(Reading time: 73 - 145 minutes)

ட்ட வடிவ வாயில் வழியே சகி ரிஷிகாவை பார்க்க... 

தன் நிலை மறந்து கிடந்தாள். 

அவசரமாக டாக்டரின் அறைக்குள் நுழைந்தான்.

இது எதுவுமே தெரியாமல் விட்டத்தை வெறித்தனர் ரிஷிகாவின் பெற்றோர்.

அவர்களிடம் தன்னால் இயன்ற ஆறுதலை கூறி விட்டு டாக்டரின் அறைக்கு சென்றான் கவுதம்.

டாக்டர்.. ப்ளீஸ் புரிஞ்சிகோங்க... நா அவள பாக்கனும்...கவுதம் நீயாவது சொல்லுடா..

சார் நீங்க புரிஞ்சிகோங்க பேஷன்ட் ரொம்ப வீக்கா இருக்காங்க இந்த மாறி நேரத்துல அவங்கள டிஸ்டர்ப் பண்றது சரியில்லை. 

நண்பனை பார்க்கவும் பாவமாக அதே சமயம்.டாக்டரின் கூற்றும் உண்மையாக இருக்க என்ன செய்யவென்று கையை பிசைந்தான்.

எதேதோ பேசி பேசி பின் கடைசியில் ....டாக்டரை தன் வழிக்கு கொண்டு வந்திருந்தான் சகி.

சரிங்க... ரெண்டு நிமிஷம் தான் சீக்கிரம் போய்ட்டு பார்த்துட்டு வாங்க... பட் எந்த விதத்துலயும் பேஷன்ட் டிஸ்டர்ப் ஆகாம பார்த்துகோங்க...என்ற நிபந்தனையோடு உள்ளே சென்றான்.

கட்டிலின் அருகில் இருந்த சேரில் அமர்ந்து அவளின் தளிர் கரங்களை தன் கைகளுக்குள் கொண்டு வந்தவன்,

ரிஷிகா.. மென்மையாய் அழைத்தான். எந்த ப்ரதிபலிப்பும் இல்லை அவளிடம்.

என்னை மன்னிச்சுடு ரிஷிகா...

கண்ணீரோடு கூறிய அவன் வார்த்தகளை கேட்க அருகில இருந்த நர்சுக்கே பாவமாய் இருந்தது.

ஆனால் இதை உணரும் கட்டத்தை அவன் கடந்திருந்தான்.

எனக்கு மன்னிப்பு கேட்கற தகுதி இல்லையோனு தோணுது ரிஷிகா..ஆனாலும் கேக்குறேன்.

என்னை மன்னிச்சுடு.. இல்லைனா தண்டிச்சுடு... ஆனால் இது... இந்த உன் கோலம்... எனக்கு பயமாய் இருக்கு ரிஷிகா...இப்படி ஒரு தண்டனைய எனக்கு கொடுத்துடாத...இப்படி உன்னை பார்க்க என்னால முடியலடி...

வந்துடு என்கிட்ட ... வந்து என்னை எப்படி வேண்டும்னாலும் தண்டி... நா ஏத்துக்கறேன்..ஆனால் நீ எழுந்திரிக்கணும்... கண் விழிக்கணும் அது மட்டும் எனக்கு போதும்டி...

குழந்தை போல் கூறிவிட்டு வெளியே சென்றவன் அறையின் வாயிலில் போடப்பட்டிருந்த சேரில் அமர்ந்தான்.

அவன் தோளை ஆதரவாய் அழுத்தினான் கவுதம்.

நடப்பவற்றை புரிந்தும் புரியாமலும் பார்த்து கொண்டிருந்த ரகுராமனின் நெற்றி சுருங்கியது. 

யார் இவன்?

அவரின் சிந்தனையை தடை செய்வது போல் அறையுள் இருந்து வெளிப்பட்ட நர்ஸ் வேகமாய் டாக்டரின் அறைக்குள் சென்று திரும்ப பின்னோடு வந்த டாக்டரும் ரிஷிகாவின் அறைக்கு சென்றார்.

சிறிது நேரம் கழித்து வெளி வந்த நர்ஸ் சகியிடம்,

சார், டாக்டர் உங்கள கூப்டறாங்க 

விடுவிடுவென்று உள்ளே சென்றான். 

மிஸ்டர்....

சாஹித்யன்..

ம்ம்ம்... நீங்க இவங்கள்ட்ட என்ன பேசுனீங்கனு தெரியாது.. ஆனால் நீங்க போன கொஞ்ச நேரத்துலயே இவங்களோட பல்ஸ் ல கொஞ்சம் மாற்றம்.

நீங்க இவங்க பக்கத்துல இருக்கனும்னு நினைக்குறாங்க போல ... 

சோ நீங்க பேசுங்க.. இவங்க பழைய மாதிரி திரும்ப உங்களோட பேச்சு ஒரு ஊன்று கோலா இருக்கலாம். 

பார்க்க கூட அனுமதிக்க முடியாது என்ற மருத்துவரே இப்போது இவனை இங்கும் அங்கும் அசையாது அவளருகில் இருக்க கோரினார்.

ரிஷிகா... ரிஷிகா... நா பேசுறத உன்னால புரிஞ்சிக்க முடியுதா?

என்ன பாரு ரிஷிகா ... கண்ண திறந்து பாரு ரிஷிகா...

பரபரத்தான்.

சார், பதறாம பொறுமைய பேசுங்க சார்.. 

மென்மையாய் கூறினாள் நர்ஸ்.

நீண்ட பெரு மூச்சுடன்,

அவளின் தளிர் கரங்களை தன் கைக்குள் கொண்டு வந்தவன்.. 

விடாமல் பேசி கொண்டிருந்தான்..

ரிஷிகா... நான் பேசுறது உனக்கு கேக்குதானு தெரியல... இருந்தாலும் பேசுறேன்... என் கிட்ட வந்துடுமா... நீ இப்படி இருக்குறத என்னால பார்க்க முடியல... நான் முதல் முறை பார்த்த ரிஷிகா வேணும்... என்னை பார்த்ததும் துடித்த அந்த விழிகளை நான் பார்க்கணும்.

அவளின் கரங்கள் மெல்ல நடுக்கம் கண்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.