(Reading time: 16 - 31 minutes)

ரம்பத்தில் அவன் காட்டிய முகம் வேறாகவும், பிறகு நாட்பட , நாட்பட அவன் காட்டிய முகம் வேறாகவும் இருக்க, தங்கள் வீட்டில் இளவரசியாக வளர்ந்த அந்த மென்மையான மனம் படைத்த அரசி மருண்டேப் போனாள். இந்திரனோ இரவில் வெகு நேரம் கழித்து வருவது, வந்தவுடனே வலுக்கட்டாயமாக அவளுடைய பெற்றோர்களை இழிவாகப் பேசி அவன் சண்டைகள் இழுப்பது என்றே இருந்தா. அவன் ஏன் இப்படி நடந்துக் கொள்கின்றான்? அதன் காரணம் என்ன ? என்றே புரியாத நிலை அவளுக்கு. இப்போதோ இந்திரனின் குடியின் அளவும் மிதமிஞ்சிப் போய்க் கொண்டு இருந்தது.

அவனுடையப் பெற்றோர் இதெல்லாம் நமக்கு சாதாரணமப்பா என்று நடந்துக் கொண்ட விதத்தில் அரசி இன்னமுமாக துவண்டுப் போனாள்.

“மாமா, அவங்க குடிச்சுட்டு எங்கேயோ விழுந்துட்டு வந்துருக்காங்க போல, துணியெல்லாம் ஈரமா இருக்கு அப்படியே தரையில படுத்திட்டாங்க” என இப்படி ஒரு சம்பவத்தை ஒரு போதும் தம் வீட்டில் கண்டிராததால் வெட்கமும், அவமானமுமாக உணர்ந்து தயங்கி தயங்கி அவள் சொல்ல,

“ அப்படியா, அதுக்கென்ன நீ அவன் துணியை கழற்று, வேறு துணியை மாற்றி எழுப்பி கட்டில்ல படுக்க வை” என்று கூலாக சொல்லி விட்டு பத்திரிக்கையில் ஆழ்ந்து விட்டார் இந்திரனின் தகப்பனார். அவர் மட்டுமா மாமியாருக்கும் நாத்தனாருக்கும் கூட எங்கள் சுமையை உன் தலையில் சுமத்தி விட்டோம் இனி உன் பாடு என்கின்ற முகபாவனையே காணக் கிடைக்க, வேறு வழியே இல்லாமல் அவனை விட வலிமையில் குறைந்தவளாக இருந்துக் கொண்டு உணர்வற்றவனாக கிடப்பவனின் உடையை மாற்றும் முன்பு அவளுக்கு அரை உயிர் போனது.

வயிற்றில் சில மாத சிசு வேறு அவளை ஏற்கெனவே சோர்வுக்கு உள்ளாக்கிக் கொண்டு இருந்தது. மாதங்கள் கடந்தன. கணவனின் அன்பும் இல்லை , கணவன் வீட்டினரின் ஆதரவும் இல்லை. பெற்றோரிடம் எல்லாம் சொல்லி அழ அவளுக்கு முடியவில்லை. சிறகடித்துப் பறந்த பறவையை யாரோ சிறகுகளை பிய்த்துப் போட்ட உணர்வு அவளுக்குள்.

ஏதோ ஒன்று கடவுளுக்கு அஞ்சாத மனிதர்கள் இருந்த அந்த குடும்பத்தில் ஓரிரண்டு கடவுளர் படங்கள் சுவற்றில் மாட்டி இருக்க, அந்தக் கடவுளிடமும் என்ன வேண்டுவது என்றேத் தெரியாமல் இடை விடாமல் அவள் வேண்டிக் கொண்டு இருப்பாள்.

முழுமையாக சொல்லாவிடினும் கொஞ்சம் கொஞ்சமாக அம்மாவிடம் பகிர்ந்துக் கொள்ளுவாள். தொலைவிலுள்ளவர்கள் அறியாவண்ணம் சிரித்துக் கொண்டிருப்பது போல, மகிழ்வாக இருப்பது போல, பொய் வேடம் போட்டு போனில் பேசக் கற்றுக் கொண்டிருந்தாள் அவள்.

