(Reading time: 10 - 19 minutes)

வன் கொடிய எண்ணத்தை நொடி பொழுதில் புரிந்துக் கொண்டவள் “கையை விடு” கோபத்தில் கொதித்தவளாக கூற

“கரகாட்டமும் மயிலாட்டமும் ஆடும் நங்கை நீயொரு விலைமகளையொத்தவள் . .  .இன்றிரவு நீ எனக்கு விருந்தடி” என அவளை அணைக்க முற்படுகிறான்.

அவள் பின் நகர்ந்து “பாட்டும் பண்ணும் என் உயிர் மூச்சு  . . நடனம் ஆடுவதால் நான் விலைமகள் அல்ல  . . என் காதலனை கைப்பிடிக்கும் குலமகள் யான்  . . ” கலங்காமல் கர்ஜிக்கிராள்.

அவன் அவளை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்ல முற்படுகிறான்.

சொக்கன் ஓடி வந்து அவனை தாக்க முற்பட . . . சட்டென கலையரசி “நில்லுங்கள” என தடுத்தாள் சொக்கனை.

“பெண் என்பவள் மென்மையான மலரை போன்றவள்தான் ஆனால் சூழ்நிலைக்கேற்ப்ப பாறையாகவும் ஏன் பேயாகவும்கூட மாறுவாள்.  பெண் தன்னைதானே காத்துக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும் . . ஓவ்வொரு நொடியும் தன்னவன் அவளை காவல் காக்க முடியாது . . ஆதலால் இந்த காமுகனை நானே வீழ்த்துகிறேன்” என்றாள்

இதைக் கேட்ட சொக்கன் “இல்லை ..” என எதோ சொல்ல முயல  . .

“என் மீது ஆணை தாங்கள் எதுவும் செய்யக் கூடாது ” என ஆணையிடுகிறாள்.

முதலில் அதிர்ந்தாலும் பின் அவள் சொல்வதில் அர்த்தம் உள்ளதாகவே பட்டது. ஆதலால் சற்றே விலகி நின்றான். ஆனால் மனம் துடிதுடித்தது. அவள் ஆணை அவன் கையை கட்டிப் போட்டது. எதேனும் விபரீதமாக நடந்தால் அவள் ஆணையை உடைக்க தயாராக இருந்தான்.

இதைக் கேட்ட அந்த மகாபாதகன் பெரியதாக சிரித்தான் “ உனக்கு என்ன திமிர்? உன்னால் எனை என்ன செய்ய முடியும்?  . . .“  ஏளனமாக கூறி  மீசையை முறுக்கியபடி காம பார்வை வீசுகிறான்.

அவளை தன்னோடு இழுத்துச் செல்ல முற்பட . . .அபினயம் பிடிக்கும் அவளின் அழகான கைகளின் நகங்கள் ஆயுதாக மாற்றுகிறாள். புன்னகையை சிந்தும் அவள்  முள்ளை பற்கள் அவன் கையை கடித்து குருதி வழிய செய்கிறது. ஆபரணங்கள் அலங்காரத்திற்கு மட்டுமல்ல . . .ஆபத்தில் உதவுவதற்கே என  . .  . தன் கண்ணாடி வளையளை உடைத்து அவன் கண்ணை குத்தி குருடாக்கினாள். அவன் கண் தெரியாமல் கீழே விழ தன் முழு பலத்தையும் கொண்டு அவனை தாக்கி வீழ்த்தினாள்.

   “கற்பு நிலையென்று சொல்ல வந்தார் இரு

கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்

வற்புறுத் திப்பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்

வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்”

காட்சியின் போது பின்னணி இசை சற்றே அதிர வைக்கும் அளவு இசைக்கப்பட்டது. போகஸ் லைட்கள் எரிந்து அணைந்து எரிந்து அணைய பார்வையாளர்களை அக்காட்சிகள் மிரட்டி மிரள வைத்தது. இதை நாடகம் போல அல்லாமல் மிக தத்ரூபமாக நடித்தனர்.

இறுதியாக கலையரசி முக்கியஸ்தனோடு சண்டையிட்டு அவனை வீழ்த்துகிறாள் “ நடனம் ஆடும் பெண் என்றால் உனக்கு அத்தனை துட்சமோ. . . அவளும் ஒரு தந்தையின் மகள், கணவனின் மனைவி, குழந்தையின் தாய், சகோதரனின் சகோதரி நினைவில் வைத்துக் கொள். அவளுக்கென்று சுற்றமும் சூழலும் உள்ளது” என அவனை எட்டி உதைக்கிறாள். அவன் மயங்கி சரிய. . .

சொக்கன் அவளை ஆறுதலுடன் அணைத்துக் கொள்கிறான். பெருமிதத்தோடு பார்கிறான்.

காட்சி – 6

பின் திரையில் அம்மன் கோயில் . . .

பின்னணி பாடல் . .

“பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா

பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா

தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்த்தன

தாயின் பேரும் ஸதியென்ற நாமமும்”

ஊர் மக்கள் முன்னிலையில் கலையரசி சொக்கன் திருமணம் இனிதே நடைபெறுகிறது. அனைவரும் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.

நாடகம் நிறைவு பெறுகிறது.

கலையரசி நாட்டிய நாடகத்தில் பங்குப் பெற்ற அனைவரும் ஒருசேர மேடைக்கு வந்து  நன்றி தெரிவிக்க ….

கைதட்டலுடன் பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று தங்கள் பாராட்டை தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில் ஒரு கட்டுரையை படித்தேன். அதில் நாட்டுபுற கலைஞர்களில் குறிப்பாக பெண்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை அதோடு அவர்களை நடத்தும் விதமும் சரியில்லையென. இதனால் பெண்கள் கரகாட்டம் மயிலாட்டம் போன்றவற்றை கற்கவோ ஆடவோ தயங்குகிறார்கள் என  கரகாட்டம் ஆடும் ஒரு பெண் வேதனையுடன் கூறியிருந்ததை அக்கட்டுரையில் படித்தேன்.

என்ன தடைகள் இருப்பினும் சில பெண்கள் கலையின் மேல் உள்ள நாட்டத்தினால். எந்த ஆபத்தையும் சந்திக்க தயார் ஆக இருக்கிறார்கள். எந்த துறையில்தான் பெண்களுக்கு ஆபத்து இல்லை என்பது அவர்கள் கூற்று. அப்படிபட்ட ஒரு பெண்தான் கலையரசி.

உங்களுக்கும் கலையரசியை பிடித்திருக்கும் என நம்புகிறேன்.

This is entry #131 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை – பள்ளி / கல்லூரி நாட்கள்

எழுத்தாளர் - சுபஸ்ரீ

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.