(Reading time: 16 - 31 minutes)

வள் சூடு கண்ட பூனையாக இருக்க இன்னொருவனை திருமணம் செய்து மறுபடியும் துன்புற அவளுக்கு சிறிதேனும் விருப்பமில்லை. அவனைக் கொஞ்ச கொஞ்சமாக தவிர்க்க ஆரம்பித்தாள். உரிய வாய்ப்பு வரவே செய்துக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு விபரம் தெரிவிக்காமலேயே வேறு வேலையில் சேர்ந்தாள். இனிமேல் அவன் என்னை நினைக்க மாட்டான், அவன் மிக நல்லவன் அவனுக்கு என்னை விட மிகப் பொருத்தமாக நல்ல பெண் மனைவியாக அமையட்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

கணேஷோ விடாக் கொண்டனாக இருந்தான் என்று அவளுக்கு தெரியாமல் போயிற்று. ஒரு நாள் அவள் வேலையிலிருந்து திரும்புகையில் அவளுடைய வீட்டில் பெற்றோர்கள் உபசரிப்பில் புன்னகை முகமாக, அருகில் சுவர்ணாவை வைத்துக் கொண்டு , அவளிடம் விளையாடியவனாக இருந்தான். அவனைப் பார்த்ததும் அவளுக்கு திகைப்பாக ஆயிற்று.

இதோ இப்போது திருமணமும் ஆயிற்று. இனி என்ன என்று அவளுக்கு புரியவில்லை. அவன் தாலி கட்டியாயிற்று அவன் சொல்படிதானே நடந்துக் கொள்ள வேண்டும் ? பெண்ணுக்கு விதித்தது அவ்வளவு தான் போலும்.

சில நாட்கள் முன்பு அம்மா சொன்னது மனதில் இடறிற்று,

“இங்க பாரும்மா அரசி, நீ தனியாகவே இருந்திடுவியோன்னு நான் கவலைப் படாத நாளில்லை. ஆனா, மாப்பிள்ளை ரொம்ப நல்லவர். எதைப் பத்தியும் நீங்க கவலைப் படாதீங்க, எல்லாம் நான் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டாரு. சுவர்ணா இருக்க அவர் உன்னை கல்யானம் செஞ்சுக் கிட்டதே பெரிய விஷயம். அவர் மனச கொஞ்ச கொஞ்சமாதான் மாத்த முடியும் அதனால முதலில உன் மகளை இங்க எங்கக் கிட்ட விட்டுட்டு போறதானாலும் நீ ஒன்னும் வருத்தப் படக் கூடாது சரியா….கொஞ்ச கொஞ்சமா சேர்த்துக்குவார்” என்றதும் மனது திக்கென்றானது,

சுவர்ணாவை விட்டு விட்டு நானா? அவள் தானே எனக்கு எல்லாமே…. மனம் பாறாங்கல்லாக கனத்தது. இனி ஒரு ஜென்மம் இருந்தால் எனக்கு மட்டும் பெண் ஜென்மம் வேண்டாம் கடவுளே என்று மனதிற்குள் புலம்பினாள், எல்லாம் பெரியவர்களையே பேச விட்டது எவ்வளவு தப்பு என்று மருகினாள்.

ரிசப்ஷனிற்கு புறப்பட வைத்தார்கள். கணவனோடு மேடை ஏறுகையில் அவ்வளவாக ஆரவாரம். அவனுக்கு ஏராளமான நண்பர்கள், பெரிய குடும்பம் வேறு. நல்ல செல்வ வளமிக்கவர்கள் போல தோன்றினார்கள். இவளுக்கு உள்ளூர கூச்சமாக இருந்தது. போயும் போயும் ஒரு டிவோர்ஸியை அதிலும் ஒரு பிள்ளைக்கு அம்மாவை போய் திருமணம் செய்து இருக்கிறாயே என்று யாரும் கேட்டால் அங்கேயே அவள் உள்ளூர மரித்துப் போய் விடுவாளே?!.

