(Reading time: 17 - 34 minutes)

விளையாடாம செயினை கொடுங்க அஜய்...” என்றாள்.

“நீ வாய்க்குள்ள முனுமுனுத்தது கூட எனக்கு கேட்டுச்சு... அதையும் எங்க மம்மி கிட்ட சொல்றேன் இரு... செயின் எல்லாம் தர முடியாது....” என்றவன், அவள் மீண்டும் முறைப்பதை கவனித்து விட்டு,

“முட்டைக் கண்ணை காட்டி பயமுறுத்தாதே...! என்ன தான் இருந்தாலும் நீ என் பொண்டாட்டி... உன்னை அப்படியே அம்போன்னு விட்டுற கூடாது... வேணா வேற ஒரு ஆல்டர்னேட்டிவ் சொல்றேன்... லாஸ்ட் மனத் வந்த நம்ம ஆனிவர்சரிக்கு நான் லேட்டா விஷ் செய்தேன்னு நான் வாங்கி கொடுத்த செயினை வாங்கிக்காமல் இருக்கீயே, அது இங்கே தான் இருக்கு... அதை வேணா எடுத்துக்கோ...” என்றான்.

“அஜய்....”

“நோ அதர் கோ... பிரீத்ஸ்...!”

“இருங்க உங்களை கவனிச்சுக்குறேன்....” என்றபடி கார் கம்பார்ட்மென்ட்டை திறந்து அதிலிருந்த நகை டப்பாவினுள் இருந்த செயினை எடுத்து அணிந்துக் கொண்டாள் அவள்.

“தாலியே தேவை இல்லை... நீ தான என் பொண்டாட்டி...” என்று அவன் சிச்சுவேஷன் பாடல் பாடி அவளை வெறுப்பேற்ற,

“கல்யாணத்துக்கு முன்னாடி அலைபாயுதே படம் பார்த்துட்டு தாலி எங்கேன்னு தேடின ஷாலினியை திட்டின என்னை இப்படி மாத்திட்டீங்களே! ரொம்ப கெட்டவர் நீங்க!” என அவனுக்கு கேட்கும் வண்ணம் முனுமுனுத்தாள் அவள்...

“ஆமாம் ஆமாம்... வாழ்க்கையே வானவில் மாதிரி கலர்புல்லா என்ஜாய் செய்துட்டு இருந்த என்னை இப்படி மாத்திட்டீயே, நீ தான் பேட் கேர்ள்!” என்று அவளுக்கு பதில் சொன்னான் அவன்...

“க்கும்...” அவள் அலுத்துக் கொள்ள,

“க்கும்...” என அவனும் அவள் பாணியிலேயே செய்ய,

இருவரும் வாய் விட்டு சிரித்தனர்!

“அப்பா, கிரீன் சிக்னல் போட்டாச்சு...” என்ற பின் சீட்டில் இருந்து சமிகாவின் குரல் கேட்டது.

து தான் இவர்களின் குடும்பம்...!

ஒரு பிரசித்தி பெற்ற வங்கியில் மேனஜராக இருந்தாலும் சமையலறை வேலைகள், வீட்டு வேலைகள்என பலதையும் இழுத்து போட்டு செய்வான் அஜய்.

ஒரு பத்திரிக்கையில் எழுத்தாளராக பணியாற்றும் பிரீத்தா, கணவனுக்கு குடும்ப பட்ஜெட் துவங்கி, சின்ன & பெரிய குடும்ப நிர்வாகம் வரை உதவுவாள்.

அவர்களுக்குள் நீ – நான் என்ற போட்டி எதுவுமில்லை!

ன்றைய பார்ட்டி நல்ல விதமாகவே சென்றது.

அஜய்யுடன் வேலை செய்யும் கலையரசனின் குடும்பம் பிரீத்தாவிற்கும் முன்பே  பரிச்சயமானது தான்...

கலையின் மனைவி மஞ்சு மற்றும் அன்றைய விருந்திற்காக வந்திருந்த மற்ற பெண்களுடன் எப்போதும் போல கலகலவென உரையாடிக் கொண்டிருந்தாள் பிரீத்தா.

புதிதாக அங்கே வந்திருந்தவர்களை மற்றவர்க்கு அறிமுகம் செய்து வைத்தாள் மஞ்சு.... அப்படி அறிமுகமான ஒருத்தி தான் பூர்ணி.

வழக்கமான பெண்கள் பேச்சு, கலாட்டா என நேரம் செல்ல, பேச்சுவாக்கில் பிரீத்தாவிடம்,

“...நானும் அப்பப்போ உங்களை மாதிரி இருக்க முயற்சி செய்வேன் ப்ரீத்தா... ஆனால் எங்கே முடிய மாட்டேங்குது...” என்றாள் மஞ்சு கேலியாக....

பிரீத்தா பக்கம் ஆச்சர்யமாக பார்த்த பூர்ணி,

“அப்படி என்ன?” என்று புரியாமல் கேட்டாள்.

“சும்மா கலாட்டா செய்றாங்க... “ என பிரீத்தா நழுவ முயற்சிக்க, மஞ்சு அவளை விடவில்லை...

“அவங்க வீட்டுல எப்போவும் ஜஸ்ட் மேரிட் போல தான்... அவங்களுக்கு எல்லா வேலையும் அவங்க ஹஸ்பன்ட் செஞ்சு தருவார்... குக்கிங், வாஷிங் எல்லாமே...”

“அப்படியா? நீங்களும் வேலைக்கு போறீங்களா?” என்றுக் கேட்டாள் பூர்ணி.

ஒரு பத்திரிக்கையின் பெயரை சொல்லி,

“... கான்டன்ட் ரைட்டரா இருக்கேன்” என்றாள் பிரீத்தா.

“ஓ...! ஆனாலும் அவர் மேனேஜர் தானே? பாவம் ஆபிசும் போயிட்டு இதெல்லாமும் செய்ய கஷ்டமா இருக்காதா...?”

“ம்ம்... நானும் எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன் கேட்க மாட்டேங்குறார்...” என்றாள் பிரீத்தா மனதில் இருந்த கணவன் பற்றிய பெருமையை மறைக்க முயன்றபடி.

“ஓஹோ...! அவரே எல்லாம் செய்தால் நீங்க என்ன செய்வீங்க? வீட்டுல சும்மாவே இருப்பீங்களா??? பாவங்க அவர்...”

பூர்ணியின் குரலில் கேலியோ, பத்த வைக்க வேண்டும் என்ற ஆர்வமோ எதுவுமில்லை... சாதாரணமாகவே இருந்தது...

“பசங்க, என் வேலைன்னு ஏதாவது இருக்கும்..” என அப்போதைக்கு உடனே பதில் சொன்னாலும் கூட பூரணியின் கேள்வி பிரீத்தாவின் நினைவுடன் ஒட்டிக் கொண்டது...

எதையோ தவறாக செய்கிறாளோ என்ற கலக்கம்...! ஒரு விதமான குற்ற உணர்வு....!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.