன், அவளிடம் கடும் கோபத்தில் கத்தி கொண்டிருந்தான்.

"இன்பா உனக்கு என்ன பைத்தியமா அவன் ஒரு சைக்கோன்னு பேசிக்கிறாங்க"

அறையின் ஓரத்தில் கை கட்டி நின்று கொண்டிருந்த அவளின் தங்கை வாய் திறந்தாள்,

"ஐயோ அண்ணா விடு இவளுக்கு நான் எவ்வளவோ சொல்லிட்டேன் இவ கேட்க போறது இல்ல, அவ நல்லா இருக்கணும்னு கடவுளை வேண்டிக்கோ அது தான் நம்ம பண்ண முடியும்"

"அதுக்கு இல்ல வெண்பா" என்று அவன் தங்கை பக்கம் திரும்ப,

திருமண கோலத்தில் இருந்த இன்பா,

"அண்ணா, அவரை விட யாரும் என்ன நல்லா பாத்துக்க முடியாது அண்ணா ப்ளீஸ் அவரை இன்னொரு தடவை சைகோ அது இதுன்னு சொல்லாதிங்க"

"தாய் இல்லாத பொண்ணுன்னு உங்க ரெண்டு பேருக்கும் செல்லம் குடுத்தது தப்ப போய்டுச்சு, அப்பா கூட இதை முன்னாடி நின்னு நடத்துறது தான் எனக்கு இன்னும் கோபம்"

"அப்பா என்னை புரிஞ்சுக்கிட்டார், ஆனா நீங்க புரிஞ்சுகலை"

"ஒருத்திய அவன் கடத்திட்டு போய் தாலி கட்ட பாத்திருக்கான், அவ ஐ.ஜி கிட்டே போய் அவன கைது பண்ணுங்கனு சொல்லி ஜெயிலுக்கு அனுப்பிட்டா,இன்னொருத்தி அந்த கம்ப்ளைண்ட வாபஸ் வாங்கிட்டு அவனை கல்யாணம் பண்ணிகறேன்னு சொல்றா, என் ரெண்டு தங்கச்சிகளுக்கும் புத்தி இருக்க இல்லையா தெரிலையே" என்று அவன் இயலாமையில் கத்தி கொண்டிருக்க,

அங்கு வந்த நிலா,

"இன்பா நீ ரெடியா உன்ன கூட்டிட்டு வர சொன்னங்க" என்று அவளை அழைக்க,

"நான் ரெடி அண்ணி" என்று அவளுடன் நடந்தாள் இன்பா.

அறையை விட்டு செல்லும் முன் வெண்பாவை நோக்கி,

"தேங்க்ஸ் வெண்பா, ரெட்டை பிறவிகளா பிறந்தால் கூட ஒரே குணம் இருகதுன்னு இன்னொரு விஷயத்துல நீ நிரூபிச்சுட்ட, இருந்தாலும் பரவால மதன் எனக்கு கிடச்ச பொக்கிஷம் அவருக்க உன்னை மன்னிகறேன்" என்று சொல்லி விட்டு கனவுகளுடன் மனமேடை நோக்கி செல்ல, வெண்பா அழுது கொண்டே சரவணனுக்கு நடந்ததை விளக்கினாள்.

"அன்னைக்கு கடத்திட்டு போனப்போ ரொம்ப பயந்துட்டேன் அண்ணா, ஆனா அங்க போனதுக்கு அப்புறம் அந்த தாத்தா நல்லா தான் பேசுனாரு, எட்டு மாசத்துக்கு முன்னாடி அந்த தாத்தா மேல் இருந்த பகைல அவங்க மகன் மருமகன் பேத்தி மூணு பேரையும் யாரோ கொன்னுட்டாங்க "

"புரியலையே" என்று புருவ சுளிப்புடன் சரவணன் வினவ,அவனுக்கு தெளிவாக விளக்கினாள் வெண்பா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.