(Reading time: 14 - 27 minutes)

று நாள் ரம்மியமாய் விடிந்தது மிர்னா அரக்கு வர்ண புடவையில் ஒப்பனைகள் எதுவும் இல்லாமல் ஒரு தேவதையை போல தெரிந்தாள் விஜய் கண்ணுக்கு . அந்த விழா மேடையில் மிர்ணாவிற்கு இன்ப அதிர்ச்சியை தந்தார்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகளும் ஆசிரியர்களும் அந்த அதிர்ச்சி என்ன என்றால் பள்ளி வளாகத்தினுள் அவள் சேர்ந்த நாளில் இருந்து கடைசி ஆண்டு வரை அவள் பள்ளிக்காக பெற்று தந்த அணைத்து shieldகளும் அந்த மேடையை அலங்கரித்து இருந்தது . விழாவின் சிறப்பு விருந்தினராக இருந்தவர்கள் அவர்களது பழைய ஆசிரியர்கள் .

விழா சிறப்பாக நிகழ்ந்தது முடியும் தருவாயில் விஜய் மேடை ஏறி பேச ஆரம்பித்தான் " அன்பு சகோதரர்களே சகோதரிகளே பள்ளி வாழ்வு என்பது மிகவும் அற்புதமானது அது  ஒருமுறை சென்றால் மீண்டும் வராது நீங்க என்ஜோய் பண்ண முடிரவரைக்கும் நல்லா  என்ஜோய் பண்ணுங்க உங்களோட  தற்காலிக மகிழ்ச்சிக்காக    தெரியாமல் கூட உங்களோட படிக்குற நண்பர்களோட மனச அவங்களோட வீக் பாயிண்ட் கேலி பண்ணி வருத்தப்பட வைக்காதீங்க நீங்க தெரியாம தான் பண்ணுவீங்க அது  தப்புனு பட் நீங்க உணர ஆரம்பிக்கும் போது ஒரு அழகான நட்பு அங்க செத்திருக்கும்  நாங்க அத  அனுபவிச்சுட்டோம் நீங்க அந்த  கஷ்டம் படாதீங்க .ஹே எல்லாரும் வாரீங்களாடா இப்போ இங்க என்று அவன் அழைக்கவும் அவனது  நண்பர்கள் மேடையை அடைந்தனர் .

அனைவர் கைகளிலும் ஒரு அட்டை இருந்தது அது  என்ன என்று ஆவலாய் அனைவரும்  எதிர்பாத்திருக்க விஜய் ஒரு சிகப்பு வண்ண ரோஜா பூங்கொத்தை எடுத்து கொண்டு மிர்னாவை நோக்கி வந்தான்  .

அவன்  வந்தவுடன் அனைவரும் தங்கள் கைகளில் உள்ள அட்டையை திருப்பி வைத்தனர் அதில் "sorry Mirna forgive us for the mistake we did long back" என்று எழுதி இருந்தது . அவள் கண்கள் குளமாக இருக்க தலை மட்டும் இடம் வளமாய் ஆடியது அந்த சமயம் அவள் முன்னாள் முழந்தாள் இட்டு விஜய் "mirna will you forgive me and share rest of your life with me to correct my mistakes" என்று உருக்கமாக கேட்ட பொழுது அவள் என்ன சொல்ல என்று யோசிக்கும் பொழுது இருபுறம் அவள் தோலை புடித்து உலுக்கி நிகழ் காலத்துக்கு அழைத்து வந்தனர் அவள் பெற்றோர் , அவர்கள் முகம்   அவளது  முடிவை எதிர்நோக்கி ஆவலாய் காத்திருந்தது . 

விஜய் ப்ளீஸ் மாத்தி மாத்தி சாரி சொல்லாதீங்க "whatever happened is happened " எல்லாத்தையும் நம்ம எல்லாரும் மறந்துடலாம் . சார் இந்த கெட் டுகெதர் இங்கே பண்ணி எங்க misunderstanding எல்லாத்தையும் சரி பண்ண ஹெல்ப் பன்னீருக்கீங்க சோ தேங்க்ஸ் அ லோட் சார் .

"ஹே மிர்னா நம்ம தலைவருக்கு பதில் சொல்லுமா அவன் நம்ம மேத்ஸ் டீச்சர் கிளாஸ்ல punishment வாங்கின பையன் மாறி எவ்ளோ நேரம் முட்டி போட்டுட்டு இருப்பான் பாவம் மா எங்க friend "

விஜய் அப்பொழுது டேய் எல்லாரும் சும்மா இருங்க "meenu will you be my better half" என்று கேட்டான் அப்பொழுது முகம் முழுக்க வெட்கத்தை பூசி கொண்ட மிர்னா "yes i will"  என்று வெகுவாக சிரமப்பட்டுக்கொண்டு கூறி முடிக்க அந்த விழா அரங்கமே அனைவரது கைத்தட்டலில்.

ரு சுபயோக சுப தினத்தில் அவர்கள் இருவரது திருமணமும் நட்பும் சுற்றமும் சூழ நிறைவேறியது.

ஹே விஜய் உன் கம்பெனி பேரு என்ன டா...

ஹப்பாடா இப்பவாவுது மிர்னு மகாராணிக்கு என்ன பத்தி கேக்க தோணுச்சே ..

ஹே கிண்டல் பண்ணாம சொல்லு டா .....

ஹ்ம்ம்  M V software solutions pvt ltd.

அழுத்தக்காரி அதுல M யாருனு கேக்கணும்னு தோணுதா உனக்கு...

இத கேக்க வேற வேணுமா மாமா அது  Meenu Viji ஓட ஷார்ட் formனு எனக்கு நீ சொன்னோடனேயே புரிஞ்சிருச்சு மாமா...

பாத்தியா மாமாவை கட்டிக்க அவ்ளோ யோசிச்சியே இப்போ பாரு எவ்ளோ ஸ்மார்ட் அயிட்ட.

அம்மா மாமா அப்டி தான் ஊருக்குள்ள பேசிக்குறாங்க.....

என்று கூறி அவனை துரத்த அவன் சிரித்துகொண்டே அவளை அணைத்து பெருமையாய் புன்னகைத்துக்கொண்டான் .

அழகாய் அங்கு காதல் எனும் மலர் மலர்ந்தது  நட்பு எண்ணுக்கும் உரம் கொண்டு.

This is entry #36 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க...

எழுத்தாளர் - Deivaa Adaikkappan

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.