(Reading time: 24 - 47 minutes)

னால் அதற்காக இவளால் ஒருவனை, அதுவும் ஒரு நல்லவனை திருமணம் செய்து கொண்டு அவன் வாழ்வையும் நாசமாக்க முடியாது….

ஆக அந்த மாப்பிள்ளை ஷெஷாங்கைப் பார்த்து பேசி இந்த திருமணத்தை நிறுத்தியாக வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டாள்.

ஆனால் எப்போதும் அம்மா அல்லது அப்பாவின் நேரடிப் பார்வையில் மட்டுமே இருக்கும் இவளால்….தப்பி தவறி அம்மாவும் அப்பாவும்  சேர்ந்து வெளியே சென்றாலும் செல்லும் நேரம் இவளை அறைக்குள் வைத்து பூட்டி விட்டு செல்லும் வழக்கம் உள்ள நிலையில்….எப்படி அவனை கான்டாக்ட் செய்ய..?

தினமும் ஒவ்வொரு வழி யோசித்து ஒன்றும் செட் ஆகாமல்….கடைசியில் அந்த இந்தா என எங்கேஜ்மென்ட்டே வந்துவிட்டது. விழா முடிந்த அசதியில் பெற்றோர் தூங்கிக் கொண்டிருக்க அன்றுதான் மனதை வெறுத்து அம்மா தலையனைக்கடியில் இருந்த சாவியை உருவி…..இரவோடு இரவாக அந்த ஷெஷாங்கைப் பார்த்துவர சென்றாள்.

இவள் அவன் வீட்டை அடையும் போது கேட்டில் செக்யூரிட்டி கூட இல்லை என்றால் வீடும் ப்ளாச் என திறந்து கிடக்கிறது……ஃபங்க்ஷன்றதால எல்லோருக்கும் லீவு கொடுத்திருப்பான்னு அப்ப நினச்சது தப்போ…..???

அவனது அறையை அடையும் போது காதில் விழுகிறது அவனது குடியால் குழறிய குரல்…..

“இங்க பாழ் பேபி..….நான் கள்யாணத்தையும் இதையும் குழப்பிக்கிழதே இள்ள……. நெவழ்……. அவளையும் உன்னையும் ஒரு நாழும் கன்ஃப்யூஸ் செய்யவே மாட்டேன்…… அவ என் குட்டி வீட்டுக்கு பிரின்ஸஸ்…... இளவழசி…… நீ வெழிய மத்த எல்லா இழத்துக்கும் குயின்…. குயின் பெழுசா….இழவழசியா…? ஸீ… எனக்கு நோ கன்ஃப்யூசன்….உனக்கும் நோ கன்ஃப்யூசன்…..ஓகே… பேபி….”

வெளியே இருந்து கேட்டுக் கொண்டிருக்கும் தன்ஷிக்கு எப்படி இருக்கிறதாம்??? கோபம் ஆத்திரம் அழுகை அவமானம் ஏமாற்ற உணர்வு….நீ விதச்சதுக்கு இப்டித்தான் விளையும் என்ற குற்ற உணர்வு எல்லாம் சேர்ந்து கொந்தளிக்க…இவள் போய் பட படவென கதவை தட்ட…

“யாழு…?” என்ற அவனது குழறல் குரல் பதில் கொடுத்தாலும்,  கதவை திறக்கவில்லை அவன்…

பொறுமை இழந்தவள் அறையின் கதவை ஒட்டி இருந்த அலங்கார ஜன்னலில் எட்டிப் பார்க்க…அறையின் மறு புறம் இருக்கும் திறந்த கதவும் பால்கனியும் பார்க்கத் தெரிகிறது…..அதில் டார்க் பிங்கும் கோல்டன் கலருமாய் உடை அணிந்த ஒரு பெண் ஓடிப்போய்  ஒளிந்தபடி கதவை மூடிக் கொள்கிறது…

பார்க்கவே ரொம்பவும் அருவருப்பாய் இருக்கிறது இவளுக்கு…..

சற்று நேரம் என்ன செய்வதென புரியாமல் திகைத்துப் போய் நின்றுவிட்டாள்….

