(Reading time: 10 - 19 minutes)

ணி அண்ணார்ந்து அவனுக்கு மேலிருந்த மரத்தை பார்த்தான் நிறைய பழங்கள் தொங்கிக் கொண்டிருந்தன… அதில் ஒரு பழத்தை பறித்தவன் அருகே இருக்கும் ஓடையை நோக்கி நடந்தான்...

“ம்ம் இவ்வளவு தூரம் நடத்து வந்துட்டேன்… இந்த செக்யூரிட்டி ஒருத்தனையும் காணோம்... இவனுங்க என்றைக்கு ஒழுங்கா வேலை பார்த்து இருக்கானுங்க” தனியே பேசிக்குக் கொண்டு நடந்து சென்றான்...

சற்று தூரத்தில் கேட்ட தண்ணீரின் சத்தத்தில் அவனுக்கு உற்சாகம் பொங்கியது. பல வருடங்களுக்கு பிறகு ஓடையை பார்க்கும் ஆசையில் வேகமாக வந்து பார்த்தவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது!!! ஆசையாய் தேடி வந்த அருவிலும் ஓடையிலும் மாசு அடைந்த தண்ணீரை பார்க்கையில் அவனுக்கு மனம் வலித்தது.

முன்பு எல்லாம் இந்த ஆருவியும் ஓடையும் தான் அவர்களின் களைப்பாறும் இடம். பறித்த பழங்களை எல்லாம் இங்கே எடுத்து வந்து தண்ணீரில் ஆட்டம் போட்டப்படியே உண்பார்கள்... அப்போது எல்லாம் தண்ணீரும் ஓடையை சுற்றி உள்ளே இடங்கும் சுத்தமாகவும் அழகாவும் காட்சியளிக்கும்..!!!

முகம் பார்க்கும் கண்ணாடியை போல் பள பளப்பாக இருக்கும் தண்ணீர்... குனிந்து கீழே பார்த்தால் தண்ணீரின் சுத்தமும் அதற்கு கீழே இருக்கும் மணலும் கற்களும் மிக தெளிவாக தெரியும்.. அந்த சுத்தமான தண்ணீரை பார்க்கவே ஆசையாக இருக்கும் இவர்களுக்கு. விளையாண்டு கலைத்து போகையிலும் தாகமாக இருக்கையிலும் அவர்களுக்கு குடிக்க இந்த ஓடை தண்ணீர் தான்.

ஆனால் இன்று, தண்ணீர் கலங்கி சற்று அழுக்காக இருக்க, அங்கு அங்கே குப்பை குளங்களாக கொசுகளும் ஈக்களும் அதையே சுற்றிய வண்ணமாக இருக்கையில் பார்க்கவே சகிக்கவில்லை மணிக்கு... அவன் ஆசை ஆசையை தேடி வந்த ஆருவி இது இல்லை என்பது போல் இருந்தது அவனுக்கு.. ஏன் இப்படி ஒரு நிலையில் இருக்கின்றது???? தெரியவில்லை அவனுக்கு... யாரிடம் கேட்பான் அவன்...

தூரத்தில் எங்கோ ஆரவாரமாக சத்தம் கேட்க திரும்பி பார்த்தான், அங்கே ஆண்களும் பெண்களும் ஆருவியில் குளித்துக்கொண்டிருந்தனர்... அதில் ஒருவர் குப்பையை மேலேளிருந்து தூக்கி போட அது ஓடையில் மிதந்து வந்து ஓர் இடத்தில் நின்றுவிட்டது.. அங்கே ஏதோ அடைத்து இருக்க தண்ணீரும் போக வழி இல்லாமல் அங்கேயே தேங்கி நின்றது!!!

மணி மெல்ல நடந்து அந்த குப்பை பையை எடுத்து அருகே இருந்த குட்பை தொட்டியில் போட்டு திரும்பி பார்க்கையில் மீண்டும் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது! அதை பார்க்கையில் அவனுக்கு ஆனந்தம்... மீண்டும் மேலே பார்த்தான் பலர் இன்னும் குளித்த வண்ணம் இருந்ததனர்...

மணிக்கு ஏன் இவர்கள் இப்படி இவ்விடத்தை அசுத்தம் செய்தனர் கேட்கும் வேண்டும் போல இருந்தது... பாவம் அவன் ஒருவனால் என்ன செய்து விட முடியும்!!! அங்கு நிறைய குட்பை தொட்டிகள் இருந்தாலும் குப்பைகள் என்னவோ தண்ணீரில் மிதித்துக்கொண்டிருந்தது..

