முசோரி ட்ரிப் முடிந்து இன்று இவர்கள் தங்களது வீட்டிற்கு வந்திருந்தார்கள்….. முதன் முறையாக இவள் தங்கும் அறைக்குள் உள்ளிருக்கும் அவனது அறைக்குள் சென்றாள் தன்ஷி….. அங்கு அந்த டார்க் பிங்க் மற்றும் கோல்டன் கலர் ட்ரெஸ் ஒரு சேரின் மீது விரிந்து கிடந்தது…. ஒரு விக்கும் கூட அதன் அருகில்…
“எப்ப நீயா என்னத் தேடி வந்தாலும் உனக்கே புரிஞ்சிருக்கும்…..” சொல்லியபடி அவளை பின்னிருந்து அணைத்தான் அவளவன்….
அவனை அவள் முதன் முதலாக தேடி வந்த போது ஓடி ஒழிந்த லேடி கெட்டப் சாட் சாத் ஷெஷாங்னுடையதே… அந்த பால்கனியிருந்து அடுத்திருக்கும் அவன் அறைக்குள்ளும் கதவிருப்பதால் அது வழியாய் அங்கு போய் ஆண் உடை மாற்றி வந்திருந்தான் அவன்…..
“அதெல்லாம் சரி…இதுக்கு எதுக்குப்பா நீங்க வில்லன் அவதாரம் எடுத்தீங்க…” அந்த உடைகளை எடுத்து பார்த்து சிரித்தபடி கேட்டாள் இவள்…“இப்ப பேசி கன்வின்ஸ் செய்தத அப்பவே செய்திருக்கலாமே……”
அதுவா இப்பொழுது இன்னுமாய் மென்மையாய் அவள் தோள்மீது நாடி வைத்து அவள் கன்னத்தில் தன் கன்னம் பதித்தவன்…
“இல்ல அப்ப இருந்த சிச்சுவேஷன்ல நான் பேசினா நீ கன்வின்ஸ் ஆகி இருப்பன்னு எனக்கு தோணலை………அப்டியே நான் உன்ன பேசி கன்வின்ஸ் செய்துறுந்தாலும்….நீ என்ன விரும்பியே மேரேஜ் செய்தாலும்….உள்ளுக்குள்ள நான் உன்னவிட ரொம்ப மேலன்னு தோணும்…. அது ஒரு காம்ளக்ஸாவே செட் ஆகிடும்… உன்னால என்ன உனக்கு சமமா நினச்சு அப்ரோச் செய்ய முடியாம போகும்….
ஆனா இதுன்னா……நானும் உன்ன மாதிரி ஒரு வீக் பெர்சன் அப்டின்னு முதல்ல உனக்கு தோனும்….அப்றம் அந்த மைன்ட் செட்ல என்னை மனசால நீ நெருங்கி வரனும்…, அதான் ஒவ்வொரு ஸ்டெப்பும் உன்ட்ட இருந்துதான் வரனும்னு வெயிட் பண்ணேன்…. நீயாதான் முதல்ல பேசனும்…நீ ஒத்துகிட்டாதான் ட்ரிப்….நீ வெளிய போகனும்னாதா வாக்னு….அப்டின்னா என்னை புரிஞ்சுகிற டைம் வர்றப்ப உன் மனசுலையும் என்னை நெருங்கி இருப்ப….
அம்மாட்ட குழந்தை தன்ன தாழ்வா நினைக்கிறதில்லையே…..அப்டித்தான் மனசளவில நெருங்கியவங்கட்ட நாம மேல கீழன்னுல்லாம் பார்க்கமாட்டோம்…….அதோட என்னதான் இருந்தாலும் பர்ஸ்ட் இம்ப்ரெஷன்னு ஒன்னு இருக்குது…… நானும் வீக்னெஸ் உள்ள மனுஷன்னு உனக்கு பதியும் அது…”
” எனக்காகவாபா இவ்ளவும்?” அவன் வார்த்தைகளில் உருகத் தொடங்கிவள் மெல்ல கண்களை மட்டும் உயர்த்தி அவன் முகத்தைப் பார்த்தாள்.
“இல்லையே….” வெகு இயல்பாக அவன் சொல்ல…
இப்போ இவள் பே….பே
“பாதி காதல்தான் மேடம் எனக்கு உங்க மேல….. மீதி எனக்கு ஹி ஹி என் மேலயேதான்….நீங்க என்ட்ட க்ளோசா, சந்தோஷமா இருக்கிறதாலதானே மேடம்ஜி எனக்கும் கிடைக்க வேண்டியதெல்லாம் ஒழுங்கா நிறைய கிடைக்குது….” அவன் கண் சிமிட்ட… அதற்கு ஆயிரம் அர்த்தம் இருந்தாலும் அப்போதைய உடனடி அர்த்தத்தில் அவள்
“போடா…” என சிணுங்க….
மையல் புயல் மையம் கொண்டது.
This is entry #26 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க...
எழுத்தாளர் - அன்னா ஸ்வீட்டி
{kunena_discuss:1083}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.