(Reading time: 16 - 31 minutes)

2017 போட்டி சிறுகதை 16 - நிஜமும், நிழலும் - ஜான்சி

This is entry #16 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க...

எழுத்தாளர் - ஜான்சி

 Hearts

ணமேடையில் அமர்ந்திருந்தவளின் கண்களில் கண்ணீர்த்துளிகள் எட்டிப் பார்த்தன... இதோ இன்னும் சில நிமிடங்களில் அருகே இருக்கும் இவன் அவளுக்குதாலி அணிவித்து கணவனாக போகிறான்... நினைக்கும் போதே சுளீர் என வலித்தது....வீட்டினர் கட்டாயத்தின் பேரில் நாம் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தது நல்லதாக் கெட்டதா என்று எண்ணில்லா முறை யோசித்தாகி விட்டது ஆனால், பதில் தான் கிடைக்கவில்லை.

முன்பொரு முறை இதே மாதிரி மணக் கோலத்தில் இருந்தது நினைவிற்கு வந்து மருட்டியது. ஆம், திருமணம் தான் அரசியின் முதல் திருமணம். அது தந்த அழுத்தங்கள் தான் எத்தனை. அதன் அன்றைய தினம் பின்பு சூடியிருந்த மணமாலையின் மலர்களின் வாசனையை பின்னர் எப்போதாவது முகர நேர்ந்தாலே குமட்டுமளவுக்கு இந்திரன் அவளுக்கு தந்த துன்பங்கள் தான் எத்தனை எத்தனை. அந்த திருமணமும் கூட அவளுடைய விருப்பம் கேட்டு நடத்தப் படவில்லை.

“வேலைச் செஞ்சுக் கிட்டே மேலும் படிக்கிறேனே அம்மா என்று மன்றாடியவளை, எங்களுக்கு வயசாகுதுடியம்மா , எங்களுக்கு எதுவுமாச்சுன்னா உன்னய யாரு பாத்துப்பா. இருக்கிறது ஒரெ ஒரு பொண்ணு உன்னய கட்டிக் கொடுத்துட்டா எங்களுக்கு திருப்தியாக இருக்கும்” என்றுச் சொல்லி சொல்லியே கரைத்தார் காமாட்சி,

படித்து முடித்தாகி கையில் ஒரு டிகிரியையும் வாங்கியாயிற்று , இனிமேல் சில வருடங்கள் வேலைச் செய்து கூடவே உயர் கல்வியையும் கற்று அதன் பின் தான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்பது அவளுடைய ஆவலாக இருந்தது.பெற்றோர் கை வளைவிற்க்குள் இருந்தே வளர்ந்தவள் இதுவரைப் பார்க்காத வெளியுலகத்தைப் பார்க்க வேண்டும். கம்பீரமாக அலுவலகம் போய் தன்னுடைய திறமைகளுக்கான அங்கீகாரங்கள் பெற வேண்டும். நன்கு சம்பாதித்து தாய் தந்தையரை மென்மேலும் உயர்ந்த நிலையில் கொண்டு வர வேண்டும் என்று அவளுக்கு இருந்த எத்தனையோ கனவுகளை தாயின் உருக்கமான பேச்சுக்கு முன்னதாக ஒன்றுமில்லாததாக்கி விட்டு அன்று மணமேடை ஏறினாள்.

இந்திரன் குறித்து அவளுக்கு ஒன்றுமே தெரியாது இருந்தது தான் ஆனால் தன்னை உயிராக நேசிக்கும் தாய் தந்தை தெரிவு குறித்து அவளுக்கு துளியேனும் சந்தேகம் வரவில்லை. ஊரெல்லாம் அந்தக் குடும்பத்தை விசாரித்துத் தெரிவுச் செய்திருந்தனர் அவளுடையப் பெற்றோர்.

உடைகள் உடுப்பது வெளியில் தெரியும், பிறர் முன்னாக பெருமையாக வலம் வருவது பிறருக்கு தெரியும், ஆடம்பரமாய் வீடுகளில் வசிப்பது பலருக்குத் தெரியும். ஆனால், என்னதான் விசாரித்தாலும் உள் மனதில் இருக்கும் வக்கிரங்கள் யாருக்கு தெரிய வரும்? அப்படித்தான் ஆயிற்று அரசியின் கதை.

இந்திரன் அவளை விட 11 வயது மூத்தவன். 21 வயது பெண்ணிற்கு 32 வயது மாப்பிள்ளையா என்று ஒரு சிலர் அவள் காது படவே பேசினாலும் அதை அவளுமே பெரிது படுத்தவில்லை. திருமண பந்தத்திற்கான முக்கியத்துவம் அவள் அறியாதவளா என்ன? அவன் எனது மணாளன் அவனை முழுமையாக ஏற்றுக் கொள்ளுவதும், நேசிப்பதும் என் கடமை என்று அவள் மனதில் பதிப்பித்துக் கொண்டிருக்க, அவனோ தன்னுடைய அழகற்ற தோற்றத்தால் , முன் வழுக்கையால் மனம் முழுவதும் விஷமாக மாறிப் போயிருந்தான்.

நியாயமாக குறிப்பிட வேண்டுமென்றால் அழகியான, இளம் வயதான தன்னுடைய மனைவியை அவன் மகிழ்ச்சியில் கொண்டாடி இருந்திருக்க வேண்டும். இல்லை அது முடியாதென்றால் அவளை மணந்திருக்க கூடாது. இங்கோ அவனை சந்தேகப் பிசாசு பிடித்தாட் கொண்டது. அவள் தன்னை மணந்திருக்கிறாள் என்றால் அவளுக்கு ஏதோ குறையிருக்க வேண்டும், இல்லை ஒழுங்கீனமானவளாக இருந்திருப்பாளோ என்று மனதின் ஓரத்தில் ஓர் எண்ணம்.

வழக்கமாக பின்பற்றும் தன்னுடைய குடிப்பழக்கத்தை திருமணத்தை முன்னிட்டு சில நாட்கள் நிறுத்தி வைத்திருந்ததால் அவனால் அவளோடு விளையாட்டாக பேசவும், பழகவும் முடிந்தது. அதிலும் இடையிடையே அவளிடம் குதர்க்கமாக ஏதாகிலும் பேசி, அவள் அடிப்பட்ட குழந்தையாக முழிப்பதைப் பார்த்ததும் பேச்சை மாற்றி இவ்வாறு சில நாட்கள் கழிந்தது.

திடீரென்று , “உன் பெற்றோர்கள் என்னுடைய பணத்திற்காக தான் உன்னை எனக்கு கட்டி வைத்திருக்க வேண்டும், எவ்வளவு பண ஆசை பார்த்தாயா?” என்பான். இவளையே வித விதமாக பேசி அவள் மண்டை காய வைப்பான்.

அவளுக்கு அவன் சொல்வதை நம்புவதா வேண்டாமா? எனப் புரியாது , ஏனென்றால் தோற்றத்தில் எளிமையானவர்களாக ஆடம்பரச் செலவுகள் செய்வதில் பிடித்தமில்லாதவர்களாக இருந்தாலுமே வசதியில் அவளுடய குடும்பத்தினர் அவள் கணவன் குடும்பத்தினருக்கு குறைவானவர்கள் அல்லவே. வரன் வந்தது குறைவு சொல்லும் படி எதுவும் அவர்களுக்கு தோன்றாததால் அவர்கள் சம்மதித்தது, அவர்கள் கேட்ட அளவிற்கும் அதிகமாக சீர் செய்தது என எல்லாமும் அவளுக்கு தெரியுமே.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.