ஆனால் அங்கு ஒருவர் கூட அப்படி அவளிடம் நடந்துக் கொள்ளவில்லை. கணேஷின் இதமான கைப் பிடியில் அவளுடைய பயமும் சற்று மறைந்தார்ப் போல இருந்தது. இன்னமும் அவனை ஏறிட்டுப் பார்க்க அவளுக்கு துணிவு வரவில்லை.

தன்னுடைய முதல் திருமண நிகழ்வுகள் கேளாமலேயே அவள் மண்டைக்குள் ரீவைண்ட் ஆகி அவளை மிரட்டிக் கொண்டு இருந்தது. சட்டென்று கூட்டத்தில் ஆரவாரம். யாரோ மிக முக்கியமானவர் வருகைப் போலும் என்று அவள் ஏறிட்டுப் பார்த்தாள். அவள் கண்களையே அவளால் நம்ப முடியவில்லை.

தங்க தாரகையாக உடை அணிந்து முகம் முழுக்க மகிழ்ச்சியோடு வருவது சுவர்ணாவா……..என் செல்லமே, எண்ணிக் கொண்டு இருக்கும் போதே அவள் மேடையேறி வர, தன்னிடம் தான் மகள் வரப் போகிறாள் என்று எண்ணி ஆவலாய் அரசி பார்த்துக் கொண்டிருக்க, “டாடி” என கணேஷிடம் போய் நின்றாள் அவள். முதன் முறையாக ஏமாற்றத்திலும் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று அவள் உணர்ந்த தருணம் அது.

தன்னை எத்தனையோ மாதங்கள் கழித்து அரசி ஏறிடுவதைப் பார்த்த கணேஷ், அவள் அப்படிப் பார்க்கும் போது அவளிடம் மனம் விட்டுப் பேச வேண்டும் என்கின்ற எண்ணத்தை செயல் படுத்தினான்.

“ஏண்டா நீ என்னை விட்டுட்டு போயிட்டா நானும் போயிடுவேன்னு நினைச்சியா. உன் அட்ரஸை தேடிக் கண்டு பிடிக்க மாட்டேன்னு நினைச்சியா?

நான் உன்னைக் காதலிக்கிறேன்னா நீ எந்த நிலையில இருந்தாலும் காதலிக்கணும் அது தானே உண்மையான காதல். உன் குழந்தை எனக்கும் குழந்தை தான். என்ன நமக்கு ரொம்ப வருஷம் முன்பே கல்யாணம் ஆயிடுச்சின்னு மனசுக்குள்ள நான் ஏற்கெனவே எண்ணிக் கொள்ள ஆரம்பிச்சுட்டேன். இதுவென்ன பெரிய விஷயமா என்ன?”

என்றவனின் அன்பான புன்னகை முதன் முறையாக அவள் உள்ளத்தில் காதலின் மென் சாரலாக இறங்கி அவளுடைய மனக் காயங்களை ஒவ்வொன்றாக ஆற்றத் தொடங்கியது.

ரிஷப்ஷனின் ஆட்கள் வர ஆரம்பிக்க, மீட் மை வைஃப் அரசி & மை டாட்டர் சுவர்ணா என்று அறிமுகப் படுத்திக் கொண்டிருந்தான் கணேஷ் பெருமிதமாக.

உந்தன் நிஜமாய் நானிருக்க

நீ

நிழலின் வடுவால்

துடித்தாய் கண்ணே

 

உன் மழையாய் நான் இருக்க

நீ வறண்ட பாலையில்

தவித்தாய் பெண்ணே

 

உன் மலர் வனமாய் நானிருக்க

சருகாய் உனையே

உருக்காதே பெண்ணே

 

உந்தன் நிழலும் நிஜமுமாய்

நான் மட்டும் ஆகிட

 

எந்தன் கையைச் சேர்ந்து

தோளில் சாய்ந்து

 

நடந்திடுவாயோ - என் வாழ்வில்

கலந்திடுவாயோ கண்ணே

This is entry #16 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க...

எழுத்தாளர் - ஜான்சி

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.