This is entry #148 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - நட்பு
எழுத்தாளர் - வளர்மதி
பல வருடங்கள் கழித்து அவ்விடத்துக்கு வந்த மணியின் கண்கள் அந்த பழத் தோட்டத்ததை ஆசையுடன் வருடி சென்றன... மீண்டும் அவன் அந்த பழத் தோட்டத்தினுள் காலடி எடுத்து வைத்து இருக்கிறான் என்பதை நம்ப அவனுக்கு சில நிமிடங்கள் பிடித்தது... மனதில் ஓர் எதிர்ப்பார்ப்பு இன்று அவனும் அங்கே வந்து இருந்தால்???
இந்த தோட்டத்தில் தான் அவனுக்கு எத்தனை நினைவுகள் இருக்கின்றன,. அதை எல்லாத்தையும் பொக்கிஷமாக மனதில் பூட்டி வைத்திருக்கிறான். அதில் சில கசப்பான அனுபவங்கள் இருந்தாலும், கூடவே பல இனிமையான நினைவுகளும் சேர்தே இருகின்றன.
மணி எங்கு சென்றாலும் அவனின் மனம் என்றும் அதை அசைப் போடும். இந்த பழத் தோட்டத்தினுள் இருக்கும் நினைவுகள் என்றும் அவனின் மனதை விட்டு அழியாதவை! என்றைக்கும் அவனின் முகத்தில் புன்னகை பூக்க வைக்கும். அதே போல் இம்முறையும் அவனின் முகத்தில் புன்னகை சாரல்…
அருவிக்கு வரும் சுற்று பயணிகளை கவரும் வகையிலும், மலையில் இருந்து கீழே இறங்குவர்களுக்கு கண்ணுக்கு குளிர்ச்சியாக இருபுற வளைவுகளிலும் பழ தோட்டங்கள். அழகுக்கு அழகு சேர்ப்பது போல அந்தி சாயும் நேரத்தில் மேகம் பல வண்ணங்களில் அழகாக காட்சி அளித்தது.
பெரும்பாலும் இத்தோட்டதினில் எல்லா பழங்களும் கிடைக்கும் என்பதால் அங்கு உள்ள மக்களுக்கும் சுற்று பயணிகளுக்கும் இந்த பல தோட்டம் மிகவும் பிரசியப்பட்டது. காரணம் பழங்களில் சுவையும் செழிப்பான பழங்களும் தான்..
மிகவும் சுத்தமாகவும் அதே சமயம் மக்கள் தங்களில் கார்களை பார்கிங் விட வசதியும் அங்கு செய்து தர பட்டு உள்ளது. ஆகையால் அங்கு எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும்.
மணி எல்லாத்தையும் பார்த்த படியே மெல்ல நடந்து செல்லுகையில் அவனின் கால்கள் ஒரு மரநாற்கலியின் அருகே நின்றது.. முன்பு எப்போதெல்லாம் அங்கு வந்தாலும் மணியும் அவனது நண்பன் பாலுவும் இங்கேதான் அமர்ந்து பழத்தை சாப்பிடுவார்கள். இவர்களுக்கு காசு குடுத்து வாங்கி சாப்பிடும் பழத்தைவிட திருடி சாப்பிடும் பழத்துக்கு ருசி அதிகமாம்… அதனால் இவர்கள் இருவரும் அங்கே இருக்கும் காவலாளி கண்களில் மண்ணை தூவி ரகசியமாய் பழத்தை எடுத்துவிடுவார்கள்...
பாலு எப்போதும் அமரும் இடத்தில் அமர்ந்தவனின் மனதில் “இப்போ அவன் என்ன பண்ணிட்டு இருப்பான்??? அவனுக்கு இன்னும் என் ஞாபகம் இருக்கான்னு தெரியலியே” என்ற எண்ணமே எழுந்தது. அதை நினைக்கையில் ஒரு பெருமூச்சி ஒன்று எழ மனதில் பாலுவை தேடனும் என்று மனதில் நினைத்தபடியே தோட்டத்தினுள் நடந்தான். அங்கு இன்றும் எல்லாம் அப்படியே இருகின்றது..
அவனின் கால்களும் மனதும் சிறுவயதில் அவனுன் பாலுவும் சென்ற இடங்களையும் அதன் நினைவுகளையும் தேடி சென்றது.. எங்கு பார்த்தாலும் மரங்களும் அதன் தரும் நிழலும் முன்பு ஒரு காலத்தில் அவர்கள் ஓடிப்பிடித்தும், திருடிய பழத்துக்காக உருண்டுபிரண்டு சண்டை போட்டது எல்லாம் நினைவில் வந்தது…
ஒரு முறை மணி பழத்தை பறித்து கீழே போட்டுக்கொண்டு இருக்கையிலே பாலுவை பார்க்க. அவனோ மணிக்காக காத்து இருக்கமால் ஒரு பழத்தை எடுத்து சுவைத்துக்கொண்டே கீழே விழும் பழங்களை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தான்.