இப்போது இவளுக்கு கதவை திறந்தான் இந்த ஷெஷாங்….

வைட் ஷேர்ட்டின் பட்டனை ஏற்ற இறக்கமாய் எப்படி எப்படியோ மாட்டியபடி……வெற்று மார்பும் …இறுகிய வயிறும் இன்னும் கூட வெளியில் தெரியும் படியாய் ஒரு கோலம்…..தள்ளாடி தள்ளாடி அவன்…..இன்னும் கூட எங்கேஞ்ச்மென்ட்  ஃபேண்ட்ஸைதான் அணிந்திருக்கிறான்…..

ட்ரெஸ கூட மாத்தல அதுக்குள்ள இன்னொரு பொண்ணோட…..

சர்ப்பமாய் சீற வருகிறது இவளுக்கு…..

“யூ டோன்ட் வொழ்ழி டாழ்ஸ்…..அவழுக்கும் அதான் அந்த தன்ஷி….தன்ஷியாஆஆ அவளுக்கும் என்ன கழ்யாணம் செய்ய பிடிக்கழ….இப்பவழ அவ என்ட்ட பேசவே இள்ள தெழியுமா…? ழாங்கி…. இழுந்தும் ஏன் கள்யாணம் செய்ழேன்னு தான கேட்க…..கழ்யாணத்துக்கு மினிஸ்ட்டழ் வழைக்கும் அப்பாய்ண்ட்மெந்ட் வாங்கிருக்கேன் பேபி…. போஸ்ட்டர் எழ்ழாம் அடிச்சு ஒட்டியாச்சு…..இப்ப போய் எப்டி நிழுத்த…? அதான்..”

இவளை அந்த எவளோ ஒரு பேபி என குழப்பிப் போய், அவளிடம் பேச வேண்டியதை இவளிடமே அவன் பேச….

இவனிடம் தன் காரணத்தை சொல்லி என்ன ஆகப் போகிறதாம் என ஒன்றும் சொல்லாமலே திரும்பி வந்துவிட்டாள் தன்ஷியா….

அடுத்து வீட்டிலும் எதுவும் சொல்ல முடியாமல் நடந்து விட்டிருந்தது திருமணம்.

அன்று அப்படி நடந்து கொண்ட அவனேதான் திருமணத்திற்குப் பின் இப்படி நடந்து கொள்வதும்….. கல்யாணம் செய்யப்போறவ முன்னால குடிச்சிட்டு நின்னவன்….

 இன்னைக்கு அவ தூங்குறான்னு நம்பி…..இத்தன குளிருலும் இருக்கும் ஒரு ப்ளோவரையும் இவளுக்கு வச்சுட்டு….லிக்கரையும் கொண்டு டிஸ்கார்ட் செய்துட்டு….

ஆக அன்னைக்கு நடந்தது ட்ராமாவா….ஆனா ஏன்..?

இவள கல்யாணம் செய்யனும்ன்ற நோக்கத்தில் ட்ராமா போட்றுந்தா ஒருத்தன் தன்னை இப்டியா காமிச்சுப்பான்…?? நிச்சயமா அது கல்யாணத்தை நிறுத்த போட்ட டிராமாவும் கிடையாது….

ஷெஷாங்கிற்கு இவளது கடந்த காலம் தெரியுமோ…..? உன்னை கண்காணிக்க நான் உன் கூட இல்ல…உன் சேஃப்டிக்காகன்னு விளக்கம் கொடுத்தான்தானே….. ஆனா அத தெரிஞ்ச ஒருத்தன் இவளை கல்யாணம் செய்வானாமா? கண்டிப்பா செய்யமாட்டான்….

அப்படின்னா ஏன்?

அவனிடமே கேட்டு விடலாம்….எழுந்து இப்போது ஹாலுக்கு சென்றாள்….. கடும் குளிரில் சில கேன்டிலை ஏத்தி வைத்துவிட்டு அதன் அருகில் உட்கார்ந்து எதையோ படித்துக் கொண்டிருந்தான் அவன்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.