(Reading time: 17 - 34 minutes)

ன்றிரவே, சகிக்கு மனம் ஒருநிலையில் இல்லாது போக, வழக்கமாக அவனிடமிருந்து வரும் போனும் வராது போக, அவள் நிலை கொள்ளாது தவித்தாள்…

சரி என முடிவெடுத்தவள், அவனின் எண்ணிற்கு அழைத்தாள் உடனேயே…

ரிங்க் போய்க்கொண்டே இருந்ததே தவிர, மறுமுனையில் எந்த பதிலும் இல்லாது போகவே, அவளது கலக்கம் அதிகமானது… பயத்தில் அங்கேயும் இங்கேயும் நடந்து கொண்டே இருந்தவள், கீழே செல்ல எண்ணிய போது, பிரசவ வலி உண்டாக, அப்படியே வயிற்றைப் பிடித்துக்கொண்டாள் இறுக்கமாக…

“ராஜா……………………….” அவள் வலி பொறுக்கமாட்டாது கத்த, அவள் சத்தம் கேட்டு மேலே வந்தார் அவளின் மாமியார்…

“அம்மாடி என்னாச்சும்மா?...”

“அத்தை வலிக்குது அத்தை…. ஆ………….. ராஜா…………….” அவள் மீண்டும் துடிக்க, உடனடியாக அவளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, அங்கே அவளுக்கு ஓர் அழகான ஆண் குழந்தை பிறந்தது…

குழந்தையைப் பெற்று முடிக்கும் வரை ராஜா ராஜா என கத்திக்கொண்டே இருந்தவள், மயக்கம் தெளிந்து குழந்தையைப் பார்க்க, அவளது முகத்திலோ பெரும் நிறைவு அதனூடே ஒரு கவலையும்….

குழந்தை பிறந்த தகவலை அவனிடம் சொல்ல எண்ணியவள், தனது மாமியாரைத் தேட, அவரோ அங்கு இல்லை… டேபிளின் மீது இருந்த தன் கைபேசியை எடுக்க அவள் முயன்று கடைசியில் எடுத்தபோது, அவளுக்கு போன் வர,

“ராஜா…. ராஜா… எப்படி இருக்கீங்க ராஜா?...”

அவள் அவனை அழுகையினூடே நலம் விசாரிக்க,

“நான் வெற்றி பேசுறேன்மா…” என பதில் வர,

“அண்ணா… அவர்… அவர்… எங்கண்ணா?... நான் அவர்கிட்ட பேசணும் அண்ணா... அவர்கிட்ட முக்கியமான ஒரு விஷயம் சொல்லணும் அண்ணா… அவர்கிட்ட கொடுங்க அண்ணா… ப்ளீஸ்….”

அவள் தவிப்பும் துடிப்பும் ஏக்கமுமாய் கூற, அடுத்து அவன் சொன்ன செய்தியில் அப்படியே போனை கீழே நழுவ விட்டாள் அவள்…

அவளின் குழந்தையின் அருகே போன் விழ, அதிலிருந்து சத்தம் வந்தது…

உயிரே உன் உயிரென நான் இருப்பேன்அன்பே

இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்…” என

கண்களில் நிறைந்துவிட்ட கண்ணீரும், மனம் கொண்ட ரணமும், உதட்டினுள்ளேயே துடித்து அடங்க,

“ராஜாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ……………………..” என உரக்க கத்தினாள் அவள் கதறியபடி….

ராணுவத்தில் பணிபுரிந்த அவள் கணவன் மேஜர் நிவித்ராஜ் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில், தனது தாய்நாட்டின் எல்லையை காப்பாற்றிவிட்டு, வீர மரணம் எய்த அந்த தகவலை, அவளிடம் தெரிவித்தான் ராஜூடன் பணிபுரியும், வெற்றிவேல்…

தாய்நாட்டிற்காக உயிர்நீத்த அவனது உடல், அவனை சுமந்து பெத்தெடுத்தவளிடமே சேருவதற்கு, சொந்த ஊர் வர,

அவனது தாய் தலையிலடித்துக்கொண்டு கதறினாள் உயிரில்லாத தன் பிள்ளையின் முகம் பார்த்து….

குழந்தையை தூக்கிக்கொண்டு, அவனது முகம் பார்க்க அடிமேல் அடி எடுத்து வைத்து நிவித்ராஜின் மனைவி சகிர்தஸ்வினி வந்தாள்…

எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும், மனம் பதை பதைக்க, அவனது உடலின் அருகில் வந்து நின்றாள் அவள்…

அவளின் விழியிலிருந்து வெளிவந்த கண்ணீர்த்துளிகள், அவனது முகத்தில் விழ, அவனிடத்திலோ அசைவு இல்லை கொஞ்சமும்…

பத்து மாதங்களுக்கு முன்பு, அவனை எப்படிக் கண்டாளோ, அதில் சின்ன சின்ன மாற்றங்கள்… உடல் சற்றே மெலிந்திருந்தது… முகத்தில் மட்டும் ஒரு பெருமிதம், தன் தாய்நாட்டினை அந்நிய நாட்டு தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றிய பெருமை முகத்தில் மின்னியது தேஜஸுடன்…

கணவனின் முகத்தில் அவள் கண்டு ரசித்த, குழந்தைத்தனம், இன்று அவனின் உயிரின் முகத்திலும் பிரதிபலிக்க, அவள் அவனின் உயிரை தன் நெஞ்சோடு சேர்த்து வைத்துக்கொண்டு அவனருகில் அமர்ந்தாள்…

“ராஜாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ………………………………”

கதறி அவள் அழ, அவளைத் தேற்ற முனைந்தார் அவளின் மாமியார்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.