(Reading time: 16 - 31 minutes)

ங்கே என்னப் பேசினாலும் இங்கு கேட்கும் தான். கணவன் காலையில் வந்ததும் தன்னிடம் வராமல் அங்கு செல்வது என்னவோப் போல மனதைப் பிசைகின்றது. ஒரு தவறும் செய்யாமல் துன்பம் அனுபவிப்பது போல, யாருக்குமே வேண்டாதவளாகி விட்டது போல மனம் துவண்டுப் போகின்றது. இதற்கு அவன் திருமணம் செய்யாமல் இருந்திருக்க வேண்டியது தானே என்று எண்ணியவள் உணர்ச்சிகளற்றவளாகி கண்டும் காணாததும் போல இருக்கின்றாள்.

சற்று நேரத்தில் இந்திரன் தாயின் அறையில் தூங்கி விட்டான் போலும் அவன் தம்பியிடம் அன்னைக் கேட்கின்றாள்?

“என்னாச்சு இவன் ராத்திரி எங்க இருந்தான்?”

அடுத்துக் கேட்ட பதிலால் அவள் தலையில் இடி விழுந்தது போலாயிற்று.

“நாங்க ரெண்டு பேரும் நம்ம கார்ல தான் வந்தோம், அவன் கார்ல கீழ பார்க்கிங்க்லயே தூங்கி விட்டான்” என்று,

அப்படியென்றால் நேற்று இரவு நடந்தது சீதைக்கு நிகழ்ந்த தீக்குளிப்புக்கு நிகரான சம்பவம். அவன் தன் அண்ணியின் முன் நின்ற 10 நிமிடமும் அண்ணன் சொல்லி செய்தது. கணவனே தன் தம்பியை விட்டு மனைவியை சோதிக்கும் அளவும் அவள் தரமிழந்து போய் விட்டாளோ? மனம் கொந்தளித்தது.

அவனுடைய பிள்ளையை வயிற்றில் சுமந்துக் கொண்டிருப்பவள் மீது அவனுக்கு இவ்வளவு தானா நம்பிக்கை. மனம் துவண்டுப் போனவள் நோயாகி படுக்கையில் விழ, உங்கள் மகளை கொண்டு போய் நலமாக்கி திரும்ப அனுப்புங்கள் என்று அவளை தட்டிக் கழித்த மாமியார் வீடு.

கணவனுக்காகவென்று தூங்காமல் விழித்திருந்த பல நாட்கள், மாதங்கள், தனிமையில் வாடி வதங்கிய மன நிலை, வயிற்றுப் பிள்ளைச் சுமக்கும் தருணம் ஏற்படும் சோர்வுகள், கணவனிடம் வெளிப்பட்ட இடைவிடாத புறக்கணிப்பு, கணவன் குடும்பத்தினரின் வெறுப்பு, கடைசியாக த்ன்னுடைய ஒழுக்கத்தை நம்பாத கணவனின் செயல் என்று உடலோடு மன நிலையும் பாதிக்க பல்வேறு முயற்சிகள் செய்து அவளை ஒருவாறு மீட்டெடுத்தனர் அவள் குடும்பத்தினர்.

அவ்ளே விருப்பப் பட்டாலும் மறுபடியும் அவளை அந்த நரகத்தில் கொண்டு போய் தள்ள அவள் பெற்றோர் விரும்பவில்லை. அவளோ திரும்பச் செல்வது குறித்து பேசும் போதே நடுங்கினாள். குழந்தையும் பிறந்தது, பல்வேறு பிரச்சினைகள், மிரட்டல்கள் அவற்றிற்கு இடையே தன்னுடைய குழந்தையை பெற்றோரிடமே இருந்து வளர்த்து பெரும் போராட்டத்திற்கு இடையே இந்திரனிடமிருந்து விவாகரத்து பெருவதற்குள் ஆனது ஐந்து ஆறு ஆண்டுகள். அவளிடமிருந்து விவாகரத்து கிடைத்த சில மாதங்களிலேயே இந்திரன் மறுதிருமணம் செய்துக் கொண்டான். என்னச் செய்வது பலர் வாழ்வது ஊர் பெருமைக்காகவே அல்லவா?

