(Reading time: 10 - 20 minutes)

ருணா, உங்க அம்மாவும் தங்கையும் உங்களை அழைத்துபோக வந்திருக்காங்க”, என்றான்.

விருட்டென்று எழுந்தவளிடம் “ஒரு ஐந்து நிமிஷம் ப்ளீஸ், அவங்களை உங்க ஹாஸ்டல் ரிஷப்ஷனில் உட்கார வச்சிருக்கேன் டோன்ட் ஒரி” என்றான் அவள் பதட்டமறிந்து.

எதற்காக இவ்வளவும் செய்கிறான்? என்ற அச்சத்தோடு அவனைப்பார்த்தாள் வருணா.

“வருணா, உங்களுக்கு அப்பாயில்லை, உங்க தங்கை இன்னும் ஸ்கூல் தான் படிக்கிறாங்க, உங்க அம்மாவுக்கு கைக்கொடுத்து அவங்க சுமைகளை நீங்க சுமக்கிற நேரமிது. நல்ல திறமையான பெண் நீங்க, படிப்பில் முதன்மையா இருக்கும் நீங்க வாழ்கையிலும் முதன்மையா இருக்கனும். உங்க தங்கைக்கு நீங்க தானே ரோல் மாடல்! உங்க அம்மாவையும் தங்கையையும் அப்பாவின் ஸ்தானத்திலிருந்து பார்த்துக்கொள்ளும் பொருப்பு உங்களுக்கு இருக்கில்லையா?”. அவனுடைய இந்த கேள்விகள் ஒவ்வொன்றும் சாட்டையாய் அவள் மீது இறங்கியது. ஒருவன் வந்து தன் பொருப்புகளை உணர்துமளவுக்கு காதல் தன் கண்களை மறைத்ததா? அவள் முகம் சுருங்கிப்போனாள்.

அதை உணர்ந்த பகத். “இதை நான் உங்களுக்கு சொல்லத்தேவையில்லை. இருந்தாலும் ஏன் சொல்றேனா, ஷர்வேஷ், பொருப்புகளற்றவன், செல்வாக்கு நிறைந்த குடும்பத்தில் பிறந்தவன். அவனால் உங்களையும் உங்களது உயரியக் காதலையும் உணர்ந்துக்கொள்ளுமளவு மெச்சூரிட்டி இல்லாதவன். இன்னும் சொல்லப்போனால் உங்க காதலுக்கு அருகதையற்றவன்”

பகத்தின் இந்த வார்த்தைகளுக்கு அவள் தவித்துப்போனாள். அதை உணர்ந்த பகத், “ஸாரி வருணா, இது உங்க பெர்சனல். இது பத்தி நான் பேசுறத நீங்க விரும்ப மாட்டீங்க. ஆனால் ஷர்வேஷ் அப்படியில்லை. இதை காலேஜ் முழுக்க சொல்லிக்கிட்டு திரியுறான்”.

அதிர்ந்துபோனாள் வருணா.

“பட் நீங்க இப்ப அதை பத்தி கவலைப்பட தேவையில்லை. உங்க லைஃப் உங்க கையில இருக்கு, அதை நல்லப்படியா கையாளுங்க, இதை ஒரு நல்ல ஃப்ரண்டா சொல்றேன்..பை டேக் கேர்.” என்று கூறிவிட்டு அழுந்து வேகமாக நடந்து சென்றான்.

ருடங்கள் ஒருன்டோடியது, இருவரும் தங்களது பாதைகளை வகுத்துக் கொண்டு அதில் பயணித்தனர். தங்களது கடமைகளை செம்மையாக முடித்து இளைபாரும் தருணம், ஒருநாள்.. பகத் வீட்டில்…

“டேய், உன் மனசில் என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்க?” அதிரடியாய் வந்து தன் முன்னே நின்ற அவன் அம்மா கற்பகத்திடம், “என்னம்மா? நான் என்ன செய்தேன்?” என்றான் பகத்.