இதை பார்த்த மணிக்கு கோவம் வர, கையில் இருக்கும் பழத்தினால் குறிப்பார்த்து பாலுவை அடிக்க, அது சரியாக அவனின் தலையில் பட்டது. எதிர்பாராத அடியினால் பாலு நிலைக்குலைய. பின் தலையில் கைவைத்தபடியே மயங்கி சரிகையில் அவன் பள்ளத்தில் விழுந்தான்.
இதை பார்த்த மணிக்கு பயம் எடுத்துக்கொள்ள அவசர அவசரமாக மரத்திலிருந்து கீழே இறங்கி அந்த பள்ளத்தை நோக்கி ஓடினான்.. அவன் அங்கு சென்று பார்க்கையில் பாலு மயக்கத்தில் இருக்க அவனின் நெற்றியில் இருந்து இரத்தம் வழிந்துக் கொண்டிருந்தது..
பாலுவின் அருகே சென்று அவனை எழுப்பியும் அழைத்தும் பார்த்தான் அவனிடம் எந்த அசைவும் இல்லை! அவனின் நெற்றியில் வரும் இரத்தத்தை நிறுத்தவும் வழியும் தெரியவில்லை. சற்று தொலைவில் இருக்கும் ஓடையை நோக்கி ஓடினான் மணி… அங்கு இருந்த போதலில் தண்ணீரை நிரப்பிக்கொண்டு பாலு இருக்கும் இடத்தை நோக்கி ஓடினான்.
மணிக்கு எப்படி தண்ணீரை தெளிக்கவேண்டும் தெரியாதால் போதத்தில் உள்ள தண்ணீரை அப்படியே பாலுவின் முகத்தில் உத்தி பாலுவின் முகத்தையே பார்த்த படி அமர்ந்திருந்தான். சற்று நேரத்தில் பாலுக்கு மயக்கம் தெளிந்த பின்னரே அவனுக்கு மீண்டும் உயிர் வந்தது!!!
“சாரி டா.. நீ என்னைவிட்டு பழத்தை சாப்பிடன்னுதான் உன் மேல் பழத்தை தூக்கிப் போட்டேன்.. நீ இப்படி மயக்கம் போடுவனு தெரியாது டா” மன்னிப்பு கேட்டும் குரலில்
“என்னது தூக்கி போட்டயா????? டேய் பழத்தாலே என்னை அடிச்சேன்னு சொல்லுடா… வலிக்குது தெரியுமா?” அவன் வலியில் சொல்ல
“அதன் சாரி சொல்லிட்டேன்லே அப்பறம் ஏன்டா கத்தற” இவனும் அவனிடம் சத்தம் போட்டான்.
தலையை தேய்த்துக்கொண்டே அண்ணாந்து வானத்தை பார்த்து பாலு அதிர்ந்தான். சூரியன் மறைந்த இருள் சூழ ஆரம்பித்தது இவர்கள் இன்னும் இந்த பழத் தோட்டத்தினுள்!! “டேய் மணி நாம் இங்கே வந்து ரொம்ப நேரம் ஆகிருச்சிடா” அழுகையுடன் சொல்ல
“ஆமா டா.. இப்போவே இருட்ட ஆரம்பிச்சிருச்சி... நாம் இப்போ எப்படிடா வீடுக்கு போறது” சொல்லுகையிலே பயத்தில் இருவருக்கும் அடி வயறு கலங்கியது... இன்று கண்டிப்பாக அப்பாவிடம் அடி விழப் போகிறது என்ற நினைப்பே இருவரையும் வேகமாக அவ்விடத்தை விட்டு செல்ல வைத்தது. அன்று அவர்கள் ஆசையாக பறித்த பழங்கள் எல்லாம் எடுக்க யாரும்யின்றி தரையில் கிடந்தது.
ஒருவழியாக அவர்கள் சரியான பாதையை கண்டுப்பிடித்து வீடுக்கு செல்லுகையில் அன்று அவர்களுக்கு விழுந்த அடியும் திட்டையும் அவர்களால் என்றும் மறக்க முடியாதவை!
இன்று மணி தனது இடது கையை மடக்கி முட்டியை பார்த்தான்.. அதில் இருந்த தழும்பு அவர்கள் அன்று வாங்கிய அடியை நினைவு படுத்தியது... புன்னைகைத்துக் கொண்டான், அதன் பின்னர் சில நாட்களுக்கு மட்டும் இந்த பழத் தோட்டதிற்கு வாராமல் இருந்தனர்.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
Short yet a very big and meaningful story. Kurangu kuda viddukk poi adivanguma
Look forward to read more of your stories.
kadaisila vantha turning point and twist kalakal :)
Balu-vai kapatri vitathaga katiyathu manathuku ithamaga irunthathu
Kurangu endralum natpu enum pothu softness vanthuduthu :)
Good one ji :)
விலங்குகளின் நட்பின் உயர்வையும்,இயற்கையை மாசுப்படுத்தக்கூடாது என்று சொன்னதற்கு நன்றி.வாழ்த்துக்கள்
Romba azhaga irundhadhu
Nalla karuththu konda kadhai
Korangu Ku kooda therinjurukku kuppa poda kudadhunu unga kadhaila
Different try ma'am
Well narrated
Best of luck
Mani Balu-vai meet panni irukkalam..