(Reading time: 12 - 23 minutes)

காலங்கள் நகர, ஆசிரமத்தில் மதி நன்கு பொருந்திக் கொண்டாள். மேலும் படித்து  இப்பொழுது வழக்கறிஞராக உள்ளாள்.பரிதி அவளின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் உடன் இருந்தான்.பழகிய காலங்களில் அவளுடைய செய்கையால் அவனை ஈர்த்தாள். ஒருநாள், முடிவுடன் பரிதி தன் மனதில் உள்ளதை அவளிடம் தெரிவிக்க, அதற்கு அவள் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் என் மேல் எப்போது இம்மாதிரியான எண்ணம் தோன்றியது? என்று கேட்டாள். இக்கேள்வியைப் பரிதி எதிர்பார்த்ததால் மென்னகையுடன் பின்வருமாறு கூறினான்.

என் காதல்..

உன் முதல் பார்வையிலும் தோன்றவில்லை

உன் முகவுரையிலும் தோன்றவில்லை

உன் முக அழகிலும் தோன்றவில்லை

உன் அக அழகு புரிந்ததால்

தோன்றியதடி என் நிறைமதியே!

இதைக்கேட்ட மதிக்கு அந்நொடியில் பரிதி மேல் காதல் தோன்றவில்லையெனினும் தோழமையுடன் மேலும் உள்ளுக்குள் ஒன்று தோன்றியது நிஜம். மதி தன் மனதில் தோன்றியதை அப்படியே உரைத்தாள். இதுபோதாதா பரிதிக்கு, அவளின் விருப்பதிற்கு என்றும் மதிப்பு கொடுப்பேன் என்று கூறி அவளை தன் துணைவியாக வாழ்க்கையில் இணைத்துக் கொண்டான். அவ்வுறுதியை இன்றுவரை கடைப்பிடிக்கிறான். அவர்களுக்கு  நான்கு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

குழந்தைகளின் கூச்சல், அவர்களை நிகழ்காலத்திற்குக் கொண்டு வந்தது. அவள் எழவும் உடனே மயங்கி விழ, பரிதி பதற்றத்துடன் அவளை அங்கிருப்போர் உதவியுடன் மருத்துவமனையில் சேர்த்தான். அவள் தாய்மை அடைந்திருப்பதாக மருத்துவர் சொன்னவுடன் மகிழ்ச்சி இருவர் முகத்திலும், பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று  மருத்துவர் பரிதியிடம் கூறினார். அவருக்குப் பதிலாக மதி மருத்துவரிடம், அவர் என் அன்னையைவிட நன்றாகப் பார்த்துக்குவார் டாக்டர் என்றாள். மருத்துவர் பரிதியைப் பெருமையுடன் பார்த்து வாழ்த்துக் கூறினார். பரிதி தன் மனைவியை நேசத்துடன் பார்த்தான்(மனதில், இதை விட மதிப்பு வேறு யாராலும் தர முடியாது என்று  எண்ணிக்கொண்டான்).

மகிழ்ச்சியுடன் வீடு வந்தப்பொழுது, அவர்களின் இளவரசன் தனக்கு பாப்பா வரப் போகிற குஷியில் வழக்கத்தைவிட சற்று அதிகமாகவே தந்தையிடம் வம்பு செய்தான். இருவரும் எப்பொழுதும் இப்படி வம்பு செய்வர். சிரித்துக்கொண்டிருந்த மனைவியை மகிழ்ச்சியாய் பார்த்துக்கொண்டே அவளிடம், இப்பவே இவன என்னால சமாளிக்க முடியல...இனி இவன் பாப்பாவோடு கூட்டணி வைச்சி என்ன ஒரு வழி பண்ணிடுவானே என்று புலம்பினான். அந்நேரம் அவன் நண்பன் வர, அவனிடம் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டணர். அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு, தான் வந்த செய்தியைக் கூறினான்.

(அவனைப் பற்றியக் குறிப்பு – அவனும் பரிதியுடன் வேலைப் பார்ப்பவன், விளையாட்டு குணம் கொஞ்சம் அதிகம் உண்டு, நல்லவன், வாழ்க்கையை நன்றாக அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பவன். அவனுக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது, பத்திரிகையைக் கொடுக்கவே இப்பொழுது வந்துள்ளான்).

இருவரும் அவனுக்கு வாழ்த்து தெரிவிக்க, போடா! எப்பப் பார்த்தாலும் பெரியவங்க அட்வைஸ் பண்ணிக் கொல்றாங்கடா! ஆனா எனக்குப் பெண்ண ரொம்பவும் பிடிக்கறதால அமைதியா போறன், என்றான் பரிதியின் நண்பன்.(கல்யாணம் என்றாலே ஆண்களின் சுதந்திரம் போயிடும் என்று நினைக்கும் கேரக்டர். அம்மனப்பாண்மையில்தான் பெண்களும் இருப்பர் என்று யார்? இவனிடம் சொல்வது, இவனுக்கு புரிய வைப்பதும் நமக்கு கஷ்டந்தான். எதில் ஏப்படியோ? தன் இணையை நன்குப் பார்த்துக் கொள்வான் என்பதில் ஐயமில்லை) அவர்களிடமிருந்து விடைப்பெறும் பொழுது பரிதியைக் கட்டிக் கொண்டு ...ம்...மச்சி, என் பேச்சிலர் லைப்பு கொண்டாட்டம் "எல்லாமே முடிஞ்சு போச்சு..." என்றவனின் குரலில் சோகம் ஆனால் முகத்தில் மலர்ச்சி...!

உங்களோடு சில வரிகள்...என்னோடு பல்கலைக் கழகத்தில் வேறு துறையில் பயின்ற சகோதரர் ஒருவர் பகுதிநேரப்பணியை செய்துக்கொண்டே கல்வி பயின்றார்.அவர் செய்த பணியில் காவல் பணியும் ஒன்று . அவர்  கண்டிப்பாக நல்ல நிலையில் இருப்பார் என்று நம்புகிறேன். ஆரம்பத்தில் சொன்னதும் அவரைப்பற்றிதான்.

விலைமகளிரின் குழந்தைகள் அனுபவிக்கும் தண்டனையைதான் மதி மூலம் கூறியுள்ளேன் . யாரோ செய்யும் தப்புக்கு இவர்கள் பலி ஆவதா? அவர்களை முடிந்தால் காப்பாற்றுங்கள். இல்லையென்றாலும், அவர்களை சந்திக்க நேர்ந்தால் அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உங்களால் முடிந்தளவு உதவுங்கள். யாரையும் காயப்படுத்தும் உரிமை நமக்கில்லை. எவரையும் இழிவாக நினைக்க வேண்டாம். முடிந்தால் அனைவரிடமும் அன்பு காட்டுங்கள்..

 

This is entry #72 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை − என் கணவன் என் தோழன் / கரு சார்ந்த கதை − காதல் & திருமண வாழ்க்கை / சூழ்நிலை சார்ந்த கதை − கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க... & முடிவுக்கான கதை

எழுத்தாளர் - ரேவதிசிவா

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.