(Reading time: 10 - 20 minutes)

வர் அதிக மகிழ்ச்சியாக இருக்கவே, மறுபடியும் சீண்டத் தொடங்கினேன் என் கேள்வியால்! அப்புறம், உன்னோட உறவினர்களான  மஞ்ச, சிவப்பு, வெள்ள அப்புறம் கருப்பு கடல்களெல்லாம் எப்படி இருக்காங்க? போய் பாத்தியா? இல்ல வழக்கம்போல  மீன்கள் மூலமா, நலம் நலமறிய ஆவல்னு பாட்டுப் பாடுறீயா? என்று நான் கேட்க, சட்டென்று ஒரு பெரிய அடி கொடுத்தார் முகத்தில்! நமக்கு இதெல்லாம் சகஜமப்பாவென்று முகத்தைத் துடைத்துக்கொண்டு அவர் பதிலைக் கேட்க தயாராகினேன்.

உனக்கு ரொம்ப கொழுப்பு அதிகமாயிடுத்து என்று கூற, நான் உடனடியாக அப்படியா? என்று ஆச்சரியமாய் வினவ, பிறகென்னப்பா! மறுபடியும் வாங்கிக்கொண்டேன் ஆசை முத்தம், சேச்சே! இல்லையில்ல அன்பு குத்து, அதுவும்கூட முகத்தில்தான்! இப்படியேப் போனால் பதில் கிடைக்காதென்று, வாலை சுருட்டிக் கொண்டு அமர்ந்தேன்.(சிரிக்காதீர்கள்பா! நான் சொன்னது நாக்கை நீட்டாமல், அமைதியாக வாய்மூடி உட்கார்ந்தேனென்று...நீங்கள் வேறு நினைத்தால், அதற்கு நான் பொருப்பல்ல.)

அவர்களுக்கும் என்னைப் போல் பல பிரச்சனைகள், என்ன செய்ய! மனிதர்கள் தங்களின் செயல்களை மாற்றிக்கொள்ளாதவரை , எங்களுக்குப் பிரச்சனைகளில் இருந்து விடிவேது! என்று கூறி முடித்தார் என் நண்பர்.

உடனே,நான், தமிழ்த்தேர்வின் பொழுது பெயர்காரணம் கேட்பார்களே! அதுபோல் அவரிடம், இன்றாவது உன் உறவினர்களின் பெயர்காரணத்தைச் சொல்லென்று நச்சரிக்கத் தொடங்கினேன். அவரும் என் அலும்பல் தாங்காது, அதற்கான காரணத்தைக் கூறத் தொடங்கினார். (நாம் இதை கவனமாகக் கேட்க வேண்டும் என்பதால் நோ கிராஸ் டாக்கிங்[ நடுவில் உளறுவதுபா])

மஞ்சள் கடல் (Yellow Sea)

சீனாவிற்கும் கொரியாவிற்கும் நடுவில் உள்ள இக்கடலுக்கு, வரும் ஆறுகள் தங்களோடு சீன நாட்டின் மண்ணையும்(Gobi desert- இப்பாலைவனத்திலிருந்து) வாரிக் கொண்டு வருவதால், அது பார்ப்பதற்கு மஞ்சள் நிறத்தைக் கொள்கிறது.( Bohai  and Hai He) அடைப்புகுறியில் உள்ள இவ்விரு ஆறுகளுமே கடலுக்கு மஞ்சள் நிறத்தைக் கொடுப்பதில் பெரும் பங்கு  வகிக்கிறது.

சிவப்பு கடல்(Red Sea)

ஆப்பிரிக்க கண்டத்திற்கும் ஆசியக் கண்டத்திற்கும் இடையே ஓடும் இக்கடல், சிவப்பு நிறம் கொள்வதுற்குக் காரணம் பேக்டீரியா. Trichodesmium erythraeum(Blue green algae) என்னும் பேக்டீரியா இக்கடலில் உள்ள சத்துக்களைக் கொண்டு வாழுகிறது. அதனின் இருப்பினால்தான் , இக்கடலுக்கு சிவப்பு கடல் என்று பெயர் வந்தது. அப்பேக்டீரியாவை Sea sawdust என்றும் சொல்கிறார்கள்.

