(Reading time: 10 - 20 minutes)

2017 போட்டி சிறுகதை 18 - நம்பிக்கைப் பூக்கள் - ஆர்த்தி R

This is entry #18 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை – கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க

எழுத்தாளர் - ஆர்த்தி R

College Days

நம்பிக்கை என்னும் பூக்கள் பூக்க

நாள்பட காத்திருந்தேன்!!

மனதின் எண்ணங்கள் என்னை

மடியச் செய்யும் போதும்

காத்திருந்தேன்!!!

நம்பிக்கை என்னும் பூக்கள் பூக்க!!!!

ழைய மாணவர்கள் தினத்தை ஆர்ப்பாட்டத்துடன் அனுபவித்துக் கொண்டிருந்தவர்களிடையே திடீரென ஒரு அமைதி... அந்த விசாலமான அறையின் வாசலின் நின்ற உருவத்தின் வசீகரமும், கம்பீரமும் அவர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருந்தது...

மெல்ல அமைதியை கிழித்துக் கொண்டு ஒரு குரல் ஒலித்தது...

"இது யாருன்னு தெரியலையா? எண்ணெய் வச்சு சப்புன்னு வாரின முடியோட, நீள மூக்கோட இருந்த நம்ம சுப்பிரமணி தான்" அப்படின்னு சொன்னான் வினித்.

வினித் “என்னடா சொல்ற ?? நம்ம சுப்பிரமணியா இது இப்படி ஆளே மாறிட்டான் ”அப்படின்னு சொன்னான் சூர்யா..

இவங்க கத்தின கத்தல்ல அவங்க செட் எல்லாரும் சுப்பிரமணிய சுத்தி கூடிட்டாங்க........ அப்ப டேய் மணின்னு கத்திகிட்டே ஒருத்தன் வந்து அவன கட்டிபுடிச்சிகிட்டான் .......அப்பறம் அவன் முதுகுலையே நாலு சாத்து சாத்தினான்....

”டேய் பொறுமையா அடிடா விக்கி வலிகுதுல்ல “ என அவனைத் தன் கைபிடியில் வெச்சுகிட்டே சொன்னான் மணி.......

“வலிக்கட்டும் டா நல்லா வலிக்ககட்டும் நீ விட்டுட்டுப் போன நாள்ளேந்து உன்ன தேடிதேடியே வலிக்குதுடா!!! உன்னாலாம் நிக்க வெச்சு சுடனும்டா எப்படி டா இப்படி மனுசு வந்துச்சு?? எங்க எல்லாரையும் தவிக்க விட்டுட்டு எங்க தாண்ட போன ??? வித்யா கிட்ட கூட சொல்லாம போய்ட்டியேடா!!! அவ எப்படி துடிச்சு போய்ட்டா தெரியுமா??? “ என கேட்டவனின் கண்களிலும் மணியின் கண்களிலும் பிரிவின் வலியால் கண்ணீர் வழிந்தது.........

அப்போது அவன சுத்தி இருந்ததுல ஒருத்தன் டேய் பொறுமையா ஒரொரு கேள்வியா கேளுடா நீ கேக்கறத பாத்து திரும்பி ஓடிர போறன்னு சொல்ல எல்லார் முகத்திலும் சிரிப்பு வந்துச்சு................( என்ன எல்லாரும் நண்பன் படத்தில வந்த மாதிரி ஆள் மாறாட்டமான்னு யோசிக்கிறிங்களா?? அதான் இல்ல அப்பனா என்னனு படிச்சு தெரிஞ்சுக்கோங்க ......ஹா ஹா)

மணி அவன யாரோ கூப்பிடற மாதிரி இருக்கேன்னு திரும்பி பாக்க கூட்டத்துக்கு ஓரத்துல அவ நின்னுட்டு இருந்தா.........அவ யாருன்னு கேக்கறிங்களா??? அவ தான் நம்ம கதையோட ஹீரோயின்.....அவளோட முகத்தில மணிய பாத்த சந்தோசம் இருந்தாலும் அவளோட கண்கள் அவன பாத்து கேள்விகள் எழுப்பின

“ ஏன்டா என்கிட்ட கூட சொல்லாம போனே ?? அவ்ளோதானா நா உனக்கு ?? எப்படி துடிச்சிற்பேன் நீ எங்க போனன்னு தெரியாம ஏன் இப்படி பண்ணின?? “ அப்படின்னு அவன் மனசாட்சிய கேக்கறமாதிரி இருத்துச்சு..........

சொர்கமாய் இருந்த என் பொழுதுகள் – நீ

எனை விட்டுப் பிரிந்த போது

நரகமாய் மாறியதேன்!!!!

 ”சாரி வித்யா நா பண்ணது தப்புதான் ஆனா அதுக்கு ரீசன் இருக்கு என்ன மன்னிச்சிடுன்னு” அவன் கண்கள் அவளுக்கு பதில் சொல்ல “டேய் போதும்டா கண்ணாலயே கவிதை சொன்னது” அப்படின்னு அவன் உயிர் நண்பன் விக்கி அவன் காதுல சொல்ல “நீ இன்னும் இந்த கரடி வேலை பாக்கறத நிறுத்தவே இல்லன்னு“ சொன்னான் மணி........”சரி என்னதான்டா ஆச்சு ஒரு நாள் இல்ல ரெண்டு நாள் இல்ல நீ நாலு வருஷமா எங்கள விட்டு எங்கடா இருந்த ?? என்னதான் ஆச்சு சொல்லு“ என கேட்டான் விக்கி என்கிற விக்னேஷ்.....

(நாமளும் கொசு வர்த்தி சுருள சுத்த வைப்போம்)

ட்டு வருடங்களுக்கு முன்பு

அது ஒரு பணக்காரர்களுக்காண கல்லுரி...எதிலும் ஆடம்பரம்....அங்கு படிக்கும் மாணவர்கள் அனைவரும் பெரிய பணக்காரர்கள்......அன்று கல்லூரியின் முதல் நாள்...

”டேய் நம்ம freshers பார்ட்டிக்கு ரெடி பண்ணிட்டியா??? இந்த வருஷமாவது நல்ல பிகர்ஸ் வராங்கலான்னு பாக்கலாம்.........” அப்படின்னு சொன்னான் சத்யபிரகாஷ் பெரிய அரசியல்’ தலையோட பையன்.....அவன் கல்லூரிக்கு வரதே பொழுது போகாம தான்..இவன் என்ன இந்த கல்லூரில படிக்கிற முக்காவாசி பேரு சும்மா பொழுது போகறதுக்கு இல்லனா பேருக்கு பின்னாடி ஒரு டிகிரி வாங்கறதுக்கு தான் வராங்க............ கால் வாசி பேரு படிப்புதான் எல்லாமேன்னு நினைக்கிற கூட்டம்...........

”டேய் அங்க பாரு டா அய்யோ!! இப்படி ஒரு பொண்ண எங்கயுமே பாத்தது இல்லடான்னு” சொன்னான் சத்யபிரகாஷ் பக்கத்துல நின்னுட்டு இருந்த கோபி....

“ஏய் ஆமாம்டா பிகர் சூப்பரா இருக்கு இப்பயே சொல்லிட்டேன் அவ என் ஆளு நா மட்டும் தான் கலாய்ப்பேன்” என சொல்லிட்டு தலைல ஸ்டைலா கைய வைச்சான் பிரகாஷ்.......

”ஏய் எதாவது பெரிய இடத்து பொண்ணா இருக்க போகுதுடான்னு” சொன்னான் அவங்க குரூப்ல இருக்கறதுலயே பயந்தாங்குளி ரமேஷ்........

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.