(Reading time: 14 - 27 minutes)

வீட்ல யாருமே சரியா பேசிக்குறது கூட இல்ல டா. அப்பாவும் , அம்மாவும் ரொம்பவும் மனசுடைஞ்சு போய்ட்டாங்க..... இப்படியே தன்னோட ஆசை மகளோட வாழ்க்கை சூன்யமாய் போய்டுமோன்னு ரொம்ப வருத்தப்படுறாங்க டா......அந்த சம்பவத்தால நிறைய காயப்பட்டுருக்கா.சொந்த அப்பா,அண்ணன்கிட்டயே ஒதுங்கி போற அளவுக்கு.....அப்படியிருந்தும் அந்த குழந்தையை எப்படி ஏத்துகிடான்னு புரியல டா.....இப்போ உணர்ச்சிவசத்துல முடிவெடுத்துட்டு நாளைக்கு அத நினைச்சு வருத்தபடக்கூடாதுல டா.....இந்த சமூகம் அவளை எப்படி பேசும்?அவ எப்படி எல்லாத்தையும் எதிர்கொள்வாள்...ரொம்ப சின்ன பொண்ணு டா...அவ மனசு படி விடவும் முடியல...எங்க விருப்பத்துக்காக அவளை கட்டாயப்படுத்தவும் முடியல .....நரகமா இருக்கு டா .......

தன்னவளை நினைத்து கதறிய மனதையும்,கலங்கிய கண்களையும் மறைத்தபடி நண்பனை தேற்றினான் ஹரி ......

யாழினியோட நிலைமையிலருந்து பார்த்தா அவ எடுத்த முடிவு சரி தான் டா. ஏன் னா அவளோட இயல்பான குணமே அதுதான்.யாரோட துன்பத்தையும் பொறுத்துக்க மாட்டா. ஏதாச்சும் நியூஸ் ல குழந்தையை பத்தி (குப்பைதொட்டியில் கிடந்தது,சிசு பலி) அப்படினு கேள்விப்பட்டாலே மூணு நாள் சாப்பிடாம அழுது கரைவாள்.... அப்படியிருக்கும் போது அவளே குழந்தையை கலைக்க எப்படி ஒத்துக்குவா ? அப்புறம் இந்த சமூகம் , அதுக்கு பேசுரத்துக்கு ஏதாச்சும் ஒரு செய்தி வேணும்..ஆனா நாம கஷ்டப்படுறப்போ உதவி செய்ய வராது....யாழினி மேல உண்மையான அக்கறை இருக்குறவங்க அவக்கூட துணையா இருந்தாலே அவளால் எல்லாத்தையும் சாதிக்க முடியும்.....

அப்புறம் யார் அவக்கூட இருந்தாலும் , இல்லாட்டியும் நான் அவக்கூட இருப்பேன்....அவளையும், என் குழந்தையையும் கண்ணுக்குள்ள வச்சு பாத்துப்பேன் என்றான் ஹரி.....

அவன் சொன்னதைகேட்டு புரிந்தும் புரியாமலும் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் ராம்.....

நான் உண்மையா தான் டா சொல்றேன்.உன் தங்கைமேல பரிதாபப்பட்டு நான் சொல்லல. நாம கல்லூரிநாட்கள்லருந்தே எனக்கு யாழினி மேல ஒரு இனம் புரியாத ஈர்ப்பு. சோ நம் படிப்பு முடிஞ்சு, நல்ல வேலைக்கு போனப்புறம் உன்கிட்ட பேசலாம்னு இருந்தேன்....அதப்பத்தி பேசத்தான் உன்னை வரசொன்னேன். நீ சொன்னதெல்லாம் கேட்டப்புறம் இனியும் யாழினியை விட்டுட்டு இருக்க முடியும்னு தோணல டா.....குழந்தை என்னோட குழந்தையாவே பிறக்கணும்னு ஆசைப்படுறேன் டா...இனிமேல் கடந்து போன கசப்பான சம்பவங்களால் என்னோட யாழினியோ,இல்ல பாப்பாவோ கஷ்டப்படக்கூடாது என நினைக்கிறேன் டா.......

"உன் தங்கையை எந்த கஷ்டமும் நெருங்க விடாம பத்திரமா பாத்துக்குவேன் ராம்.... என்மேல் நம்பிக்கை வச்சு என் யாழினியை எனக்கு திருமணம் செஞ்சு தரமுடியுமா டா ? " என கேட்ட நண்பனை நெருங்கி இறுகிய அணைப்பின் மூலம் தன் சம்மதத்தினை வெளிபடுத்தினான் ராம்.....

பின் அனைவரின் சம்மதத்தோடும், பல தில்லுமுல்லு வேலைகளை செய்தும் குழந்தை பிறந்த பின் தான் திருமணத்திற்கு யாழினியை சம்மதிக்க வைக்க முடிந்தது......தன் நினைவுகளில் இருந்து வெளிவந்த ஹரி வாடிய மலராய் சோர்ந்து படுத்திருக்கும் தன்னவளை பார்த்தான்.....மனம் முழுதும் ஒரே சிந்தனை தான்....இவளை எங்கனம் மாற்றுவது ?

ரு வார மருத்துவமனை வாசத்திற்குப்பின் வீடு வந்து சேர்ந்தாள் யாழினி. குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்தாள். இந்த ஒரு வாரத்தில் ஹரி தனது கணவன், அவனிடம் பயப்படக்கூடாது என பதிய வைத்திருந்தாள்....அதற்கு கணவனின் கனிவான பேச்சும், செய்கையும் வலு சேர்த்தன.....அவர்கள் இருவருக்கும் ஒரு சுமூகநிலை உருவாகி இருந்தது.

" ஹே அம்லு, உன்கிட்ட கொஞ்சம் பேசணும். பாப்பாவை அம்மாகிட்ட கொடுத்துட்டு வரியா "என்றான் ஹரி.

" ம்ம் ,சொல்லுங்க "

" வா, அப்படியே நடந்துகிட்டே பேசலாம் " என வீட்டிற்கு வெளியே இருந்த புல்வெளியில் நடக்க ஆரம்பித்தனர்.

" உங்களுக்கு என்மேல கோவமே வரலாயாங்க "

" இல்லையே, என் கண்ணம்மா மேல எதுக்கு கோவம் வரணும் "

" கல்யாணத்துக்குப்புறம் எப்படியெல்லாம் இருக்கணும்னு உங்களுக்கு நிறைய ஆசை இருந்துருக்குமேங்க. என்னால தானே அதெல்லாம் வீணா போச்சு....நீங்க வேற யாரையாவது கல்யாணம் பண்ணிருக்கலாம் "

" மம்ம்ம்ம்... ஆசை , கனவு நிறைய இருந்துச்சு டா. இதே மாதிரி பௌர்ணமி நிலா வெளிச்சத்துல உன்னோட கைய கோர்த்துகிட்டே ரொம்ப தூரம் நடந்து போகணும்....சின்ன சின்ன குறும்புகள் செஞ்சு உன்கிட்ட அடி வாங்கணும்னு நிறைய இருக்கு... ஆனா நான் கண்ட கனவுக்கெல்லாம் உயிர்துடிப்பா இருந்தது நீ தான் டா. நீயே இல்லனா நானும் இருக்க மாட்டேன். என்னோட கனவுகளும் இருக்காது... இப்போ நீ என்னோட இருக்கியே அதுவே எனக்கு போதும். வேற ஏதும் வேணாம் டா "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.