ப்போது அவ்ளிடம் சற்று தன்னம்பிக்கை மீண்டிருந்தது. ஓரளவு சுமாரான ஒரு வேலையில் சேர்ந்திருந்தாள், மேலும் படிக்க முன்பு ஆதரவு தெரிவிக்காத அவ்ள் பெற்றோர்கள் அவள் தன்னுடைய சிந்தனைகளிலிருந்து வெளிவர வேண்டுமென்பதற்காகவே அவளைப் படிக்க உற்சாகப் படுத்தினர். சின்னக் கண்மணியாக திகழும் அவளுடையச் செல்ல மகள் சுவர்ணா அவளுக்கு மிகப் பெரும் ஆறுதல் தந்துக் கொண்டிருந்தாள்.

தான் அனுபவித்த நரக வேதனையிலிருந்து இந்த அளவிற்கு வெளிவந்ததேப் போதும் என்று எண்ணத் தொடங்கியிருந்தாள். சுவர்ணா , அவளுடைய பெற்றோர்கள் இவர்கள் மட்டும் அவளுக்கு போதும் என்ற நிறைவில் இருந்தாள். இவ்வுலகில் வாழ்வில் அத்தனையும் இருந்தும் நிறைவுக் கொள்ளாதவரும், ஒன்றுமில்லாமையிலும் நிறைவாக இருப்பவரும் நாம் பார்த்திருப்போமல்லவா? அரசி இரண்டாம் வகையில் சேர்ந்தாள் போலும்.

அலுவலகத்தில் எங்கிலும் தன்னுடைய உண்மையான திருமண விபரங்களைக் குறித்து அவள் குறிப்பிடவில்லை. கணவன் இல்லாதவள் என்று தன்னை யாரும் தவறாக அணுகி விடுவார்களோ மனப் பயம், உண்மையை எங்கிலும் சொல்ல நேர்ந்து விடுமோ என்ற தீராத மனக் காயம் ஆகியவைதான் அதற்குக் காரணம்.

வெளியுலகில் கலகலப்பான முகமூடி அணிந்து மென்மையாகச் சிரித்துப் பேச, பிறரோடு நட்புறவாட கற்றிருந்தாள். ஆனால், யாரையும் ஒரு எல்லைக்கு அப்பால் நிறுத்தி விடுவாள்.

ஆனால் ஏனோ இந்த கணேஷை மட்டும் அவளால் அவ்வாறு நிறுத்த முடியாமல் போயிற்று. தனக்கென சின்னதாக சொந்தமாக ஆஃபீஸ் வைத்துக் கொண்டு கம்ப்யூட்டர் சம்பந்தமான எந்த ஒரு தேவை இருந்தாலும் வந்து சரி செய்து தருகின்ற வேலை அவனது வேலையாகும். அரசி பணி புரியும் அலுவலகத்திற்கு வரும் போதெல்லாம் அவளிடம் இனிமையாக பேசுவான். ஒரு சில நேரம் ஆஃபீஸ் விடும் நேரம் கூடவே வந்து வழி நெடுக சுவாரசியமாக பேசிக் கொண்டே வருவான், அடிக்கடி சிரிக்க வைப்பான்.

அவனோடு பேசுவது அவளுக்கும் இனிமையாகத்தான் இருந்தது அவன் நன்பணாக இருந்த வரைக்கும் ஆனால் அவனுடனான பேச்சு வளர்ந்த விதம், அவன் அவளுக்கு அடிக்கடி செய்யும் போன் கால்கள், மேலும் அவளை வற்புறுத்தி தன்னுடைய ஆஃபீஸுக்கு அழைத்துச் சென்று காட்டிய போது அவன் உரிமையாக நடத்திய விதம் கண்டு அவள் மருண்டேப் போனாள்.

அவனுடைய நோக்கத்தை அவன் இலைமறைக் காயாக உணர்த்திய போது, காதலைச் சொல்லாமல் சொல்லிய போது அவளுக்கு என்னச் செய்வதென்றேத் தெரியவில்லை. ஏனென்றால், அவனுக்கு இவளைப் பற்றி ஒன்றுமேத் தெரியாதே? தெரிந்தால் இவளை பொய்காரியாக சித்தரிக்கக் கூடும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.