(Reading time: 17 - 34 minutes)

வனிடம் பணம் பெற்றுக் கொண்டு பூக்காரி நகர்ந்து செல்ல, மனைவி பக்கம் பார்த்தான்.

பூவை வாங்கிக் கொள்ள அவள் கையை நீட்ட, இல்லை என்பது போல தலை அசைத்தவன், அவள் கூந்தலை தொட்டுக் காட்டினான்.

இதுவும் கூட அவளுக்கு பிடித்தது தான் என்றாலும்,

“ஹேர் பின் இல்லை...” என்றாள் அவள்...

“பிரீத்ஸ்... நான் எப்போவுமே வெல் ப்ரிபேர்ட்... எல்லாம் அங்கே இருக்கு... எடு...” என்றவன், அவள் எடுத்துக் கொடுத்த ஹேர் பின்னைக் கொண்டு அழகாக பூவை சூடி விட்டான்...

“ம்ம்ம்... இப்போ சொல்லு, என்ன விஷயம்? என்ன ஆச்சு உனக்கு?”

“ஒண்ணுமில்லை அஜய்... நீங்களா எதையோ நினைச்சுக்குறீங்க....”

“பொய் சொல்லாத... நீ உண்மையை சொல்லாமல் இங்கே இருந்து நாம கிளம்ப போறதில்லை...”

“அஜய்... பசங்க...” என்று அவள் சொல்ல தொடங்கியது அவனின் பார்வையில் நின்று போனது...

அவனின் முகத்தில் இருக்கும் தீவிரம் புரிய,

“வேற ஒன்னுமில்லை அஜய், நம்ம பேமிலில எனக்குன்னு இருக்க பார்ட்டை நான் சரியா செய்யனும்ல...?” என்றாள்.

“அந்த பார்ட் எங்கே இருக்கு, கிட்சன்லையா இருக்கு?’

“எப்படி இருந்தாலும் அதெல்லாம் நான் தானே செய்யனும்? ப்ச்... நீங்க தேவையே இல்லாமல் ரொம்ப யோசிக்குறீங்க... சின்ன விஷயத்தை பெரிசு படுத்துறீங்க... வாங்க வீட்டுக்கு போகலாம்...”

“நான் ரொம்ப யோசிக்குறேன்...??? ஹ்ம்ம்.... ப்ரீத்ஸ், ஏன் உன் மனசில என்ன இருக்குன்னு கூட என் கிட்ட சொல்ல மாட்டேங்குற? என்னடா ஆச்சு உனக்கு? ஏன் இப்போ எல்லாம் முன்னாடி மாதிரி ஃப்ரீயா இருக்க மாட்டேங்குற? என்கிட்டே ஜாலியா பேச மாட்டேங்குற? நம்ம குடும்பத்துல முக்கியமானவளே நீ தான்... உனக்கு அதுல என்ன குழப்பம்?”

“ப்ச்... சும்மா சொல்லாதீங்க அஜய்...’

“என்ன சும்மா சொலலாதீங்க? சீரியஸா பேசிட்டு இருக்கேன் நான்...”

“ப்ச்... போங்க அஜய்... ஒரு மனைவியா நான் எதையும் சரியா செய்ததில்லை...”

“என்ன செய்யலை?”

“ஒரு நல்ல மனைவி, வீட்டை நல்ல படியா மெயின்டெயின் செய்யனும், நல்ல விதமா சமையல் செய்யனும், பேமிலியா நல்லபடியா கவனிச்சுக்கனும்....”

“அப்படியா??? எந்த ரூல்ஸ் புக்ல இது எல்லாம் இருக்கு?”

அவனின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று புரியாமல் விழித்தாள் பிரீத்தா.

“என்ன முட்டை கண்ணை வச்சு முழிக்குற??? மனைவினா இதெல்லாம் செய்யனும்னு யார் எங்கே ரூல்ஸ் போட்டது?”

“ப்ச்... நம்ம அம்மாலாம் அப்படி தானே?”

“அதனால?”

“சும்மா, சும்மா கேள்வி கேட்காதீங்க... அதெல்லாம் அப்படி தான்...”

“சரி அதெல்லாம் அப்படியே இருக்கட்டும்... இந்த ஞானோதயம் உனக்கு வர காரணமா இருந்தது என்ன?”

“....”

“பிரீத்ஸ், இத்தனை வருஷத்துல நீ என் கிட்ட இருந்து எதையும் மறைச்சதில்லை, மறைக்கவும் மாட்டன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு, அதை பொய்ன்னு சொல்ல போறீயா?”

அதற்கு மேல் அவனிடம் மறைக்க முடியாமல், சின்ன தயக்கத்துடன், அன்று கலை வீட்டில் நடந்ததை சொன்னாள் பிரீத்தா.

“அப்போ நீங்க என்ன தான் செய்வீங்கன்னு அவங்க கேட்டப்போ என்ன சொல்றதுன்னே தெரியலை அஜய்... எல்லா வேலையையும், பொறுப்பையும் உங்க கிட்ட விட்டுட்டு, நான் சும்மா இருக்க மாதிரி தோணிச்சு... ரொம்ப கில்டியா இருந்தது...”

மனைவியை அமைதியாக ஒரு சில வினாடிகள் பார்த்த அஜய், மெல்ல புன்னகைத்தான்.

“அப்பப்போ, நீயும் குழந்தை மாதிரின்னு நினைப்பேன்.. அதை சரின்னு ப்ரூவ் பண்றீயே பிரீத்ஸ்...”

“இல்...”

“இரு இரு... நான் பேசி முடிச்சிடுறேன்... நம்ம பசங்க கிட்ட பொய் சொல்ற கெட்ட பழக்கம் இல்லை... எதிர்த்து பேசுற, சண்டை போடுற பழக்கமும் இல்லை... பிடிச்ச கேம் விளையாடினா கூட, போதும் போய் படி, வந்து சாப்பிடுன்னு சொன்னால், எதுவுமே சொல்லாமல் அப்படியே கேட்குறாங்களே, அந்த குணம் எப்படி அவங்களுக்கு வந்ததுன்னு நினைக்குற??? எல்லாம் உன் வளர்ப்பு தானே? நீ அவங்க மேல கவனம் வச்சு பொறுப்பா எல்லாம் செய்றதால தானே பசங்க அப்படி இருக்காங்க?”

“அம்மா & மனைவின்னா, சமைக்கவும், வீடை பார்த்துக்கவும்ன்னு இல்லை... ஒரு காலத்துல பொண்ணுங்க படிக்கலை, வேலைக்கு போகலை... வீட்டிலேயே இருந்தாங்க... அந்த காலத்தில அதை மட்டும் செய்திருக்கலாம்... காலம் மாறிட்டே இருக்கு... இப்போ ஒரு மனைவியோட ரோலும் மாறி போச்சு..”

“நான் சம்பாதிச்சாலும், இந்த குடும்பத்தோட தலைவனா இருந்தாலும் கூட நீ தான் என்னையும், நம்ம குழந்தைகளையும் இயக்கும் உயிர் துடிப்பு... உடம்புல எல்லா பார்ட்டும் நல்லா இருந்தாலும் உயிர் இல்லைனா அதை வச்சு என்ன செய்றது? வேஸ்ட் தானே?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.