(Reading time: 14 - 27 minutes)

வேறு ஏதும் நினைவில் இல்லை அவனுக்கு...மருத்துவர் வந்து சொல்லும் ஒற்றை வார்த்தைக்காக தவமிருந்தது அவன் மனம்.

யுகமாய் கடந்த 30 நிமிடங்களுக்கு பின் வந்த மருத்துவர், " now, she is fine. But ரொம்ப மனஉளைச்சல் ல இருக்காங்க. ஏதோ ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப யோசிச்சு தன்னை தானே குழப்பிக்கிறாங்க.....அவங்க கவனத்தை அவங்களுக்கு பிடிச்ச வேற விஷயத்தில் திருப்புங்க..... அவங்க இப்போ நல்லா rest எடுக்கட்டும்...என்று கூறி சென்று விட்டார்......

அப்போது தான் சிறிது ஆறுதலடைந்தான்...பின் வீட்டில் இருப்பவர்களுக்கு தகவல் சொல்லி விட்டு அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்...மனம் அவனது அம்லு வை அறிந்து கொண்ட நாட்களை அசை போட்டது...

வனும், யாழினியின் அண்ணன் ராமும் கல்லூரி தோழர்கள்...ராம் பேசும் ஒவ்வொரு விஷயத்திலும் அவனது செல்ல தங்கை இருப்பாள். இப்படியே தான் அவளது கோவம், விருப்பு, வெறுப்பு, குறும்பு,ஆசை, கனவு என யாழினியை பற்றி அனைத்தையும் அறிந்து கொண்டான். நாட்கள் செல்ல செல்ல யாழினி ஹரியின் வாழ்வில் இன்றியமையாதவளாக மாறி விட்டாள்... அதனை உணர்ந்து கொண்ட ஹரியும் தான் நல்ல முறையில் படித்து ஒரு வேலையில், சமூகத்தில் நல்ல நிலைமையில் இருந்தால் தான் தன்னவளை மகிழ்ச்சியாய் வைத்து கொள்ள முடியுமென தன் பொறுப்புணர்ந்து படித்து நல்ல வேலையிலும் சேர்ந்தான். அவனது நாட்களெல்லாம் யாழினியை பற்றிய கணவுகளிலே கழிந்தது....ஒரு வருடம் கழித்து ராமை சந்திக்க விரும்பி கடற்கரைக்கு வர சொன்னான்......

ஏராளமான கற்பனைகளோடும், எதிர்பாரப்புகளோடு சென்றவனுக்கு கிடைத்ததென்னவோ ஏமாற்றம் மட்டுமே.....ராமிடம் சொன்ன நேரத்திற்கு அரை மணி நேரம் முன்னதாகவே சென்ற ஹரியின் மனநிலை ஒரு சிறு குழந்தையை ஒத்திருந்தது.....அவனது மனமோ " dey ஹரி, என்னவோ லவர் ah பாக்க போற மாதிரி overa பண்ற. வர போறது அவளோட அண்ணன் தான்" என சீண்டி கொண்டிருந்தது...என்ன இருந்தாலும் "அவன் என் மச்சான் தானே "என மனதுடன் வழக்காடி கொண்டிருந்தான் ஹரி. இது அனைத்தும் ராமை பார்க்கும் வரை மட்டுமே. அவனை பார்த்த போதே ஏதோ சரி இல்லை என தெரிந்து விட்டது.

" ஹாய் ஹரி, எப்படி இருக்க டா ?"

"நான் நல்லா இருக்கேன் ராம். நீ எப்படி இருக்க ? வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க டா?"

" ம்ம்ம். இருக்காங்க டா"

" என்னாச்சு ராம். சொல்லு டா ? நீ பேசுறத பார்த்தா ஏதோ பிரச்சனை போல தெரியுது.... சொல்லு டா "

கண் கலங்கியபடி கடலலையை வெறித்துக்கொண்டு தொடர்ந்தான் ராம். உனக்கே தெரியும்ல ஹரி. நாங்க எவ்ளோ சந்தோசமா இருந்தோம்னு .... என் தங்கை எவ்ளோ குறும்புனு...ஒரு இடத்துலயே இருக்க மாட்டா டா. அவள சுத்தி இருக்குறவங்களை சந்தோசமா வச்சுப்பா. ஆனா இப்போ என்னை பார்த்தா கூட பயப்படுறா. யாரையும் பாக்கவோ,பேசவோ மாட்டேங்குறா.....

