(Reading time: 17 - 34 minutes)

2017 போட்டி சிறுகதை 146 - நலம் நலமறிய ஆவல் – மீராராம்

This is entry #146 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - நலம் நலமறிய ஆவல்

எழுத்தாளர் - மீராராம்

Sad Eyes

தவன் வானில் உதயமாகி, தன் வரவை வெளிச்சத்துடன் தெரியப்படுத்திக்கொண்டிருக்க, அறையில் உறங்கிக்கொண்டிருந்தவளோ கதிரவனின் ஒளியினை உணர்ந்து வேகமாக எழுந்துகொண்டாள்…

கண்களை கசக்கிப் பிழிந்து விழிகளை பிரித்து கடிகாரத்தில் பார்வையை செலுத்தியவள்,

“இவ்வளவு நேரம் ஆகிடுச்சே… அச்சச்சோ…”

என பதறிபடி கட்டிலை விட்டு எழ முயற்சிக்க, அவளால் சட்டென எழுந்து கொள்ள முடியவில்லை…

“ஹ்ம்ம்….” என சோர்ந்து போனவளாய் கட்டிலிலேயே அமர்ந்திருந்தவளின் கவனத்தை கலைத்தது அந்த நேரம் வந்த பாடலின் ஓசை…

முகம் எங்கும் மத்தாப்பாய் ஒளிர, வேகமாய் தன் கைபேசியை எடுத்தாள் அவள்…

உயிரே உன் உயிரென நான் இருப்பேன்அன்பே

இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்…”

பாடல் வரிகள் அவளின் செவியை வருட, இதழ்களில் மாறாத புன்னகையுடன் போனை எடுத்தாள்…

“ராஜா……...”

உள்ளம் குளிர்ந்து இதழ்கள் மலர்ந்து அவள் அந்த பெயரை உச்சரிக்க,

“சகி…. இன்னைக்குமா?....”

மறுமுனையில் சிரித்தபடி வந்தது கேள்வி…

“என்னக்குமே அப்படித்தான்…..”

கேள்விக்கு பதிலாய் அவளும் கூற, மறுமுனையில் மீண்டும் சிரிப்பு சத்தம்…

“காலையிலேயே சார் ரொம்ப குஷியா இருக்கீங்க போல?...”

“ஆமா, என் டார்லிங்க் கிட்ட பேசுறேனே… இருக்காதா என்ன?...”

“ம்ம்… இருக்கும்… இருக்கும்… இரண்டு உதை கொடுத்தா இருக்கும்….”

“உன் கையால நீ தந்தா, நான் வேண்டான்னா சொல்லப்போறேன்…”

“ஹ்ம்ம்… யாரும் பக்கத்துல இல்லையா அங்க?...”

“இல்லையே ஏன்?....”

“வெற்றி அண்ணன் கூடவா இல்லை அங்க?...”

“இல்லையே… அவன் வெளியே போயிருக்கான்… ஏன் பேசணுமா அவன் கூட?...”

“ஹ்ம்ம்… ஆமா ஆமா….”

“சரிம்மா… வந்ததும் பேச சொல்லுறேன்…”

“ஏன் எதுக்குன்னு கேட்க மாட்டீங்களா?...”

“இது நல்லா இருக்கே… அண்ணன் தங்கச்சிக்குள்ள ஆயிரம் இருக்கும் அதை ஏன் உங்ககிட்ட சொல்லணும்னு என்னை கலாய்க்குறதுக்கா?... உனக்கு ஒரு கும்பிடு… உன் அண்ணனுக்கு ஒரு கும்பிடு… தெய்வங்களா… நான் வரலை இந்த ஆட்டத்துக்கு…”

“ம்ம்… அது… அந்த பயம் இருக்கணும்…”

“சரிங்க மேடம்….”

“என்ன சொன்னாலும் சரிதானா?... எதிர்த்தே பேசமாட்டீங்களா எங்கிட்ட?...”

“சே… சே… அதெல்லாம் நான் என் அம்முகிட்ட, என் செல்லத்துக்கிட்ட, என் டார்லிங்க்கிட்ட, என் ஆசை லவர்கிட்ட…….”

அவனை சொல்லவிடாமல் தடுத்தாள் அவள் மேற்கொண்டு…

“அடடா… உங்க ரொமான்ஸ் தாங்கலை…”

“ஆரம்பிக்கவே இல்லையேடி… அதுக்குள்ளயே தடையா?...”

“அய்யோ… அப்பா… ஆரம்பிச்சா அது நான்ஸ்டாப்பா நாலு மணி நேரம் தாண்டினாலும் நிற்காதுன்னு எனக்கு தெரியும்….”

“ஹாஹா… தெரிஞ்சி போச்சா?...”

“ஆமா ஆமா….”

“ம்ம்… ஆனா எனக்கு ஒன்னு வேணுமே… ம்ம்… ஒன்னே ஒன்னு……”

அவன் இழுக்க,

“அய்யோ அப்பா… நான் மாட்டேன்ப்பா… நேத்து நைட் குடுத்ததே போதும் போதும்…” என்றாள் அவள் வேகமாக…

“அதெல்லாம் முடியாது… இன்னைக்கும் கொடுப்பேன்…..”

“ஹ்ம்ம்… ஹூம்… படுத்தாதீங்க… போதும்… போதும்…. எனக்கு ஏற்கனவே முடியலை….”

அவள் எதேச்சையாய் வாய்விட்டு கூறிவிட, அவனது நெற்றியில் விழுந்தது புருவமுடிச்சு…

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.