(Reading time: 14 - 27 minutes)

"ன்ன மாதிரியான அன்பு இது. திருமணத்திற்கு முன் இவனை பார்த்தது கூட இல்லை.என்னால் பல இன்னல்களையும் அனுபவித்து விட்டான்.இருப்பினும் என்மேல் குறையாத காதல் இவனுக்கு.....இவன் காதலை பெற என்ன புண்ணியம் செய்தேனோ " என கண் கலங்க அவனை பார்த்திருந்தாள்.......

" என்னடா, மாமாவை வச்ச கண்ணு வாங்காம பாக்குற. மாமா அம்பூட்டு அழகாவா இருக்கேன் " என்றான் கண்சிமிட்டியபடி...

"ஆம், இவன் அழகன் தான் " மனம் எடுத்துரைத்தது.

"இல்லைங்க, நீ என்ன தான் சொன்னாலும் எனக்கு கஷ்டமா இருக்கு. நான் உங்களுக்காக ஏதும் செய்யலையேனு"

" இது ஒண்ணும் கடன் இல்ல கண்ணம்மா....நான் உனக்காக ஏதும் செஞ்சா நீயும் பதிலுக்கு செய்யணும்னு...இது நம்மோட வாழ்க்கை...நாம ஆசைபடுறமாதிரியே நாம வாழ்வோம் கண்ணம்மா..ஆனா அதுக்கு கொஞ்சம் time எடுக்கும்......நமக்கான நாள் நிறைய இருக்கு டா. போக வேண்டிய தூரமும் நிறைய......நாம ஒருவருக்கொருவர் நல்லா புரிஞ்சுக்கலாம்.....மீதியெல்லாம் காலபோக்கில தன்னால நடக்கும் சரியா டா. ஆனா நீ எனக்காக ஒரு உதவி செய்யணுமே"

" ம்ம்ம்.சொல்லுங்க கண்டிப்பா செய்யிறேன் "

" எனக்கு அப்பாகூட செல்லம் கொஞ்சிக்கிட்டு,அண்ணகிட்ட சண்டை போட்டுட்டு,அம்மா கூட வம்பிழுத்துட்டு , frnds கூட ஜாலியா விளையாடிட்டு இருந்த யாழினி வேணும் "

" அது முடியுமான்னு தெரியல "

" ஏன் டா முடியாது. உனக்காக நாங்க இத்தனை பேர் இருக்கோம். நீ முதல் ல உன்ன சுத்தி போட்டிருக்க வட்டத்தை விட்டு வெளியே வா...உன்ன விட கஷ்டப்பட்டவங்க,படுறவங்க எவ்ளோ பேர் இருக்காங்க தெரியுமா ? அவங்களுக்காக என்ன பண்ணலாம்னு யோசி, தற்காப்புக்கலை கத்துக்கோ. நிறைய இருக்கு டா. உலகத்துல எல்லாருக்குமே ஏதாச்சும் ஒரு குறை இருக்கும்.அதையே நினைச்சிட்டு இருந்தா வாழ முடியாது கண்ணம்மா...நீ தைரியமா உன்னை, உன்னோட பயத்தை ஜெயி்ச்சு வெளிய வந்தா தான் நம்ம பொண்ண நாம நல்லபடியா பத்திரமா,நல்ல வளர்க்க முடியும்....எல்லா பசங்களுக்கும் அவங்க அம்மா,அப்பா தான் role model ஆஹ் இருப்பாங்க.. அகல்யாக்கு நீயும் அப்படித்தான். சோ பாப்பாக்காக,எனக்காக நமக்காகவாது நீ மாற முயற்சி செய் டா. நீ என்ன செய்தாலும், எங்கே இருந்தாலும் உனக்கு துணையா நான் இருப்பேன் கண்ணம்மா. செய்வியா ? " என்றான் ஹரி.

அதற்கு வாய்மொழியால் அல்லாது அவனை நெருங்கி அவனது கரம் கோர்த்து,தோள் சாய்ந்து அவன் முகம் நோக்கி புன்னகையை பதிலாக்கினாள் அப்பூங்கொடி...

உன் கைகள் கோர்த்து

உன்னோடு போக

என் நெஞ்சம் தான் ஏங்குதே......

தினம் உயிர் வாங்குதே......

உன் தோளில் சாய்ந்து கண் மூடி வாழ

என் உள்ளம் அலைபாயுதே ஐயோ தடுமாறுதே.....

ஹாய் friends, சமீபத்துல படிச்ச ஒரு நியூசோட தாக்கம் தான் இந்த கதை. தனியா இருக்குற பொண்ணுங்க கிட்ட சின்ன பசங்க மூலமா உதவி கேட்டோ, இல்ல முகவரி கேட்டோ அவங்கள கடத்துற கும்பல் பத்தின நியூஸ்...சோ நாம தான பத்திரமா இருக்கணும். சொல்ல நினைச்ச விஷயத்தை சரியா சொல்லி இருக்கேனானு தெரியல. கதைய படிச்சிட்டு உங்க கருத்துகளை பகிர்ந்துகோங்க.....மீ காத்திருக்கேன்..

 

This is entry #77 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க...

எழுத்தாளர் - சுஜி பிரபு

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.