வெள்ளைக் கடல்(White Sea)

இருஷ்யாவின்(Russia) வடமேற்கு பகுதியில் அமைந்து இருக்கும் இக்கடல், பல மாதங்கள்(செப்டம்பர்-மே) பனிக்கட்டியாய் இருப்பதாலே , இதற்கு அப்பெயர் வந்தது என்கின்றனர். ஐரோப்பிய கண்டத்தில் முழுவதுமாக பனிக்கட்டியாய் மாறும் கடல் இதுமட்டுமே! மேலும் இதில் பேரண்ட்(Barrent)கடலுடன் நீர்மாற்றம் இருந்துக்கொண்டே இருப்பதால், உப்பின் அளவு குறைவாகவும் சிலிக்கான் மற்றும் சிலிக்கேட்டீன் அளவு அதிகம் இருப்பதாலையும், இக்கடல் பார்ப்பதற்கு வெள்ளை நிறம் கொண்டுள்ளது(அவ்விருண்டக்கும் ஜொலிக்கும் தன்மை உண்டு)

கருப்பு கடல்(Black Sea)

கிழக்கு ஐரோப்பியாவுக்கும் மேற்கு ஆசியாவிற்கும் நடுவே உள்ள இக்கடல், பல உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற தன்மையை கொண்டு இருக்கவில்லை என்பதால், இப்பெயர் வந்தது. மேலும் இங்கு ஆக்ஸிஜன் குறைவு. இக்கடலில் தீவுகளே இல்லை என்பதால், புயல் போன்ற காலங்களில் கப்பல் நிறுத்த முடியாமல், இடிப்படும் வாய்ப்புகள் அதிகம். அதனாலும்கூட இக்கடலை கருப்புக் கடல் என்கின்றனர்.

சிலைப் போல் அமர்ந்திருந்த என்னை, தொடர்ச்சியாக முகத்தில் நன்கு குடுத்து எழுப்பினார். பின் நான் இப்படி உர்கார்ந்துக் கொண்டே தூங்கினால், அவரும் வேறு என்னதான் செய்வார்.

(உண்மையில் உறங்கிக்கொண்டுதான் இருந்தேன்! அது ஒரு கலை. நான் பெரும்பாலான வரலாற்று வகுப்பில், கண்ணைத் திறந்துக்கொண்டுதான் தூங்குவேன். என் ஆசிரியையின் குரலின் இனிமை பாடகருக்குக்கூட வராது. பொய் சொல்லவில்லை, அவர் எங்களை திட்டினால்கூட தாலாட்டுவதுபோல்தான் இருக்கும்.அவருக்கு எங்கள் அன்னையைவிட வயது ரொம்பவே அதிகம், ஆனாலும்கூட ஒரு இளமையின் துள்ளலை எப்பொழுதும் காணலாம். வரலாறு எனக்கு மிகவும் பிடிக்கும், காரணம் வேரொன்றொமில்லை மன்னர்களின் கதையை சொல்வதால் அது ஒரு (Bed time story) போல் இருக்கும். பின் தூக்கம் இங்கு வராமல் வேறு எங்கு போகும்!உறங்கினால்கூட அவர் சொல்வது நன்கு காதில் விழும், மூளையும் தகவல்களை சேமித்து வைத்துக்கொள்ளும். இதில் எனக்கு வரும் ஒரே பிரச்சனை, சரியாக தேர்வு சமயத்தில் மட்டும் கைக் கொடுக்காது! பாருங்கள், இப்பொழுது கேட்டாலும்கூட முகாலய பரம்பரையைப் பற்றி சொல்வேன்.உண்மையில் வரலாற்றில் வரும் வருடங்களைத் தவிர்த்து எல்லாமே எனக்கு மிகவும் பிடிக்கும். அதற்கு முக்கிய காரணம் என் பத்தாம் வகுப்பு ஆசிரியை, அவரைப்பற்றிதான் இதுவரை சொன்னது.உடல்நலக் குறைவால் இப்புவியை விட்டுப் போனாலும் , எங்களின் மனதில் அவர் என்றும் இருப்பார் என்பதில் ஐயமில்லை.சரி, வாருங்கள் என் நண்பரிடம் போகலாம். இப்பொழுது என் பதிலால் உங்களுக்கு அதிர்ச்சி ஏற்ப்பட்டால், அதற்கும் நான் பொறுப்பல்ல.)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.