அம்மாச் சொல்லும் அனேக உத்திகளைக் கையாண்டுப் பார்த்தும் சரிவரவில்லை. இரவில் தள்ளாடி வருகின்றவனுக்கு சாதம் பரிமாறினால் அந்த இரவிலும்

“உனக்கு சாதம் பறிமாறக் கூடத் தெரியவில்லை” என்று ஏதாகிலும் காரணம் தேடி சிறுமைப் படுத்துவான். தம்ளரில் பால் கொடுத்தால்,

“நீ ஒருவேளை இதில் விஷம் கலந்து இருக்கிறாயோ?” என்று அவளை துள்ள துடிக்க வைப்பான். அவனை இன்னும் அவள் நேசித்துக் கொண்டு இருந்தாள். அவளுடைய அன்பு அவனை மாற்றும் என்று நம்பிக்கையை கை விடாமல் இருந்தாள். அவளுடைய தாயின் அறிவுரைகள் அவளை அவ்வாறு நம்பிக்கை கொள்ள வைத்தது. அதையும் ஒரு நாள் அவன் பொய்யாக்கி விட்டான்.

ன்றிரவு வழக்கம் போல கணவன் வரும் வரையில் தனக்கு பயமாக இருக்க கூடாதென்று தன்னுடைய அறையின் டியூப் லைட்டுகளை முழுவதுமாக எறிய விட்டு கணவன் வரும் வரை தூங்காமல் காத்திருந்தவள், கையில் இருந்த ஆன்மீக நூலொன்றை தன்னுடைய வயிற்றிலிருக்கும் மகவுக்கு நல்ல கருத்துக்களை மனதில் பதிப்பிக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு வாசித்துக் கொண்டிருக்க அறை வாயிலில் நிழலாடியது.

வந்தது அவள் கணவன் அல்ல, அவனுடைய தம்பி. அப்போதும் அவள் அதை தவறாக எடுத்துக் கொண்டாளில்லை. அவர்களது அறையில் பொதுவான துணிமணிகள் எடுக்க அவன் எப்போதும் வருவதும் போவதும் உண்டே. தன்னுடைய அண்ணன் இரவு 2 மணி வரையிலும் வீட்டிற்கு வரவில்லை , அறை திறந்து தானே இருக்கிறது என ஏதாகிலும் எடுத்துச் செல்ல வந்திருப்பான் என எண்ணினாள். பக்கத்து அறையில் தாயும், தங்கையும் தூங்கியிருக்க அவன் தவறான எண்ணத்தில் அங்கே வந்திருக்க முடியாது என்றே எண்ணினாள்.

பத்து நிமிடமளவு அவன் வாயிலிலேயே நின்றான். இவள் தன்னுடைய புத்தகத்தில் ஆழ்ந்து போயிருந்தாள். எப்போது கண் அயர்ந்தாளோ தெரியவில்லை. இரவு முழுவதும் கணவன் வீட்டிற்கு வந்திருக்கவில்லை. காரணமும் எதுவும் தெரியவில்லை. காலை 11 மணியளவில் தன்னுடைய வேலைகள் எல்லாவற்றையும் முடித்து விட்டு அமர்ந்திருந்த போது கணவன் வீட்டிற்குள் நுழைவதைப் பார்க்கின்றாள்.

“சரி உள்ளே வந்ததும் கேட்போம், எதைக் கேட்டாலும் அனாவசியமாக அவன் சண்டைக்கு வரப் போவது உறுதி. இரவு சண்டைப் போடுவது வேறு, இப்போது எல்லோர் முன்பும் சண்டையிட்டு ஏற்கெனவே தன்னை பொருட்டாக மதிக்காத வீட்டினர் முன் தன்னுடைய மதிப்பை தாழ்த்துவதா என்று பொறுமைக் காக்க அவனோ அவர்கள் அறைக்குள் வருவதை தவிர்த்து அம்மா மற்றும், தங்கை உபயோகிக்கும் அறைக்குள் நுழைகின்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.