என்னடா என்ன சொல்ற ? யாழினிக்கு என்னாச்சு? சொல்லு டா என பதறி துடித்து விட்டான் ஹரி.

காலேஜ் முடிஞ்சு வீட்டுக்கு வரும்போது ஒரு சின்ன பையன் அவங்கம்மாவிற்கு உடம்பு ரொம்ப முடியல. தயவு செஞ்சு உதவி செய்யுங்க னு கெஞ்சிருக்கான்... இவளும் உதவி செய்யலாம்னு போன இடத்துல ரெண்டு பொருக்கிங்க அவள ........என அதை சொல்ல முடியாமல் தன் தோழனின் மடியில் விழுந்து கதறினான் ராம்.

அவன் சொன்ன விஷயங்களை புரிந்து கொண்ட ஹரியின் மனமோ தன் பிரியமானவளுக்கு நேர்ந்த அவலத்தை எண்ணி ஊமையாய் கதறியது ...அச்சமயம் அந்த இரு மிருகங்களும் கிடைத்திருந்தால் அவர்களை கொல்லவும் தயங்கியிருக்க மாட்டான்.

சிறிது நேரத்தில் சுதாரித்த ராம், அந்த சம்பவத்துக்கு அப்புறம் அவ ரொம்ப மாறிட்டா டா.... என்னையும், அப்பாவையும் பார்த்தா கூட கத்த ஆரம்பிச்சிடுறா.....யார்கிட்டயும் பேசுரதில்லை.....உமாகிட்டையும், அம்மாவும் இருந்தா மட்டும் தான் அமைதியா இருக்கா.....

திரும்ப திரும்ப இந்த விஷயத்தை நியாபக படுத்த வேண்டாம்னு நாங்க கொஞ்சம் அமைதியா அவள கவனிச்சிட்டு,கொஞ்சம் கொஞ்சமா பேசிட்டு இருந்தோம்.ஆனா எப்படி கவனிக்காம விட்டோம்னு தெரியல அவ கரு தரிச்சிருக்குறத......அந்த விஷயம் எங்களுக்கு தெரிஞ்சு அவளோட எதிர்காலத்தை யோசிச்சு கருவை கலைக்கலாம் னு யாழினிகிட்ட சொன்னா அவ முடியாது னு சொல்றா.... யாரோ செஞ்ச பாவத்துக்கு ஒண்ணும் அறியாத,பூமிக்கே வராத அந்த சிசுவை என்னால அழிக்க முடியாது....இந்த பாப்பா என்ன பாவம் பண்ணுச்சு...எத்தனையோ பேர் குழந்தை இல்லாம கஷ்டப்படுறாங்க..னு சொல்றா....பிறக்குற ஒவ்வொரு குழந்தையும் கடவுளோட வரம் னா...... தப்பான வழியில் வந்திருந்தாலும்,அந்த சம்பவத்தால நான் பாதிக்கப்பட்டுருந்தாலும் இந்த குழந்தை எனக்கு கடவுளோட வரம் தான். இத்தனை நாள் ஏன் உயிரோட இருக்கேன்னு வருத்தப்பட்டுட்டு இருந்தேன்......இனிமேல் இந்த பாப்பாக்காக உயிர் வாழனும்னு நினைக்கிறன்.தயவு செஞ்சு என்னை புரிஞ்சுக்கோங்க......நீங்க எதிர்பாக்குற மாதிரி என்னால இனிமேல் கல்யாணம் செஞ்சுக்க முடியாது. இனி என் life கு இந்த பாப்பா போதும். இதுக்கு மேல என்ன கட்டாயப்படுத்துனா பாப்பாகூட சேர்ந்து நானும் ஒரேடியா போயிடுறேன்னு சொல்றா டா. எங்களால ஒண்ணுமே பண்ண முடியல.....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.