(Reading time: 10 - 20 minutes)

டேய் பயந்தாங்குளி நடந்து வரத பாத்தா மிடில் கிளாஸ் போலத் தான் தெரியுது!! அப்படியே பெரிய ஆள் நாளும் நம்ம பிரகாஷ விடவா பாத்துக்கலாம் கூப்பிடுடா கவனிச்சிரலாம்ன்னு”சொல்லிட்டு கூப்பிட்டான் கோபி...

“ஏய் இங்க வா 1st இயரா ??”

“ஆமாண்ணா 1st இயர் “ என சொன்ன வித்யாவிடம்

“கொஞ்சம் கூட பயம் இல்ல..........என்னது அண்ணாவா பிச்சு புடுவேன் பிச்சு ஒழுங்கா சீனியர்னு கூப்பிடு கொஞ்சமாது பயம் இருக்கான்னு” சத்யபிரகாஷ் கத்த..........

இது ஒரு காமெடி பீஸ்னு மனசுகுள்ளயே கவுன்ட்டர் கொடுத்தா வித்யா.........

”டேய் இங்க பாருடா யார் வரான்னு !!! “ கோபி சொல்ல எல்லாரும் திரும்பி பாத்தாங்க.......அங்கே எண்ணெய் வெச்ச தலையோட வழிச்சு வாரிட்டு நெத்தில விபூதிய வெச்சுகிட்டு ஒருத்தன் வந்துட்டு இருந்தான்.........

“டேய்!! இங்க வா என்ன 1st இயரா??” இந்த அண்ணாக்கு இத விட்டா வேற கேள்வியே தெரியாதோன்னு நினைச்சா வித்யா .........

”என்னடா?? வர வர இந்த கல்லூரிக்கு யார் யார் வரதுனே தெரியாம போச்சே!! எவன் எவனோ வரான்.....”அப்படின்னு சத்யபிரகாஷ் அலுத்துக்க.....

”அவன்தான்டா இந்த வாட்டி statefirst டிவி சேனல்ல பாக்கலையா” என அவன் காதுல ஓத .........ஓ நீ அந்த கேட்டகரியான்னு சொல்லிட்டு அவன இளக்காரமா ஒரு பார்வை பாத்தான் சத்யபிரகாஷ்............அப்ப கிளாஸ்க்கு டைம் ஆக எல்லாரும் கிளம்பிட்டாங்க......

வித்யா ஆமாம்ல இந்த சுப்பிரமணி தானே statefirst ஆனா இவன் ஏன் இங்க வரான்னு யோசிச்சுகிட்டே அவளோட B.A ஹிஸ்டரி வகுப்புக்குள்ள நுழைஞ்சா...........பின்னாடியே நுழைஞ்ச மணிய பாத்து எல்லாரும் சிரிக்க.....கிளாஸ் ஆரம்பிச்சுது.....எல்லாரையும் இன்ட்ரோ கொடுக்க சொன்னாங்க .......மணி எழுந்து நா இந்த காப்பகதுலேந்து வரேன்னு சொன்னதும் எல்லாரும் திருப்பி சிரிச்சாங்க........அப்ப அவங்க கிளாஸ் ப்ரோபசர்

இவன் யாரு தெரியுமா இவன்தான் இந்த வாட்டி மாநிலத்திலயே முதல் இடத்த பிடிச்சவன் .... யாரையும் தோற்றத்தைப் பாத்து எடைப் போட கூடாது உங்கக்கிட்டேந்து நா இதை எதிர்பாக்கலைன்னு சொல்லிட்டு “ஏம்ப்பா இவ்ளோ மார்க் எடுத்துட்டு ஹிஸ்டரி ஜாய்ன் பண்ணி இருக்க??”

“எனக்கு I.P.S ஆகனும்னு ஆசை அதான்” என மணி சொல்ல அவனோட இங்கிலீஷ் புலமைய எல்லாரும் ஆன்னு பாத்தாங்க.....