அங்கே இருந்து நடந்து செல்லுகையில் அவனின் கால்கள் அவனும் பாலுவும் விளையாடும் இடம் நோக்கி சென்றது.  இதுதான் அவன் பாலுவை இறுதியாக பார்த்த இடம். வாழ்வில் என்றும் மறக்க முடியாத இடமும் அது.. அதும் அவர்கள் இறுதியாக இங்கு இருந்த நாளை மறக்க முடியாதவை!

சிறு தவறா இல்லை விளையாட்டின் ஆர்வமா? அவர்கள் மர கிளையிலிருந்து ஓடையில் குதித்து விளையாடுகையில் பாலு சற்று ஆழத்தில் குதித்து விட அவனால் மேலே வர முடியாமல் போனது.

இதை பார்த்த மணிக்கு என்ன செய்ய வேண்டும் என புரியவில்லை... அவனுக்கு நீச்சல் தெரியாதே அவனை எப்படி காப்பாற்றுவது...

கொஞ்சம் கொஞ்சமாய் தண்ணீரில் மூழ்கிக் கொண்டு இருந்தவனை ஓடும் தண்ணீர் வேறு பக்கம் இழுத்து சென்றது... கரையின் ஓராமாக இவனும் ஓட கண்களில் கண்ணீர் வழிய துடங்கியது.

சிறுவயத்தில் துடங்கிய நட்பு இன்று அவனை இழந்து விடுவோமா என்பதை கூட நினைத்துப்பார்க்க முடியவில்லை அவனால்!!! அங்கே கரை ஓரம் இருந்த உடைத்திருந்த நீட்டு கிளையை தூக்கி பாலுவிடம் போட அவனால் அதை பிடிக்க முடியவில்லை...

பாலு அவனையும் அறியாமல் மயக்கயத்திற்கு செல்ல அவனின் உடல் தண்ணிரில் மூழ்கியது!!! இதை பார்த்த மணி அழுகையுடனே தண்ணீரிக்குள் செல்லுகையில் அவனை யாரு தூக்கி தரையில் போட்டு உள்ளே சென்று பாலுவை தூக்கி கரைக்கு வந்தார் பாலுவின் அப்பா.

பாலுவின் அப்பாவை அங்கே எதிர்பார்க்கதால் அவனுக்கு அதிர்ச்சியாகவும் கூடவே பயமாகவும் அதேசமயம் மகிழ்ச்சியாகவும் இருந்தது.. மணியின் மனதில் ஒரு வேண்டுதல் அவனுக்கும் ஒன்னும் ஆககூடாது என்று!!!

பாலுவை கரைக்கு தூக்கி வந்தவர் அவனை தலைக் கீழாக தொங்கப்போட அவன் முழுங்கிய தண்ணீர் எல்லாம் வெளி வந்தது. ஆனால் அவனுக்கு இன்னும் மயக்கம் தெரியவில்லை... மணி பாலுவை நெருங்க அவனின் அப்பாவின் கோவ பார்வைக்கு பதில் சொல்ல முடியாமல் போனது அவனால்..

“இனி நீ இவனை பார்க்க வரக்கூடாது.. இவனும் உன்னை தேடி வரமாட்டன் சொல்லிவிட்டு பாலுவை தூக்கி தோளில் போட்டு நடந்தார்.. அவர் சென்ற திசையை பார்த்த படி நின்ற மணிக்கு இனி தன் நண்பனை பார்க்கவே முடியாது என்பது புரிய அவனுக்கு அழுகை வந்தது...

ஏனோ இவர்களின் விளையாட்டு வினையாகி ஒரு உயிருக்கு ஆபத்தை விளைவிக்க இருந்தது. இதற்க்கு தான் பெற்றோர்கள் அல்லது பெரியவர்கள் இல்லாமல் இம்மாதிரி இடத்திற்கு வரக் கூடாது என சொல்லுகிறார்களோ. ஒரு வேலை இவனுக்கு ஏதும் ஆகி இருந்தால், நினைத்தும் பார்க்க முடியவில்லை மணியால்! அதன் பின்னர் மணி பாலுவை பார்க்கவில்லை. மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும் தனது நண்பனின்  பிரிவை ஏற்துக் கொண்டான்.

பழைய நினைவுகளில் அவன் அதே ஓடையுன் அருகே அமர்ந்து இருக்க, தூரத்தில் கேட்ட குரலில் அவன் அவரசமாக திரும்பிப் பார்த்தான். “டேய் ரொம்ப நாலா இந்த பக்கம் வாராமல் இருந்துச்சி, இப்போ மீண்டும் வந்து இருக்கு தூரத்தி விடுங்க” சொல்ல வேகமாக மரத்தின் மேல் ஏறி வேறு கிளைக்கு தாவி சென்றது மணி எனும் அந்த குரங்கு ;)

This is entry #148 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - நட்பு

எழுத்தாளர் - வளர்மதி

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.