(Reading time: 10 - 20 minutes)

ன்னப்பா இப்படி தூங்குகிறாய்? நீ ஆசையாக கேட்டாதால்தானே கூறினேன். நீ என்ன இப்படி தூங்குகிறாய்? என்று வருத்தப்பட்டு கேட்க, நான் திருவள்ளுவரின் கூற்றுப்படி(அதான்பா பிறருக்கு நல்லது தருமெனில் பொய் சொல்லலாம்) என் நண்பனின் மகிழ்ச்சிக்காக, அது ஒன்றுமில்லைபா, நீ சொன்னதும், இயற்கையின் சக்தியைக் கண்டு மலைத்துப் போயிருந்தேன். அந்த அதிர்ச்சியினால்தான், அப்படியே சிலை போலாகிவிட்டேன். மீண்டும் நண்பரை சீண்டும் நோக்குடன், அதுசரி, நீ மட்டுமேன் அவர்களைப் போல் இல்லாமல் இருக்கிறாய்? ஒருவேளை தப்பு செய்தாயோ? இயற்கை அன்னை கோபித்துக்கொண்டதோ? என்று கேட்டேன்.

உனக்கு எவ்வளவு குடுத்தாலும் திருந்தமாட்டீர். நான்தான் சொன்னனே, அவை இருக்கும் இடங்களுக்கு ஏற்றப்படி இருக்கிறது. நான் என் இடத்திற்கு ஏற்றப்படி இருக்கிறேன் என்று கூறினார். (மனிதன் மட்டும்தான் இக்கூற்றுக்கு விதிவிலக்கு!)

ம்..சரி.எதேனும் விஷேஷ செய்தி உம்மிடம் உள்ளதா? என்று கேட்டேன்.

இருக்கிறது, உனக்கு டெட் சீ(Dead Sea) பற்றி தெரியுமா? என்று கேட்க, நான் சிறிதளவு தெரியுமென்று கூறினேன். அக்கடலுக்கு அப்பெயர் வருவதற்கு காரணம் அதிலுள்ள உப்பின்அளவுதான். அக்கடல் 34.1% உப்பை தன்னிடம் கொண்டுள்ளது,ஆனால் மற்ற கடல்கள் 3.5% உப்பைக் கொண்டுள்ளன. அதிக உப்புதன்மையால், வெப்பத்தைத் தாங்கும் சில நுண்ணுயிர்களைத் தவிர அங்கு வேறு எந்த உயிரும் வாழ முடியாது, என்று கூறினார் நண்பர்.

நான் யோசனையில் இருப்பதைப் பார்த்து என்னவென்று வினவ, பின்வருமாறு கூறினேன்.

இல்லை, உன்னிடம் வந்து கச்சா எண்ணையும் பிற கழிவுகளையும் கொண்டு வந்து போடுகிறார்களே! அவர்களை பிளாக் சீயில் போடலாமா? இல்லை டெட் சீயில் போடலாமா? என்று யோசிக்கிறேன். தவறுதலாக சிந்தினாலும் அல்லது போட்டாலும், அதை சரி செய்வதற்கும் தெரிந்திருக்க வேண்டுமல்லவா? ஆக்கத் தெரியாதவனுக்கு அழிப்பதில் மட்டும் புத்தி இருந்து என்னப் பயன். அப்படிப்பட்டவர் இவ்வுலகில் என்ன நன்மையை நிகழ்த்திவிடப் போகிறர்.அதான் அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கலாம் என்று யோசிக்கிறேன்.

என் பதிலைக் கேட்டு நண்பர் ஆசையாக மறுபடியும் முகத்தில் இரண்டு மூன்று குத்துக்களை விட்டார். சிறிது நேரம் பேசிக்கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.சூரியனும் முழுதாக சென்றுவிட்டப்படியால், பிறகு வந்து சந்திக்கிறேன் என்று கூறி, மீண்டும் ஒரு அடியை வாங்கிக்கொண்டு மனமில்லாமல் கிளம்பினேன்.

இவ்வளவு சொன்ன நான், என் நண்பரின் பெயரைக் கூறாமல் போவேனா? அவர் பெயர் வங்காள விரிகுடா(Bay of Bengal). உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது சென்று பாருங்கள், சற்று என் நல விசாரிப்பையும் சொல்லுங்கள்.நான் என் வீதியில் பயணிக்க தொடங்கிவிட்டேன், உங்கள் அனைவரையும் பிறகு சந்திக்கிறேன்....

இக்கதை என் சமூக அறிவியல் ஆசிரியைக்காக....I always love you mam and remember you....

Aagaya veethiyil naan

{kunena_discuss:1106}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.