கிளாஸ்ல ஒரு கூட்டம் அவன கிண்டல் பண்ண இன்னும் ஒரு கூட்டம் அவன் அறிவப்பாத்து அவன் கிட்ட பேசினாங்க....மணி எந்த கிண்டலையும் மனசுல எடுத்துக்காம படிப்பு மட்டும்தான்னு வெறித்தனமா படிச்சான்.......விக்கி,வித்யா ரெண்டு பேரும்தான் அவனுக்கு நிஜமான நண்பர்களா இருந்தாங்க........யாராவது அவன கிண்டல் பண்ணினா இவங்க ரெண்டுபேரும் பொங்கிடுவாங்க...........

 மணி ரொம்ப கலகலப்பா பேச மாட்டான்.ஆனா அதுக்கும் சேத்து வெச்சு விக்கியும்,வித்யாவும் பேசுவாங்க....அன்னிக்கி என்ன ஆச்சு ஏன் இப்படி உக்காந்துருக்கன்னு

வித்யா கேக்க “என் அப்பா அம்மா ஞாபகம் வந்துருச்சு” சொல்லிட்டு அழுதான் மணி...” எனக்கு 8 வயசு இருக்கப்ப எங்க அம்மா அப்பா ஒரு விபத்துல இறத்துட்டாங்க.அப்புறம் என்ன கொண்டு வந்து ஒரு காப்பகத்தில சேத்து விட்டுடாங்க “

உன் கண்ணில் வரும் ஒவ்வொரு துளியும்

என் மனதை பாதிப்பதேன்!!!

அவன் சொன்னதை கேட்ட வித்யா கண்களும் கலங்கிடுச்சு.....வித்யா கொஞ்ச கொஞ்சமா மணிய லவ் பண்ண ஆரம்பிச்சா..அத விக்கியும் கண்டுபிடிச்சிட்டான்......

”ஏய்!!! எப்ப அவன்கிட்ட சொல்ல போற நீ லவ் பண்றதை??” கேட்டான் விக்கி........” நா இப்பலாம் சொல்ல மாட்டேன் நம்ம கல்லூரியோட கடைசி நாள் அன்னிக்கி தான் சொல்லுவேன்” என்றால்...........

இப்படியே அவங்க எல்லாரும் கடைசி வருஷத்துக்கு வந்துட்டாங்க.........அன்னிக்கி அவங்களுக்கு கடைசி எக்ஸாம்.......வித்யா எக்ஸாம முடிச்சிட்டு மணிய பாக்க வர

“ஏய் எங்க மணி?? உன் லவ்வ சொல்லிட்டியா??“ கேட்டபடியே வந்தான் விக்கி..

அவனதான் காணோம்.....எல்லா இடத்திலையும் தேடிட்டேன்டா......... எங்க போயிருப்பான்??”

வா நா போய் அவன் hostelல இருக்கனாண்ணு பாக்றேன்......

“அவன் hostel காலி பண்ணிட்டான்........எங்க போனான்னே தெரியல...........”

அப்ப அவனதேட ஆரம்பிச்சது........5 வருஷம் ஆச்சு.....தேடிட்டே தான் இருந்தோம்.......அப்படின்னு ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் பாத்துக்க 3 பேரும் பழைய நினைவுகளிலிருந்து வெளில வந்தாங்க...........

ணி தான் ஏன் காணாம போனான்னு சொல்ல ஆரம்பிச்சான்........அன்னிக்கி எக்ஸாம் எழுதிட்டு இருந்தப்ப எனக்கு போன் கால் வந்தது......அதுல

“மணி நாம மோசம் போய்ட்டோம்பா அந்த மாணிக்கம் நம்மல ஏமாத்திட்டான்........நம்ம காப்பக இடத்தை நமக்கு தரேன்னு சொல்லிட்டு இடிக்க ஆள் கூட்டிட்டு வந்துட்டான்........எனக்கு என்ன பண்றதுன்னே தெரில நீ கொஞ்சம் வரியான்னு“ அவங்க காப்பக ஐயா கேக்க ...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.