(Reading time: 10 - 20 minutes)

தோ இப்பவே வரேன்னு “ சொல்லிட்டு கிளம்பிட்டேன்.........

ஆனா நா போறதுக்குள்ள எல்லாமே முடிஞ்சு போச்சு..எல்லாத்தையும் இடிச்சி தள்ளிட்டாங்க......ஒருத்தர் கூட தட்டிக் கேக்கல..போலீஸ்லையும் பெரிய ஆளுங்கன்னு சொல்லி எதுவும் கேக்கல....அப்பதான் நா I.P.S ஆகனுங்கற வெறி அதிகம் ஆச்சு.......25௦ பேர் வாழ்க்கை நடுத்தெருவுக்கு வந்துருச்சு.எங்க ஐயாவும் இந்த அதிர்ச்சில இறந்துட்டாரு........எனக்கு என்ன பண்றதுன்னே தெரில.......பக்கத்தில இருந்தவங்க மனிதாபிமானம் பாத்து கொஞ்சம் இடம் கொடுத்தாங்க.....அதுல எத்தன பேர் இருக்க முடியும்?? அப்பறம் ஒரே போரரட்டம் தான் ..கோர்ட்ல கேஸ் போட்டு போராடி ஒரு இடத்த நாங்க வாங்கறதுக்குள்ள ஒரு வருஷம் ஓடி போய்டுச்சு.......எனக்கு அப்ப எதை பத்தியும் சிந்திக்க முடில..... அந்த பிரச்சனைக்கு அப்பறம் எங்க காப்பகதுக்கு நிறைய உதவிகள் கிடைக்க ஆரம்பிச்சுது.........காப்பகத்தை நடத்துற பொறுப்பும் எனக்கு வந்துருச்சு......ஐயாவோட பொண்ணு நா கொஞ்ச நாள் பாத்துகறேன்னு சொன்னா.நா அந்த டைம் யூஸ் பண்ணி படிக்க ஆரம்பிச்சேன்..வெறித்தனமா படிச்சேன்.2 வருஷம் 3-வது நேர்முக தேர்வு வரைக்கும் வந்து தோத்துட்டேன்..இந்த வருஷம் தான் எனக்கு I.P.S தேர்வானதா லெட்டர் வந்தது........ட்ரைனிங் முடிச்சிட்டு வந்தப்ப தான் பழைய மாணவர்கள் நிகழ்ச்சி நடக்க போறதா நியூஸ்பேப்பர்ல வந்தது.அதைப் பாத்துட்டு இங்கதான் வரேன்னு” சொன்னான்............

தாயின் கருவில் உதிக்கும்

போராட்டம் –பூமித்

தாயின் மடிசாயும் வரைத்

தொடர்வதேனோ!!!

வன் சொன்னதைக் கேட்ட எல்லார் கண்ணிலும் தண்ணி வந்துடுச்சு......எவ்ளோ போராட்டம் இவன் வயசுக்கு மீறி போராடிட்டான்........ அப்ப

“ சூப்பர்டா I.P.S ஆகிட்ட .எல்லாருக்கும் பார்ட்டி கொடுடான்னு“ விக்கி கேக்க...

”அதை விட்டா உனக்கு வேற நினைப்பே கிடையாதுன்னு” சொல்லிட்டே அவன கட்டிபுடிச்சுகிட்டான்......

“டேய்!! அங்க பாருடா பொறாமைல கண்ணு சிவக்குது போய் அங்க கவனிடான்னு“ வித்யா பக்கம் தள்ளிவிட்டான் விக்கி............

வித்யாவும் மணியும் பக்கத்துல இருக்க பார்க்ல உக்காந்துருந்தாங்க.........

”நா பண்ணதுல எவ்ளோதான் நியாயம் இருந்தாலும் உங்கள் கிட்ட சொல்லாம போனது தப்புதான்....என்ன மன்னிபியா?? மன்னிச்சு என்ன ஏத்துப்பியான்னு மண்டிபோட்டு I LOVE YOU டியர்ன்னு” கேக்க .........

அதை கேட்ட வித்யாவின் கண்கள் கண்ணிருடன் அவனைத் தழுவிக் கொண்டன.......அப்ப விக்கி

“டேய் பப்ளிக் பப்ளிக்ன்னு சொல்ல “

இன்னும் கரடி வேலைதான்டா பாக்கிற நீன்னு சொல்லிகிட்டே அவன துரத்தினான்....

வித்யாவின் முகம் வெக்கத்திலும்,நீண்ட நாள் கண்ட கனவு நினைவானதிலும் பூத்து குலுங்கிய மலர்களைப் போல் மலர்ந்து இருந்தது.................

கடலின் தாக்கம்

அலையினிலே

உன்னில் தாக்கம்

என்னிலே!!!

கனவுகள் எல்லாருக்கும் இருக்கும்..ஆனா அதை நிஜமா மாத்திக்கிற திறமை சில பேருக்கு தான் இருக்கும்.அப்படி தான் கண்ட கனவை போராடி வெற்றி பெற்ற நம்ம மணியும் , பொறுமையோட அவனை கைப்பிடிச்ச வித்யாவும் நீண்ட நாள் எல்லா வளமும் பெற்று வாழணும்னு வாழ்த்திட்டு நாம இடத்தை காலி பண்ணிரலாம் ...............

கதை மற்றும் கவிதை எப்படி இருக்குன்னு படிச்சிட்டு சொல்லுங்க

This is entry #18 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை – கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க

எழுத்தாளர் - ஆர்த்தி R

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.