(Reading time: 17 - 34 minutes)

நான் உனக்கு கிட்சன்ல ஹெல்ப் செய்றேனா, நீ எனக்கு ஹெல்ப் செய்ததே இல்லையா?? நான் பேங்குல வேலை செய்றேன்னு தான் பேரு... உன்னை கல்யாணம் செய்துக்கிட்டப்போ என் கிட்ட என்ன இருந்தது? இந்த வீடு, கார், கடன் இல்லாமல் நாம வாழும் இந்த வாழ்க்கை, நம்ம சந்தோஷம்... இது எல்லாம் எங்கே இருந்து வந்துச்சு??? உன்னோட துணையால, அறிவால வந்தது தானே? நீ எனக்கு ஹெல்ப் செய்ற... நான் உனக்கு ஹெல்ப் செய்றேன்... வாட் இஸ் ராங் இன் தட்?”

“அங்கே பார்ட்டில அவங்க சொன்னது போல traditional ஆக நாம இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் கெட்டதா எதையும் செய்யலையே... கணவன் மனைவி உறவு என்பது மத்த எந்த உறவு போலவும் இல்லை... இதில் அம்மாவோட பாசம், அப்பாவோட அக்கறை, நண்பனோட நட்பு, காதலனோட காதல்ன்னு எல்லாமே ஒன்னா இற்கு... மனம், அறிவு, உடல்ன்னு எல்லாமே சம்மந்தப்பட்ட ஒரே உறவு இது மட்டுமே தான்... இங்கே ரூல்ஸு, ரெகுலேஷன்னு எல்லாம் எதுவும் இல்லை... பொறுப்பா, குடும்பத்தை நல்லவிதமா நடத்தனும்... அதை தானே நாம செய்துட்டு இருந்தோம்...?”

“அந்த பூர்ணி அவங்களுக்கு தெரிஞ்சதை சொன்னாங்க, அதை சரின்னு நாம எடுத்துக்கனும்னு கட்டாயம் இல்லையே... உன்னை போய் அவங்களோட லைப்ஸ்டைலை மாத்துன்னு நான் சொல்லலையே... நல்லதை எப்படி வேணா செய்யலாம்... தப்பே கிடையாது... இப்படி தான் செய்யனும்னு யாரும் சொல்ல முடியாது!”

“கணவன் – மனைவி உறவு என்பது இன்பம் துன்பம் எல்லாத்திலேயும் ஒன்னா துணை போகும் உறவு... எதிலேயும் நீ பாதி நான் பாதின்னு சொல்லும் உறவு...... யோசிச்சு பாரு, லாஸ்ட் சில நாளா, நம்ம வீட்டுல funன்னு ஏதாவது இருந்ததா??? அப்படி mechanical வாழ்க்கை வாழுறது தான் உனக்கு பிடிச்சிருக்கா???”

“அஜய், நீ என்னோட ஹஸ்பன்ட், என்னோட பிரெண்ட்ன்னு நீ இருந்தப்போ, நம்ம லைஃப் எவ்வளவு அருமையா இருந்தது??? நீ ஏன் அடுத்தவங்களை பார்த்து காபி அடிக்கணும்? அதுக்கு தேவையே இல்லையே... வீட்டு நிர்வாகத்தில நீ எனக்கு உதவுற, வீட்டில இருக்க வேலையை நான் உன்னோட பகிர்ந்துக்குறேன்... அதை நான் செய்றதால உனக்கு வேலையே இல்லாமல் போச்சுன்னு சொல்றது சரியா??? நீ எதுவுமே செய்யலைன்னு சொல்றது கரக்ட்டா? நீ தான் எங்க மூணு பேருக்கும் ஆணி வேர் பிரீத்ஸ்...”

“இப்போ சொல்லு நீ செய்றது சரியா? யாராவது ஏதாவது சொன்னா அப்படியே கேட்டுப்பீயா???”

அவன் தன் பெரிய லெக்சரை முடித்த பின்பும் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்த பிரீத்தாவை கேள்வியாக பார்த்தான் அஜய்.