“இந்த வருசத்தோடு உனக்கு 28 முடியுது. உன் தங்கை கல்யாணம் முடிஞ்சாச்சு, வீடும் கட்டியாச்சு, இன்னும் எதுக்குடா கல்யாணத்தை தள்ளி போடுற, பாரு போன வருஷம் வரை உன் கழுத்தைக்கட்டிக்கிட்டு திரிந்த கார்த்திக் கூட கல்யாணம் பன்னி, எட்டே மாசத்தில் புள்ளைய பெத்துட்டான்.. அவன் விவரம் தெரிஞ்சவன். நீயும் இருக்கீயே?” என்று அலுத்துக்கொண்டாள் அவள்.

“அம்மாவின் படப்படப்பான பேச்சைக் கேட்டு சிரித்த பகத் இப்ப என்னம்மா அவசரம் இன்னும் இரண்டு வருசம் போகட்டுமே?” என்றான்.

“ஏன்? யாரையாச்சும் பார்த்து வச்சிருகிறியா என்ன? அப்படின்னா அதையாவது சொல்லி தொலை, சந்தோசமா போய் பேசி முடிச்சிடலாம்!”

“இந்த வார்த்தையைக் கேட்டதும் வருணாவின் முகம் அவன் மனக்கண்ணில் தோன்றியது.. இந்நேரம், குழந்தைக்குட்டிகளோடு எங்காவது ராஜாத்தியாக வாழ்ந்துக் கொண்டிருப்பாள் என்று நினைத்துக்கொண்டான்.

“அம்மா, அப்படியெல்லாம் ஒன்னுமில்லை.. நீங்க பெண் பாருங்க. யாரை காட்டி தாலியைக்கட்டுன்னு சொல்றீங்களோ அவ கழுத்தில் தாலியைக் கட்டுவேன்.. இப்ப ஆளை விடுங்க..”, என்றவாரு வெளியே கிளம்பிப்போனான்.

தன் கடமைகளை செம்மையுற செய்து முடித்து தாயுள்ளம் பூரிக்க செய்த மகனின் மனதை நன்று அறியாதவளா கற்பகம்? பகத் வேலை காரணமாக வெளிநாடு சென்றுவிட, அவன் நண்பன் கார்த்திக் திருமணத்திற்கு சென்றபோதே மகனின் மனதை அறிந்துகொண்டாள் அவள். வருணாவை பற்றி, கார்த்திக் கற்பகத்திடம் கூறினான், அதை அறிந்து கொண்டதும், தன்மையான தன் மகனின் உள்ளத்தை திருடியவளை தேடித்துருவி கண்டுபிடித்துவிட்டாள் கற்பகம்.

படிப்பை முடித்து சென்னையிலேயே தன் சொந்த முயற்சியில் வருணா தொடங்கிய ‘வருணா டிரஸ் டிசைனிங்க் ஸ்டுடியோ’  ஐந்தாண்டுகளில் பெரும் வளர்ச்சி அடைந்திருந்தது. தன் தாயின் தொழில் அறிவும், அவளுடைய படிப்பும் கைக்கோர்க்க திறமையான டிசைனரானாள் வருணா.

வருணாவின் வீட்டில்,

“அம்மா, என்ன இப்படி திடீர்ன்னு சொல்றீங்க? பெண் பார்க்க வர்றாங்களா? என்னையா யாரு? அடுக்கடுக்கான அவள் கேள்விகளுக்கு, அவள் அம்மா நர்மதாவோ, “அதிகமாக கேள்வி கேட்காமல் இந்த புடவையை கட்டிட்டு நகை நட்டு போட்டுட்டு நில்லு, நல்ல தரம், சீக்கிரம் ரெடியாகு” என்றாவாரே, வீட்டை ஒழுங்குப்படுத்த சென்றுவிட்டாள் அவள். அவளின் வாய்வார்த்தையாக எதையும் அறிந்துகொள்ள முடியாதென வருணாவிற்கு நன்றாக தெரியும்.

நீல வண்ண சில்க் காட்டன் புடவையில் இடைவரை வெட்டப்பட்ட கற்றையான கூந்தலை தளர்வாக பின்னி கண்ணுக்கு மையிட்டு லேசான ஒப்பனையோடு தேவதையாக நின்றாள் அவள். மாப்பிள்ளை வீட்டாரை வர்வேற்க வெளியே சென்றாள் நர்மதா. வருணாவின் இதையம் வேகமாக துடித்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.