(Reading time: 10 - 20 minutes)

2017 போட்டி சிறுகதை 81 - மன்னிப்பாயா???? - வத்சலா

This is entry #81 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - நலம் நலமறிய ஆவல்

எழுத்தாளர் - வத்சலா

                               Forgiveness

ம்மாவுக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல். அம்மாவை டாக்டரிடம் காண்பித்து விட்டு, அவரை அழைத்துக்கொண்டு வெளியே வந்த ஆதித்யா கண்டிப்பாக அங்கே இப்படி ஒரு காட்சியை எதிர்ப்பார்த்திருக்கவில்லை

இது அதிர்ச்சியா??? வியப்பா??? சந்தோஷமா என புரியாத ஒரு மனநிலை அவனுக்கு.

'மற்ற இரண்டும் இருந்தாலும் சந்தோஷம். இருக்குமா என்ன??? நீ செய்த காரியத்திற்கும், துரோகத்திற்கும் உன்னை இன்னும் இன்னும் ஏமாற்றங்கள் துரத்ததான் செய்யும். எனக்கு சந்தோஷம் என பொய் சொல்லி உன்னை நீயே நல்லவனாக காட்டிக்கொள்ள முயற்சிக்காதே!!!' மனசாட்சி அவனை கீறி குடைந்தது.

அம்மா அந்த காட்சியை பார்த்திருக்கவில்லை போலும். வாசலில் நின்றிருந்த காருக்கு நடந்தபடியே அம்மா கேட்டார்.

'நம்ம சிந்துக்கு எப்போ குழந்தை பிறக்கும்ன்னு டாக்டர்கிட்டே கேட்டிருக்கலாம் இல்ல...'

'மா... சும்மா இருக்க மாட்டியா நீ...' எகிறியது அவன் குரல். 'பிறக்காது. இனிமே பிறக்காது போதுமா??? குழந்தை பிறக்கறதுக்கும் பிறக்காம இருக்கறதுக்கும்.... எதுவா இருந்தாலும்  நாங்க ரெண்டு பேருமேதான் காரணம். இனிமே இது பத்தி பேசி டார்ச்சர் பண்ணாதே..' 

சற்று முன் பார்த்த காட்சி அது கொண்டு வந்த நினைவுகள், எல்லாமே சேர்ந்து அவனை உலுக்கி போட்டன. அம்மா அதற்கு மேல் பேசவில்லை.

அவர் முன்பு பேசிய பேச்சுக்களும் அவரோடு சேர்ந்து மற்றவர்கள் ஒத்து பாடியதும், அதை இவன் கேட்டு அவர்கள் சொன்னபடி இவன் ஆட்டம் போட்டதும்.... .எத்தனை பெரிய தவறு அது!!!

அம்மாவை வீட்டில் கொண்டு வந்து விட்டான் ஆதி. டைனிங் டேபிளில் மதிய உணவை அடுக்கிக்கொண்டிருந்தாள் சிந்து.

'மத்தியானம் ஆபீஸ் போகணுமா? சாப்பாடு ரெடியா இருக்கு. சாப்பிட்டு போறீங்களா???' மெதுவாக இதமாக கேட்டாள் அவள்.

'சிந்துவாக இருந்தால் என்ன??? அது சௌம்யாவாக இருந்தால் என்ன??? பெண்கள் எல்லாருமே  அன்பின் வடிவானவர்கள்தான். ஆண்கள்தான் பல நேரங்களில் அந்த அன்பை தூக்கி எறிந்துவிடுகிறோம்' அவளை பார்த்தபடியே நின்றிருந்தான் ஆதி.

'என்னாச்சு..' அவன் அருகில் வந்து அவள் கேட்க..

'சிந்து ஒரு நிமிஷம் உள்ளே வாயேன்..' என்றான் அவளிடம். அவள் உள்ளே வந்த நொடியில் அவளை அப்படியே சேர்த்து அணைத்துக்கொண்டான்.

'என்னை மன்னிச்சிடுமா..' என்றான். 'யாரிடம் கேட்க வேண்டிய மன்னிப்போ இது??? யாரை சேர வேண்டிய மன்னிப்போ இது??? அவள் கையை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டான்

'என்னாச்சுபா...' என்றாள் அவள் திகைத்துப்போய்..

'இவளிடம் என்ன சொல்ல??? நான் கண்ட காட்சியை சொன்னால் எப்படி எடுத்துக்கொள்வாள் அதை??? திருமணம் ஆகி மூன்று வருடங்கள் கடந்தும் குழந்தை இல்லை எனும் மனநிலையில் இருப்பவளுக்கு இந்த செய்தி இன்னமும் வலியை அல்லவா கொடுக்கும்???'

'ஒண்ணுமில்லை...' மன்னிப்பு கேட்கணும்னு தோணிச்சு. கரகரத்தது அவன் குரல். எதுவுமே புரியவில்லை அவளுக்கு.

அவள் முகத்தை கையில் ஏந்திக்கொண்டு சொன்னான் 'நான் உன்னை எதுக்கும் இனிமே கஷ்டப்படுத்த மாட்டேன்..'

ஒன்றும் புரியவில்லை சிந்துவுக்கு. ஆனால் அவன் முகபாவம் எதையும் குடைந்து குடைந்து கேட்கும் எண்ணத்தை அவளுக்கு கொடுக்கவில்லை.

'சரி...' என தலை ஆட்டினாள் அவள்.

'சரி நான் கிளம்பறேன்..'

'ஆபிஸ்கா???

'தெரியலை. எங்கே போவேன்னு.. எங்கே தோணுதோ அங்கே போவேன்.. நைட் வர லேட்டாகுமோ என்னவோ!!! ஏதாவதுன்னா போன் பண்ணு. நீ சாப்பிட்டு தூங்கு..'

'சாப்பிட்டு போங்களேன்..'

'இல்லம்மா.. மனசு சரியில்லை...அப்புறம் பார்த்துக்கலாம் வரேன்...' யோசனையில் தடுமாறியபடியே நடந்தான் ஆதி.

மாலை நேரம் நான்கை தொட்டிருக்க கடற்கரையில் சுடும் மணலில் நின்றிருந்தான் ஆதி. மனமும் அதே அளவு கொதிநிலையில்தான் இருந்தது.

'கேட்க வேண்டிய இடத்தில் மன்னிப்பு கேட்டால் மனம் கொஞ்சம் ஆறுமோ??? கேட்கும் மன்னிப்பினால் எதையும் மாற்றிவிட முடியப்போவதில்லை என்றாலும் , கேட்டு விடுவதுதான் சரியோ???' ஒரு முடிவெடுத்துக்கொண்டு காரை கிளப்பிக்கொண்டு நகர்ந்தவனுக்கு இன்னொரு உறுத்தல்.

'நான் இப்போது அங்கே போவது எந்த வகையில் சரி? நான் போய் நிற்பதால் அங்கே சூழ்நிலை எவ்வளவு தர்மசங்கடமாக மாறிப்போகுமோ??? இப்போதும் மறுபடியும் சுயநலமாக யோசிக்கிறேனோ???'

'இல்லை. போகலாம். அங்கே போய் ஒரு ஓரமாக நின்றாவது அவர்களின் நலமறிந்து கொண்டாவது திரும்பிவிடலாம். போக வேண்டும்!!! அங்கே போகவேண்டும்.' கார் மறுபடியும் காலையில் வந்த மருத்துவமனையை அடைந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.