“ஹி ஹி... பேசி முடிச்சிட்டீங்களா? ஹப்பா.... எவ்வளவு பெரிய்யய்ய டையலாக்... சும்மா உட்கார்ந்து கேட்குற எனக்கே கடியா இருந்தது... பேசின உங்களுக்கு எப்படிங்க இருந்தது???”

சீரியசாக லெக்சர் கொடுத்து விட்டு அவளின் பதிலுக்கு காத்திருந்தவன், அவளின் கிண்டலான பதிலில் ஒரு கணம் திகைத்தான்...!

ஆனால் அவளின் பதிலே அவள் பழைய formக்கு வந்துவிட்டதை உணர்த்த,

“எனக்கு எப்படி தெரியும்... யாரோ என்னவோ சொன்னாங்கன்னு முகத்தை பத்து மீட்டர் நீளத்துக்கு தூக்கி வச்சிருந்தவங்களை தான் கேட்கனும்...” என்றான் அவன்...

அவனுடைய முழு நீள பேச்சில் ஏற்கனவே குழப்பங்கள் மறைந்து, குற்ற உணர்ச்சிகள் கரைந்து போக இருந்தவள்,

“ஹையோ போதும்... பசங்க வர டைம் ஆச்சு... காரை ஸ்டார்ட் செய்ங்க...” என்றாள்.

“நான் ஒருத்தன் உனக்காக சீக்கிரம் பெர்மிஷன் போட்டுட்டு வந்திருக்கேன்... ஆனால் உனக்கு பசங்க தான் முக்கியம்...???”

அவன் தன் வழக்கமான சீண்டலை தொடங்க,

“ஆமாம்... அப்படி தான்... இப்போ என்ன...?” என்று அவளும் சளைக்காமல் பதில் சொன்னாள்.

“என்ன? ஒன்னும் இல்லை....”

காரை ஸ்டார்ட் செய்தவன், கிளப்பும் முன், குனிந்து அவளின் நெற்றியில் முத்தமிட்டான்...

உதடுகளை அவளின் நெற்றியிலே வைத்து,

“ஐ லவ் யூ பிரீத்ஸ்... இன்னொரு தடவை விளையாட்டுக்கு கூட என்னை அப்படி அந்நியமா நினைச்சு பார்க்காத... என்னால தாங்க முடியாது... யூ ஆர் மை லைப்...” என்றான்.

அவளுக்கு மெய் சிலிர்த்தது... வாழ்வில் எத்தனையோ மகிழ்ச்சியான தருணங்களை சந்தித்திருக்கிறாள்...

அம்மா, அப்பா யார் என்று தெரிந்துக் கொண்டது தொடங்கி, பெற்றோர், உடன்பிறந்தவர்களின் பாசம், அஜயை முதலில் சந்தித்த நாள், திருமணம், குழந்தை என்று உறுதியான நேரம், குழந்தை பிறந்த அந்த வினாடி சுகம்... இன்னும் எத்தனையோ...

ஆனால், அது அனைத்தையும் விட இந்த வினாடி பெரியதாக அவளுக்கு தோன்றியது... மனம் நெகிழ,

“செய்ய மாட்டேன்... அஜய்....” என்றாள்...

அவளிடம் இருந்து விலகி, தன்னை இயல்பாக்கி கொண்டவன்,

“சும்மா, ஏதோ விளையாட்டுக்கு சொன்னால், நீ என்ன சென்டிமென்டலா, ஆமாம் செய்ய மாட்டேன்னு பதில் எல்லாம் சொல்ற? ஆனாலும் உனக்கு டூ மச் நினைப்பு தான்...” என்றான்.

அவனை பார்த்து தன் பாணியில் பொய்யாக முறைத்தவள்,

“அப்படியாவது காரை ஸ்டார்ட் செய்வீங்கன்னு ஒரு நம்பிக்கையில தான் சொன்னேன்...“ என்று அவனுக்கு பதில் சொன்னாள்...

அப்படியே, தங்களின் வழக்கமான கலாட்டா பேச்சுடன் மன நிறைவுடன் தங்களின் இல்லத்தை நோக்கி பயணம் செய்ய தொடங்கினர் அந்த தம்பதியினர்!

This is (guest) entry #160 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - என் கணவன் என் தோழன்

எழுத்தாளர் - பிந்து வினோத்

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.