(Reading time: 12 - 23 minutes)

2017 போட்டி சிறுகதை 72 - என் கணவன் என் தோழன் - ரேவதிசிவா

இக்கதை பெண்களிடம் தோழமையோடும் மதிப்போடும் நடந்துக்கொள்ளும் அனைத்து  ஆண்களுக்கும் .....

This is entry #72 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை − என் கணவன் என் தோழன் / கரு சார்ந்த கதை − காதல் & திருமண வாழ்க்கை / சூழ்நிலை சார்ந்த கதை − கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க... & முடிவுக்கான கதை

எழுத்தாளர் - ரேவதிசிவா

Husband Wife

ழைய மாணவர்கள் தினத்தை ஆர்ப்பாட்டத்துடன் அனுபவித்துக் கொண்டிருந்தவர்களிடையே திடீரென ஒரு அமைதி... அந்த விசாலமான அறையின் வாசலின் நின்ற உருவத்தின் வசீகரமும், கம்பீரமும் அவர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருந்தது...

மெல்ல அமைதியை கிழித்துக் கொண்டு ஒரு குரல் ஒலித்தது...

"இது யாருன்னு தெரியலையா? எண்ணெய் வச்சு சப்புன்னு வாரின முடியோட, நீள மூக்கோட இருந்த நம்முடைய கல்லூரி விடுதி வாட்சுமேன்தான...

அட ஆமா....இவன் ...இல்ல..இவர் எதுக்கு இங்க வந்திருக்கிறாரு? என்று ஒருவன் கேட்டான்.அப்பொழுது, அங்கு வந்த மற்றொருவன் உங்களுக்குத் தெரியாதா?..படித்துக்கொண்டே வேலைப்பார்த்து இப்ப ஐ.பி.எஸ். ஆபிசரா இருக்காரு...இவர் பாடப்பிரிவும் நேரமும் வேறங்கிறதால உங்களுக்குத் தெரியலை.இவர் பல விருதுகள வாங்கியிருக்கிறாரு..( அவனின் தோற்றம் அதித அழகில்லையெனினும் இயற்கையின் படைப்பில் அவனும் அழகுதான், ஆனால் அதைக் கவனிக்க அவனுக்க நேரமில்லை என்பதுதான் உண்மை. தன் தேவைகளை கவனிக்கவே நேரம் சரியாக இருந்ததால் அவனும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. நாட்டில் பாதி மக்கள் இந்நிலையில்தான் இருக்கின்றனர். காலமும் நம் நிலையும் சரியாக இருக்கும் பொழுதுதான் நாம் புறத்தோற்றத்துக்கு முக்கியம் கொடுப்போம். அவனும் அப்படிதான்)

இவர்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்ட அவர் மனைவிக்கு அதிர்ச்சியாக இருந்தது...தன் கணவர் இவ்வளவுக் கஷ்டங்களை அனுபவித்திருக்கிறாரென்று இப்பொழுதுத்தான் அறிகிறாள். ஒவ்வொருவரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துக்கொண்டனர்...தன் கணவனின் முறை வந்தப்பொழுது முகத்தை எப்பொழுதும் போல் வைத்துக்கொண்டு கவனித்தாள்.அவள் அறியவில்லை, அவள் கணவன் அவளின் முகமாற்றத்தைக் கவனித்துவிட்டானென்று...

அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே! நான் இன்றைக்கு உங்கள் மத்தியில் இருப்பதற்கு முக்கிய காரணம், என்னோட ஆசிரமத் தலைவரும் மற்றும் என்னோட உயிர் நணபர்களும்தான்...ஒருவனுக்கு உறவுகள் இல்லாவிட்டாலும், நல்ல நண்பர்கள் அமைந்தால் அவர்கள் வாழ்வு சிறப்பாக இருக்கும் என்பதற்கு நானோர் உதாரணம்...படிப்பதற்கு ஒருவருடைய உதவி இருந்தா மட்டும் ஒருத்தரால முன்னேற முடியாது,அந்த மாணவனுக்குப் படிப்பதற்கேற்ற சூழ்நிலையும் சரியா இருந்தா மட்டுமே அவனால முன்னேற முடியும். அந்த சுழ்நிலைய உருவாக்கித் தந்த ஐயாவுக்கும் ஆசிரியர்களுக்கும் என்னோட இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.என் நண்பர்களுக்கு நன்றி சொன்னேன் என்றால், இப்பவே என்னை அடிக்க வந்திடுவாங்க..கூட்டத்திலிருந்து பலத்த கரவொலிகள் கேட்டது.. இப்ப நான் உங்ககிட்ட சில விஷயங்கள பகிர்ந்துக்க விரும்பறேன்.நாம ஒருத்தருக்கு செய்யும் உதவி, அவரோடு சேர்த்து அவர சுற்றியுள்ள அனைவருக்கும் பயன்படனும் அப்படினு நீங்க நினைச்சீங்கனா, தயங்காம அவங்களுக்கு கல்வி செல்வத்த வழங்குங்க. உங்களால ஒரு மாணவன படிக்க வைக்க முடியாமப் போனாக்கூட பரவாயில்லை உங்ககிட்ட வயதானவர்கள் வந்து தகவல் கேட்டா, சிடுசிடுக்காம பொறுமையா சொல்லிக்கொடுங்க. பாடப் புத்தகங்களைப் படிப்பது மட்டும் கல்வி இல்லை, மற்றவர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற நாம் வழிகளைக் காட்டுவதும் கல்விதான்...நிறைவா உங்களிடம் சொல்ல விரும்புவது அனைவருக்கும் உங்களால் முடிந்தவரையில் உதவுங்கள்.

நாம் மட்டும் நன்றாக வாழ்வது

என்பது வாழ்வா?

நம்மோடு அனைவரையும் இணைத்து

நன்றாக வாழ்வது என்பது வாழ்வா?

எது வாழ்க்கையென்று சிந்திப்பீர்...

அனைவருக்கும் நன்றி, என்றுரைத்து விடைப்பெற்றான் இளம்பரிதி.அமைதியாய் உடன்வரும் மனைவியைப் பார்த்து ," மதி, நாம் அந்த பூங்காவுல கொஞ்சநேரம் உட்கார்ந்துப் பேசலாமா? என்று கேட்டான். அவளும் சரி என்று தலை அசைத்தாள்.

ங்கு விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகளையே சிறிதுநேரம் பார்த்துக் கொண்டிருந்னர். பரிதி, “மதி உங்கிட்ட ஏதும் சொல்லவே இல்லைனு கோபமா இருக்கியா?” என்று கேட்டான். நிறைமதி,"கோபம் ஏதும் இல்லைங்க, வருத்தம்தான். அதுகூட நீங்க சொல்லல என்பதற்காக இல்ல, இவ்வளவு துன்பம் அனுபவித்து இருக்கிங்களே! அதுக்காகதான்” என்றாள்.

பரிதி அவளைப் பார்த்து மென்மையாக, உன்னைவிட இல்லை என்றான்.மதி அமைதியாக அவனின் தோளில் சாய்ந்து கொண்டாள். இருவரும் தங்களின் பழைய நினைவுக்குச் சென்றனர்.

வாழ்க்கையில் இணைந்து செல்பவர்கள் தங்ளுடைய முதல் சந்திப்பை என்றும் நினைவில் கொள்வர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் இருக்கும். பரிதி மற்றும் மதியின் சந்திப்பு மற்றவர்களைவிட மாறுபட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.