(Reading time: 14 - 27 minutes)

துதான் பிரச்சனை. உங்க கையில்..எங்க கணக்கு பாடம் மட்டுமல்ல  மொத்த பள்ளி நிர்வாக பொறுப்பும் இருக்கு.  அதனால உங்களால வகுப்புக்கே முறையா வர முடியறதில்லை வந்தாலும் முழுசா பாடம் நடத்துறதில்லை.. எப்படியும்  பாக்கி வச்சிடுறீங்க. ஆனால் வினாத்தாளை மட்டும் பாடத்திட்டப்படி தயாரிச்சிடுறீங்க.. மதிப்பெண் இல்லாம நாங்க துடிச்சா கிரேஸ் மார்க் போட்டு தணிக்கிறீங்க. இது முறையா?“

தலைமை ஆசிரியருடன் அடிக்கடி மோதும் தமிழாசிரியை சரோஜினி உற்சாக மிகுதியால் டெஸ்கில் தட்டி சட்டசபை எம் எல் ஏ வாகவே மாறிப்போனார். உடனே சூர்யா “இனி தமிழ் வகுப்பு “ என்றதும் முகம் சுருக்கி ஜகா வாங்கினார்.

“இப்போ தமிழ் படிக்க மாணவர்கள் வர்றதே அரிது. இந்த லட்சணத்தில ‘எச்சில் கையால காக்கை விரட்ட மாட்டேன்’னு அனியாயத்துக்கு மார்க்கை குறைச்சா நியாயமா? என்னதான் சரியா எழுதியிருந்தாலும்  பத்துக்கு ஆறரைதான் கொடுக்கணும்கிற சட்டம் போட்டது யார் ? அகத்தியரா இல்லை தொல்காப்பியரா? இதுனால அறுபது எழுபது வாங்க வேண்டிய சராசரி மாணவன்.. உங்க கிடுக்கிப் பிடியில சிக்கி.. வெறும் முப்பத்தி ஆறும் முப்பத்தி எட்டுமாக வாங்குறதால... தாய் மொழியையே பழிச்சு ஒதுங்கிப் போகிறானே “

இம்முறை தலைமை ஆசிரியர் டெஸ்கைத் தட்டி ஆர்ப்பரிக்க... தமிழ் ஆசிரியை தலை கவிழ்ந்தார்.

“இனி கம்ப்யூடர் வகுப்புக்கு போகலாமா ? “ என்று சூர்யா கேட்டதும்.. பச்சை ஷிபானில் பளிச்சிட்ட பத்மாவதி புருவம் நெரித்தார்.

“ஸ்டுடண்ட்ஸ் நான் சொல்லி கொடுத்தது எல்லாம் ஞாபகம் இருக்குல்லே .. இதோ இதுதான் மானிடர் இது ஸிபியூ  இது கீ போர்ட்.. நோ நோ அப்படித் தொடாதே “ என காற்றிலே கைகளை விரித்து விரல் மடக்கி சைகை காட்டி பெண்குரலில் அபிநயித்தபோது வகுப்பு சிரித்தது.

“சிரிக்காதீங்க.  இதுதான் இந்த அபிநயம்தான் இன்று வரை எங்க கம்ப்யூடர் வகுப்பு. ஸ்கூல் கம்ப்யூடர் இப்படித்தான் கண்ணுக்குத் தெரியாம அந்தரத்திலே தொங்கிட்டிருக்கு. சிவப்பு நாடா கோப்பினால் ..கம்ப்யூடர் வாங்க அனுமதிக்கப்பட்ட பணம் பேங்கிலே தூங்குது .முனைப்பா முயற்சித்தா ‘கமிஷனுக்கு ஆசைப்படறார்'னு பழி வந்துடுமோன்னு ஹெ.எம். பயப்படறார். “

உண்மையை ஜீரணிக்க வழியின்றி சண்முகசுந்தரம் நெளிந்தார்.

“அடுத்து ஆங்கில வகுப்பு.  லே அந்த நான்-டீ-டெய்ல் புக்கை எவனாவது இங்க வந்து வாசிங்கடா. அதுக்கப்பறும் நான் கதையை தமிழ்ல சொல்லித்தர்றேன். “ என்று ஜிப்பா அணிந்திருந்த ஆங்கில ஆசிரியரின் கலோக்கியல் குரலில் சற்று பேசிக் காட்டிவிட்டு தன் இயல்பு குரலுக்கு மாறினான் சூர்யா.

