(Reading time: 10 - 20 minutes)

ந்த வரவற்பரை சோஃபாவில்  கற்பகமும் பகத்தும் அமர்ந்துகொள்ள அவர்கள் அருகில் கார்த்திக்  அமர்ந்துக்கொண்டான். வீட்டிற்குள் நுழையும் போதிலிருந்து பகத்தின் கண்கள் வருணாவைத்தேடியது. தன்னைக்கண்டதும் அவள் முக மாருதல்களைக் காண அவன் உள்ளம் ஏங்கியது.

அருகிலிருந்தக் கார்த்திக் அவன் காதில், “டேய், அலையாதேடா, இப்ப எப்படியும் அவ வரதானே போறா, கடந்து தவிக்கிற”, என்றான் கிண்டலாக.

“அவ இவன்னா, பல்ல தட்டிடுவேன் ஒழுங்கா வருணான்னு சொல்லு இல்ல அண்ணின்னு சொல்லு” என்றான் பகத்.

“அடப்பாவி” என்றாவாரே அவன் வாயை மூடிக்கொண்டான்.

ருணாவின் புகைப்படத்தை கற்பகம் பகத்திடம் காண்பித்தபோது, ஆச்சர்யத்தில் திழைத்து போனான் அவன். கற்பகத்தைக் கட்டிக்கொண்டான். மகனின் மகிழ்சியை கண்டு அவள் பூரித்துபோனாள், நர்மதாவுக்கோ கேட்கவே வேண்டாம் பெரும் மகிழ்ச்சி கரும்பு தின்னக் கூலியா வேண்டும், தன் மகளுக்கு ஏற்ற தரம், மேலும் அவளை விரும்புகிற ஒருவன் தன் மருமகனாக வர அவள் கொடுத்து அல்லவாவைக்கவேண்டும்!”

விழிகள் உயர்த்தி பகத்தைப்பார்தவள் திகைத்துப்போனாள். என்ன ஒரு மாற்றம், கல்லூரி நண்பனாக அவள் கண்ட பகத் இல்லை அவன். ஓரு குடும்பத்தின் தலைவனாக பொறுப்புகளை வெற்றிகரமாக முடித்து, கம்பீரமாக நின்றான் அவன். அவனைப்பார்த்து புன்னகைத்துவிட்டு அவனருகில் அமைதியாக அமர்ந்துகொண்டாள்.  எதிரேயிருந்து உரிமையோடு அவளையே துளைத்துப்பார்த்துக் கொண்டிருந்தான் பகத், இருவரும் ஏதும் பேசவில்லைதான், அவர்களது இதயமிரண்டும் சங்கமித்து உணர்வுகளால் உரையாடிக்கொண்டது.

கிளம்பும்போது வருணா, என்றழைத்தக் குரலில் திழைத்து நிமிரந்தவளை தன் செஃபோனில் படம்பிடித்துக்கொண்டான். சிறிது நேரத்திற்கு பிறகு, வருணா தன் அலைபேசி குறுஞ்செய்திகளைப் பார்த்தாள்.

அதில் “ஐ லவ் யூ, ஸோ மச் டீ – பகத்” என்றிருந்தது.அவள் இதழ்கள் புன்னகையால் விரிந்தது. இதயத்தில் பகத்தின் முகம் மலர்ந்தது. அந்தக்கணமே காதலில் திழைத்த அவள் நெஞ்சம் அவன் பின்னோடியதென்பதை சொல்லத்தான் வேண்டுமா?...

 

This is entry #94 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்தக் கதை - காதல்

எழுத்தாளர் - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.