(Reading time: 10 - 19 minutes)

2017 போட்டி சிறுகதை 131 - கலையரசி - சுபஸ்ரீ

This is entry #131 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை – பள்ளி / கல்லூரி நாட்கள்

எழுத்தாளர் - சுபஸ்ரீ

Karagattam

ந்த பெரிய கலை அரங்கம் கல்லூரி மாணவ மாணவியர்களால் நிரம்பி இருந்தது. அங்கு சி.எம்.எம். பொறியியல் கல்லூரியின் ஆண்டுவிழா  கலைநிகழ்ச்சிகள் நடந்துக் கொண்டிருந்தன. மாணவர்களுக்கே உரிய கலாட்டா கிண்டல்களுக்கு சிறிதும் பஞ்சமில்லாமல் இருந்தது.

மேடையில் ஒரு இளைஞனும் இளைஞியும் தோன்றினர். கையில்  மைக்குடன். மேடை இருட்டாக இருக்க அவர்களுக்கு மட்டும் வட்டவடிவமாக லைட் போகஸ் செய்யப்பட்டிருந்தது. “விழாவின் இறுதி நிகழ்ச்சி  .  . இத்தனை நேரம் நம் கண்ணுக்கு விருந்தளித்த நிகழ்ச்சிகளை பார்த்தோம். இப்பொழுது கண்ணோடு கருத்தையும் வசீகரிக்கும் நிகழ்ச்சி ” புன்னகையோடு இளைஞன் முடிக்க

இளைஞி தொடர்ந்தாள் “ “கலையரசி“ இதுதான் அடுத்த நிகழ்ச்சியின் பெயர் . . இயல் இசை நாடகத்தோடு  உங்களை கவர வருகிறாள் கலையரசி”.

”கல்லூரி நாட்கள் நிறைய நல்ல விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளது அவற்றுள் ஓன்றை உங்களோடு பகிர வருகிறார்கள் இறுதி வருட மெகானிக்கல் குரூப் மாணவர்கள் . . . அவர்களின் கைவண்ணத்தில் உருவாகியுள்ளதுதான் இந்த நாட்டிய நாடகம்” இதை கேட்டதும் மாணவர்கள்  பலமாக கைதட்டி ஓய

“இதோ ‘கலையரசி’ நாட்டிய நாடகம் உங்களுக்காக . . . . . மகாகவி பாரதியார் பாடல்களோடு” என சொல்லி நகர்ந்தனர். பார்வையாளர்களின் பலமான கரகோஷங்களுக்கு இடையே விசில் சத்தமும் காதை செவிடாகியது.

காட்சி - 1

திரை விலகியது மேடையின் பின்னணியில் மேலும் ஒரு திரை காணப்பட்டது.  ஓவியம் போல் தீட்டபட்டிருந்தது. பச்சை வயல் வெளி, வரிசையாக வீடுகளும், தென்னை மரங்களும், நடுவில் நீர்நிலை என அழகியதொரு கிராமம். ஐந்து பெண்கள் மேடையில் அபினயம் பிடித்த வண்ணம் நின்றிருந்தனர் … நடுநாயகமாக ஒரு பெண் நிற்க மற்ற பெண்கள் அப்பெண்ணின் இருபக்கத்திலும் இருந்தனர். நடுவில் நின்றவள்தான் கலையரசி கதையின் நாயகி.  

பின்னிருந்து பாடல் ஒலித்தது மிகவும் மகிழ்ச்சியானதொரு சூழல் . .

  “கும்மியடி! தமிழ் நாடு முழுவதும்

குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி

நம்மை பிடித்த பிசாசுகள் போயின

நன்மை கண்டோ மென்று கும்மியடி

காத லொருவனைக் கைபிடித்தே அவன்

காரியம் யாவினும் கைகொடுத்து

மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்

மாட்சி பெறச்செய்து வாழ்வமடி

என்ற பாட்டிற்கு ஏற்ப பெண்கள் கும்மியடித்து ஆடினர். பூ பந்தை வைத்து விளையாடி சென்றனர். கலையரசி கிராமிய கலைகளான கரகாட்டம் மயிலாட்டம் ஆடுவதில் கைத் தேர்ந்தவள்.

காட்சி – 2

பின் திரையில் மாற்றம். அதில் மாரியம்மன் ஓவியம்.

மூன்று ஆண்கள் மேடைக்கு வர அவர்கள் கிராம முக்கியஸ்தர்கள் போல  வேடம் பூண்டிருந்தனர். அவர்கள் அருகில் நான்கைந்து பேர்  ஊர் மக்களை போல நின்றிருந்தனர். 

“ஓம் சக்திசக்தி சக்தியென்று சொல்லு – கெட்ட

சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு

சக்திசக்தி சக்தியென்று சொல்லி – அவள்

சந்நிதியி லேதொழுது நில்லு.”

முக்கியஸ்தர்கள் பாடலை பாடுவது போல பாவணை செய்ய . . . திரையில் இருந்த அம்மனை தொழுதனர்.

கிராமவாசி ஒருவன் “கிராம மக்களுக்கு ஒரு இனிய செய்தி . . .  இந்த வருடம் அம்மன் திருவிழா நடக்கப் போகிறது. அனைவரும் வந்து திருவிழாவில் கலந்துக் கொள்ளும்படி கேட்டு கொள்கிறோம். அம்மன் அருளை பெற்று அதோடு கலையரசியின் ஆட்டத்தை கண்டு மகிழுங்கள்”   எனச் உறக்கச் சொல்லி  டம்டம் டம்டம் என தன் கழுத்தில் மாட்டியிருந்த டமாரத்தை  அடித்தான்.

நாடகமும் நாட்டியமும் கலந்த பாவணையோடு செய்தார்கள்.

காட்சி – 3

பின் திரை மாற்றம் . . . மாலை நேரம் அழகான நிலவு வானில் ஊர்வலம் செல்ல .  .  . அதன் பிம்பம் நீரில் பிரதிபலிக்கிறது. சுற்றிலும் மலர்களும் செடி கொடிகளும் . . .

கலையரசி தனித்திருந்தாள். ஒருவன் பின்னிருந்து வந்து அவள் கண்ணை மூடினான். அது வேறு எவரும் அல்ல அவள் ஆருயிர் காதலன் சொக்கன். இளங் காளைனெய கம்பீரமான அழகுடன் இருந்தான். அவனை கண்டதும் அவள் மனம் மகிழ்ச்சியில் துள்ளியதை அழகாக அபினயத்தோடு ஆடுகிறாள். அவனும் சளைக்காமல் அவளோடு ஆடுகிறான். அவன் கைகள்  அவள் கையை பிடிக்க முயற்சிக்க  . . . அவள் புள்ளிமானாய் ஓடுகிறாள் நாணத்தினால். பின்னணி இசையோடு பாடல் . .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.