“ஆங்கிலம் எத்தனை அவசியமான மொழி. அதுவும் பேச்சு மொழியான ஸ்போகன் இங்கிலீஸ்! ஆனா நல்ல ஆங்கில புலமையுள்ள நமது ஆங்கில ஆசிரியரே ‘இது என்ன கான்வெண்டா இங்கிலீஸ்லயே கிளாஸ் எடுக்க ‘ என்ற அல்ட்சியத்தோடு  பாடத்தை அதிக பட்சம் தமிழிலியே நட்த்துறார். அதனால எங்க ஆங்கில புலமை சராசரிக்கும் கிழே போகுதே சார்? “

“மன்னிச்.. நோ... ஐம் சாரி சூர்யா. ஐ வில் கரக்ட் மை செல்ஃப்”

“தேங்க்யூ வெரி மச் சார். அடுத்து நான் சொல்லப்போறது, ஏதோ ஒரு சிலருக்கு மட்டுமல்ல பல ஆசிரியர்களுக்கும் பொருந்தக்கூடியது. ம் அதேதான்.. ‘என்னப்பா ராஜா, கிளாஸ் முடியறப்போவா சந்தேகம் கேட்கிறது? பேசாம என் கிட்ட டியூஷன் வச்சுக்கயேன்“ என பகிரங்கமா அழைக்கிறது சிலர்னா  ‘' என்ன தம்பி மார்க்கு குறைஞ்சுபோச்சா..வீட்ல  என்னை வந்து பார்“ என மறைமுகமா அழைப்பவர் பலர். நெஞ்சை தொட்டு சொல்லுங்க சார் இது லஞ்சத்தில சேர்த்தி இல்லையா ?.. “

“போதும் சூர்யா போதும். இவங்களுக்கு உறைச்சுதோ இல்லையோ எனக்கு நல்லாவே உறைச்சுடுச்சு. என் சார்பிலே மட்டுமில்லே இவங்க சார்பிலேயும் நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்” -  பதட்டமாக எழுந்தார் தலைமை ஆசிரியர்.

“நீங்க உட்காருங்க சார். நாங்க மன்னிப்பு கேட்கிறோம்” – ஆங்கில ஆசிரியர் குறுக்கிட்டார்.

“அய்ய்ய்யோ அப்படில்லாம் சொல்லாதீங்க சார். உங்களை குறை சொல்லறதோ மன்னிப்பு கேட்க வைக்கிறதோ என் நோக்கம் இல்லை. தன்னை அறியாமலே ஒரு மயக்கத்துல இருக்கிற உங்களை எழுப்பிவிடணும்னுதான் இவ்வளவும் பேசினேன். இந்த சின்ன சின்ன பலஹீனங்களுக்கு அப்பால்.. நீங்கள்லாம் எப்படிப்பட்ட மாமனிதர்கள்னு எனக்கு நல்லா தெரியும்.”

அனைவர்முகத்திலும் குழப்பம். இது பாராட்டா? வஞ்சப்புகழ்ச்சியா?

“கணக்கு சிலபஸை முடிக்கலை  கம்ப்யூடர் வாங்கலைன்னு குற்றம் சாட்டினேனே  இந்த ஹெச்.எம் எப்படிபட்ட அற்புத மனிதர் தெரியுமா? பள்ளிகட்டணம் கட்டாமலும் புத்தகம் வாங்காமலும் தவிக்கிற எத்தனையோ பேருக்கு மாதாமாதம் தன் சொந்த பணத்தில்  செலவு செய்துட்டு வர்ற இரக்கமுள்ள மனுஷர். அதுமட்டுமா ? அர்த்தராத்திரிக்கு கூட அவரைப்போய் எழுப்பலாம் கணக்கில் சந்தேகம் கேட்டு!. என்னைப்போல தன்னார்வம் உள்ளவர்களுக்கு காபி டிபன் கொடுத்து இலவச டியூஷன் சொல்லி கொடுக்கிறவர்.”

தங்களுக்கே தெரியாத தகவல் கேட்டு ஓரிரு ஆசிரியர்கள் தலைமை ஆசிரியரை வியந்து பார்த்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.