(Reading time: 6 - 12 minutes)

'மாறிருக்கேனா இல்லையானு தெரியல தீப்ஸ்... ஆனா இப்போவும் எப்போவும் யூ வில் பீ மை பெஸ்ட் ப்ரென்ட்' என அவன் சொல்ல அவள் போனை அணைத்துவிட்டு இருந்தாள்..

அவளது கோபத்தின் காரணம் புரிந்த அவன் என்னடா இப்போ செய்றது என்று அமர்ந்து விட்டான்.. தீப்தியோ அஞ்சனாவுடன் பேசிக்கொண்டே உறங்கிவிட்டாள்..

காலேஜில் சேர்ந்த புதிது.. ஸ்கூல் ப்ரண்ட்ஸ் ஆதலால் எப்போதும் சேர்ந்தே திரிந்தனர் தீப்தி-ரக்ஷத்.. அஞ்சனா,தீப்தி,திவ்யா,ரக்ஷத் என நண்பர்கள் எண்ணிக்கை வளர்ந்தது.. அஞ்சனா அவர்கள் இருவரின் நட்பினை ஆராதிக்க திவ்யாவோ பொறாமையில் பொங்கினாள்.. ரக்ஷத் தனக்கே முக்கியம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவனிடம் நெருங்கி பழக முயன்றவள்,அது நடக்காததால் தீப்தியிடம் 'ஏன் உன்ட்ட எல்லாத்தையும் சொல்றான்..?? ஏன் உனக்கு டெய்லி கால் பண்றான்'எனக் கேட்க துவங்கி இருவரையும் இணைத்து தவறாய் பேசவும் துவங்கிய திவ்யாவின் பொறாமையை உணர்ந்த தீப்தி மெல்ல அவளிடம் இருந்து விலகினாள்..

விலகலுக்கான காரணம் அஞ்சனா வழியே ரக்ஷத்தை எட்ட அவனும் திவ்யாவிடம் அதிகம் பழகுவதில்லை.. ஆனால் அவளாக பேசும்போது தவிர்க்கவும் இவனுக்குத் தெரியவில்லை... 

திவ்யாவால் தீப்தி புண்படாமல் அரணாய் பாதுகாத்தான்.. 

திவ்யாவின் கவனம் தீப்தியின் மேல் படராமலும் பார்த்துக்கொண்டான்.. அப்படி நடக்கையில் தான் அவ்வப்போது அவன் திவ்யாவுடன் இருக்கையில் அவனுக்கும் தீப்திக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி செல்வது.. ஆனால் அது தீப்தியை மிகவும் காயப்படுத்தியது... 

டுத்த நாள் சனிகிழமை..

காலையில் எழுந்து நேற்று நடந்த சண்டையை எண்ணிய தீப்தி 'ரக்ஷத்திற்கு நான் தான் முக்கியம்னு தெரிந்தும் ஏன்டா அவனப் போட்டு படுத்துறோம்' என மனதினுள் கூறிக்கொண்டவள் வேகமாக கிளம்பி அஞ்சனாவிற்கு டாட்டா சொல்லிவிட்டு பறந்தாள்...

அவனது வீட்டிற்கு முன் இருக்கும் பார்க்கின் உள் சென்றவள் ரக்ஷத்தின் எண்ணை அழைத்தாள்.. Bestie calling என தன் மொபைல் அலற அதை எடுத்தவனிடம்

'உன் வீடு பக்கத்துல இருக்குற பார்க்குக்கு இன்னிக்கு வர்றியா..'

'ம்ம்.. எப்போ வரணும்..??'

'உடனே வா.. நா அங்க வந்துட்டேன்...:P..'

'வந்துட்டியா.. கிளம்பறதுக்கு முன்னாடி கால் பண்ணுனா என்ன?? எப்போவும் இப்படியே பண்ணு ப்ச்.. தனியா எப்படி அங்க 10minz உக்காருவ??'

'ஹே... என்ன நீ ஏறுற?? கோவமா இருக்கறது நானு... எறங்கு எறங்கு'

'உத்தரவு மகாராணி'

'ம்ம்..குட் பாய்.. அப்பறம் கோவம்லாம் போல... ஸோ எப்போவும் சமாதானப்படுத்த க்வாலிட்டி kulfi வாங்கிதருவல.. அது இப்போவும் வேணும்... 30 ரூபா கொண்டு வர மறந்துடாத' என அவள் பேச "லூசு"என்றபடி அவன் சிரிக்க

சிரிச்சதுக்கு பனிஷ்மன்ட் ஒரு பாணிபூரியும் என அவள் கூற அவன் புன்னகையுடன் பார்க்கை நோக்கி சென்றான்...

இவ்ளோ தாங்க இவங்க சண்டை.. வர்றதும் தெரியாது போறதும் தெரியாது

"ஊடலும் கூடலும்

காதலில் மட்டுமா..??

நட்பிலும் தான்..

சண்டைகள் உறவுகளைப்

பிரிக்கையில் 

இங்கோ சண்டைகளே 

நட்பை உறுதிப்படுத்தும்

அஸ்த்திரமாய்..."

When love is thick,, faults are thin...

ஆமாங்க.. எங்க பாசம் ரொம்ப பெருசா இருக்கோ அங்க தப்பு எல்லாம் ரொம்ப குட்டியா தெரியுமாம்...

ஸோ happyah இருக்க பாசத்த increase பண்ணுங்க...

 

This is entry #32 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை -நட்பு

எழுத்தாளர் - டோனா

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.