(Reading time: 14 - 27 minutes)

சேரி மிரனு அவன் என்ன நெனச்சா உனக்கு என்ன .

சார் அவனை என் கிளோஸ் friend னு நெனச்சிருந்தேன்.

அது அவன் மட்டும் ஏன் ஸ்பெஷல்னு யோசி மிர்னு .

சார்.......

சார் அப்புறம் உங்க மிர்னு கூட பேசலாம் இப்போ நான் என் friend கூட 7 வ வருஷம் பேசாதத பேசணும், மிர்னா மேடம் வரீங்களா.

உங்க கூட பேச எதுவும் இல்லை Mr .விஜய்,மிர்னு நா சொன்ன கேப்பியா இல்லையா போ போய் பேசிட்டு வா .

சார் கண்டிப்பா போகணுமா , ஆமா எனக்காகவும், உன் அப்பா அம்மாவுக்காகவும் ப்ளீஸ்.

அவர்கள் இருவருக்கும் மிகவும் பிடித்த இடம் அசெம்பிளி கிரௌண்ட் அங்கு சென்று ஒரு ஸ்டோன் பெஞ்சில் அமர்ந்து மிர்னுவையும் அமர சொன்னான் அவள் வேறு  ஸ்டோன் பெஞ்சில் சென்று அமர்ந்தாள் உடனே அவனும் அதே ஸ்டோன் பெஞ்சில் சென்று அமர்ந்தான்.அவள் மீண்டும் எழ முயற்சிக்கும் பொழுது மிர்னு நான் இன்று பேசியே ஆகணும் அதுவும் உன் பக்கத்துல உக்காந்து .

அப்டி பேச நமக்குள்ள எந்த விஷயமும் இல்ல .

இருக்கு அது  ஒண்ணு நால நெறையபேரு நிம்மதியும் இருவர் வாழ்க்கையும் கெட்டுட்டு இருக்கு. அன்னைக்கு நான் பேசுனது ரொம்ப தப்பு அதுக்காக இன்னமும் வருத்தப்படுறது மட்டும் இல்ல நொந்துக்கிட்டு இருக்கேன் மீனு. ஏன்னா அப்போ உன் முகத்தை அன்னைக்கு பாக்குற வரைக்கும் அது தப்ப தெரில ஆனா அந்த expression நீயுமா இவங்களோட சேந்து என்ன கிண்டல் பண்ணற அப்டினு ஒரு வலியோட என்ன பாத்த  அதுக்கு மேல என்னால அங்க இருக்க முடில அப்புறம் நான் கிளம்பிட்டேன் உன்ன நேருக்கு நேர பாக்குறத கூட விட்டுட்டேன்.அடுக்கு அப்புறம் உன்ன ஏன் லைப் ல ரொம்ப மிஸ் பண்ண ஆரம்பிச்சேன் . எங்க அம்மா மட்டும் தான் என்கொட இருந்தாங்க அப்புறம் நான் காலேஜ் முடிக்கிற சமயத்துல அவங்களும் போய்ட்டாங்க . நம்ம படிச்சா சமயத்துல recesion time  சோ  ஜாப் அவ்ளோ சீக்கிரமா கிடைக்கல அப்போ தான் உன் போட்டோ பேப்பர் ல பாத்தேன் அப்போ தான் தெரிஞ்சுகிட்டேன் நீ  tnpsc பாஸ் பண்ணி   டெபுடி கலெக்டர் ஆய்ட்டன்னு தெரிய வந்தது அப்போ நான் எவ்ளோ சந்தோசப்பட்டேனு சொல்ல கூட முடியாது ஏன்னா என்னோட மீனு ஒரு டிஸ்ட்ரிக்ட்டோட டெபுடி கலெக்டர் அப்டினு நினைக்கும் போது ஒரு கர்வம் வந்துச்சு அப்போ டான் யோசிச்சேன் ஏன்னா பத்தி நீ ஏன்னா யோசிப்பனு உனக்கு கர்வம் வர்றமாரி நாமளும் முன்னேறணும் அப்டின்கிற உத்வேகம் வந்துச்சு என்கிட்ட. ஒரு சின்ன கம்பெனி ஆரம்பிச்சு குட்டி குட்டி ப்ரொஜெக்ட்ஸ் பண்ணேன் நல்ல GROWTH  வந்துச்சு.

சாரி விஜய் நான் உங்கள பத்தி யோசிக்குற அளவுக்கு பிரீயா இதுநாள் வரைக்கும் இல்ல எப்போ பாரு நம்மள கிண்டல் பண்ணவங்க முன்னாடி பொறாமை படுற அளவுக்கு வளரனும் அப்டின்கிற ஒரே குறிக்கோள் மட்டும் தான் இருந்துச்சு.

தப்பு மீனு நீ நெனச்சது எல்லாம் அந்த வயசுல உன் பிஸிக் வச்சு உன்ன கிண்டல் பன்னாட்டு தப்பு தான் பட் நீ எவ்ளோ பெரிய லெவெல்க்கு போனாலும் ஊரே உன்ன மரியாதையா கூப்பிட்டாலும் நம்ம friends ganguku நீ எப்பவுமே குண்டூஸ் தான் மொறைக்காத நான் நீ டெபுடி கலெக்டர் ஆயிட்ட அதனால உன்ன மரியாதையா கூப்புடனும்னு சொல்லும்போது whole  gangum  அவ என்னவா வேணாலும் ஆகட்டும் டா ஆனா அவ எப்பவுமே நம்ம குண்டூஸ் தான்டான்னு சொன்னானுங்க.

ஹே இப்பவாவது கொஞ்சம் சிறியேன் இவ்ளோ விளக்கம் சொன்னேன்ல இன்னும் கோவம் கொறயலயா . சேரி நான் வென தப்பு பண்ணதுக்கு உக்கி போடவா என்று அவன் எழவும் வேண்டாம் விஜய் இதனை நாள் வைராக்கியம் பாத்துட்டு இருந்ததுல என் பீலிங்ஸ் அப்புறம் என்னோட கொழந்தைத்தனம் எல்லாம் மறைஞ்சிடுச்சு என்னோட ஒரிஜினாலிட்டி தொலைச்சிட்டு இப்டி ஒரு பொய்யான  வாழ்க்கை வாழ்ந்திருக்கேன்னு இப்போ தான் தெரியுது .

அப்போ அதை ஸ்போர்ட்டிவ்அ எடுத்துட்டு இருந்திருந்தா நான் நல்ல friendsஅ இதனை வருஷம் மிஸ் பண்ணிருக்க மாட்டேன்.

இப்போ புரிஞ்சிருச்சு.ஓகே வா விஜய் நேரம் ஆய்யுருச்சு நாளைக்கு function பிரேபரேஷன் வேற இருக்கு . ஹே இன்னும் உன் போன் நம்பர் கொடுக்கல விஜய். டெபுடி கலெக்டர் மேடம் ஓட நம்பர் என்கிட்டே இருக்கு நான் உனக்கு watsupla மெசேஜ் அனுப்புறேன் add பண்ணிக்கோ என் நம்பர அப்புறம் நம்ம ஸ்கூல் குரூப்ல add பண்ணிக்குன்றேன் உன்ன.

சேரி வா போகலாம் .

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.