(Reading time: 8 - 16 minutes)

2017 போட்டி சிறுகதை 147 - உனக்காகவே நானடி! – சமீரா

This is entry #147 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலைக் கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க...

எழுத்தாளர் - சமீரா

Love Hands

ணமேடையில் அமர்ந்திருந்தவளின் கண்களில் கண்ணீர்த்துளிகள் எட்டிப் பார்த்தன... இதோ இன்னும் சில நிமிடங்களில் அருகே இருக்கும் இவன் அவளுக்கு தாலி அணிவித்து கணவனாக போகிறான்... நினைக்கும் போதே சுளீர் என வலித்தது....

அவனோ உலகையே தன் கரங்களால் வென்றுவிட்டது போல் ஆனந்தத்திலும் ஆண்மைக்கான கம்பீரத்திடனும் கருமமே கண்ணாக ஐயர் கூறும் மந்திரத்தை கூறிக்கொண்டிருந்தான்.

என்ன நினைத்துக்கொண்டிருக்கிறான் இவன்! இவன் விரும்பியதெற்கெல்லாம் எதுவும் பேசாமல் தலையாட்ட நான் என்ன பொம்மையா? அர்ஜுன் இருக்கு உனக்கு கச்சேரி! எனக்கும் என் காதலுக்கும் பதில் சொல்லாமல் இந்த வாழ்க்கை நீ நினைப்பது போல அமையப்போறதும் இல்லை! உன்னை நா அவ்வளவு சீக்கிரத்துல மன்னிக்கப்போறதும் இல்ல என தனக்குள் சபதமெடுத்துக் கொண்டிருந்தாள் மணப்பெண்ணான பவித்ரா!

என்னடி யோசிச்சிட்டு இருக்க கல்யாணப் பொண்ணுக்கான எந்தவித கலகலப்பையும் காணோம்! அண்ணாவ பாரு வைச்சகண் எடுக்காம உன்னையே பார்த்துக்கொண்டிருக்கார்.கொஞ்சம் சிரியேன்பா உம்முன்னு இருக்க பார்க்க சகிக்கல!பவித்ராவிடம் அவள் தோழி நித்யா கூற மென்மையாக புன்னகைக்க மணக்கோலத்தில் தேவதையாய் ஜொலித்தாள்.

என்ன டார்லிங் ரொம்பவே கோவமோ? மாமா மேல கொலைவெறில இருக்கிறது போல தெரியுதே!கேலியாக அர்ஜுன் பவித்ராவிடம் இரகசியம் பேச அவளோ பதில் பேசாமல் அமைதியாய் இருந்தாள்!

ஆல்கடல் அமைதியாக இருப்பதே கொந்தளிக்கத்தானோ? அர்ஜுன் நீ ரொம்ப பாவம்டா! பவியே எப்படி சாமாளிக்கப் போறியோ தெரியல!விதி விட்ட வழி என அர்ஜுன் தனக்குள் நொந்து கொண்டிருக்கும் போதே ஐயர் மந்திரம் கூற சுபமுகுர்த்தத்தில் மங்கல நானை பெருமிதத்துடன் அணிவித்து தன்னவளை தன் உரிமையாக்கிக் கொண்டான்.திருமண சடங்கு இனிதே நடந்து முடிந்தது.

என்னடி எப்போ பாரு விண்வெளிக்கு ராக்கேட் விடப்போறது போல யோசிச்சிகிட்டே இருக்க!பவி எவ்வளோ கஷ்டங்ளுக்கு பிறகு அண்ணா அங்கள் ஆன்டிய சாமாளிச்சி இந்த கல்யாணம் நடத்தி இருக்கார்!இடையில ஏதோ போறாத காலம் பிரிஞ்சி இருக்க வேண்டியதாயிற்று! அதெல்லாம் மறந்துட்டு ஒழுங்கா குடும்பம் நடத்துற வேலைய பாரு! நீ உயிருக்குயிராக லவ் பண்ண உன் அர்ஜுனே வாழ்க்கை துணையா கிடைச்சிருக்கார்! லவ் பண்ற எல்லாருக்கும் இந்த அதிஷ்டம் கிடைக்கிறதில்லபா!சரி சரி முறைக்காத! உன் கோபம் நியாயமானது புரியுது ஆனால் சண்டை பிடிக்குறத்துக்கான சந்தர்ப்பம் இது இல்ல!அண்ணாவ உன்ன விட்டு பிரிஞ்சதுக்கு ஏதாவது பெரிய காரணம் இருக்கும்! அதனால தான் என்னவோ உன்கிட்ட சொல்லாமல் இருப்பார்.

என்னடி நீ என் பிரண்டா அர்ஜுன் பிரண்டா? ஓவரா சபோர்ட் பண்ற! ஏதும் கமிஷன் வாங்கிட்டியோனு சந்தேகத்துடன் நித்யாவிடம் பவித்ரா கேலியாக கேட்டாள்.

எங்க நாம நல்லது சொன்ன கேக்குறாங்க! என்னவிட அண்ணாவ பத்தி உனக்கு தான் நல்லா தெரியும்! உனக்கு தேவையான காரணத்தை அண்ணாட்ட நீயே கேட்டுகோ! உன் மன்னவன் உனக்காக ரொம்ப நேரம் காத்துகொண்டிருக்கார். ஆண்டி வேற அடிக்கடி கேட்டுட்டே இருக்காங்க! இந்தா பால்! நீ சந்தோசமாக வாழ்க்கையை ஆரம்பி!என வாழ்த்தி அறைக்குள் அனுப்பி வைத்தாள் நித்யா!

அவனுக்கு பால் ஒன்னு தான் ரொம்ப முக்கியம்! என முனுமுனுத்தபடியே கதவைத் லாக் பண்ணிவிட்டு வந்து கொண்டிருந்த பவித்ராவை பின்னாளிருந்தது அர்ஜுன் அணைக்க ரௌத்திரமானாள் பவித்ரா! அவன் கரங்களை தட்டிவிட்டு அர்ஜுன்! திஸ் இஸ் யுவர் லிமிட்! தாலிகட்டிட்டா எல்லாம் சரியாகிட்டா? என்னால எதயும் அவ்வளவு சீக்கிரம் மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது! நாம ஊருக்கு தான் கணவன் மனைவி! இங்கே நா யாரோ நீங்க யாரோ தான்! என ஆத்திரத்துடன் கூறிவிட்டு கட்டிலின் ஓரமாய் கண்மூடி படுத்துக்கொண்டாள் “ஐ எம் சாரி அர்ஜுன் என்ன விட்டு போனப்ப செத்துடனும் போல இருந்தது. இப்ப எனக்கானவன் நீ.அப்பிடி இருந்தும் ஏன் என்ன அழவிட்டு பாதில காணம போன நீ! என்கிட்ட இருந்து எத நீ மறைக்க டீரை பண்ற!என மௌனமாய் கண்ணீர் விட்டாள்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.