(Reading time: 8 - 16 minutes)

"சிவன்யா!"சட்டென மலர்ந்தன அவன் முகம்!!எவ்வளவு நொடிகள்??ஓரிரு நொடிகள் தான்!அதற்குள் மீண்டும் ஏதும் அறியாதவனாய் முகத்தை உருமாற்றினான்.மனமோ,துள்ளிக் கொண்டு எழுந்தது!!இது மூன்றாம் சந்திப்பு!!ஏதோ ஒன்று அவளை காணும் பொழுதெல்லாம் மனதில் வசந்தத்தை வீச கூறுகிறது!!அவளிடம் பேச விழைந்த மனதிற்கு தடையிட்டான்.அதற்குள்ளாகவே,புத்தியோ பேச காரணம் தேடியது!!

'ச்சே!என்ன பெண் இவள்?என்னை என்னிடமிருந்தே பறித்துக் கொண்டாள்?"என்ற மனதினைப் பார்த்து புத்தி சிரித்தது.

"என்ன மனம் நீ?இன்று அவளிடம் வசப்பட்டு நிற்கிறாய்!"என்று!!

இவ்வளவு எண்ணங்களும் அனுக்ஷணத்தில் அவனை முழுதும் ஆட்கொள்ள,பரிதவித்துப் போனான் அசோக்.அவனுக்குள் இருந்த மறுபக்கம் திடீரென உயிர்த்தெழுந்து "இதெல்லாம் சரிதானா?"என்ற வினாவை முன் வைத்தது.அவனுக்கு எப்போதும் ஒரு நம்பிக்கை துணை நிற்கும்!எப்போதும் தனது அன்னை தன்னை கவனிக்கத் தான் செய்கிறார் என்ற எண்ணம் அது!!ஒருவேளை,அவர் பார்வையில் இது தவறென தோன்றினால்??என்ற வினாவும் மனதில் எழுந்தது.

"சிவன்யா மிஸ்ஸை உனக்கும் தெரியுமா?"-வினா எழுப்பிய மழலைக்கு பதில் அளிக்க இயலாமல் திகைத்தான் அவன்.

"குருஜி எங்களுக்கு பாடம் எடுக்க வாரம் ஒருமுறை வர சொல்லி இருக்காங்க!"

"ஓ...!"

"ரொம்ப நல்ல மிஸ் தெரியுமா?குருஜி சொல்லுவாங்க...இவங்க எங்களுக்கு பாடம் எடுக்க ஃபீஸ் கூட வேணாம்னு சொல்லிட்டாங்களாம்!சூப்பரா மேக்ஸ் சொல்லி தராங்க அசோக்!எனக்கு ஈஸியா புரியுது தெரியுமா!"-பிஞ்சு மொழியில் புகழாரம் சூட்டினான் மகேஷ்.அதற்குள்ளாகவே அவளே அங்கு வருவது அவன் கண்களுக்குப் புலப்பட்டது.

"குட்மார்னிங் மிஸ்!"என்றனர் ராகமாய்!!அதற்கு பதிலாய் வெளியானது அவளது கன்னங்குழி தெரிய வெளிப்பட்ட புன்னகை.

"மிஸ்!மிஸ்!இவர் தான் அசோக்!எங்களுடைய ஃப்ரண்ட்!"-அசோக்கை அறிமுகப்படுத்தினாள் பவி.

"அசோக்குக் கூட மேக்ஸ் வராது!நீங்க எங்களுக்கு சொல்லிக் கொடுக்கும் போது அசோக்கிற்கு கூட சொல்லி தாங்க!"-சட்டென காலை வார,எழுந்த சிரிப்பை கட்டுப்படுத்த இயலாமல் திணறினாள் சிவன்யா.சில நொடிகளில் அவனதுப் பார்வை தன்னை மொய்ப்பதை உணர்ந்தவள்,இயல்புநிலைக்கு வந்தாள்.

"ஸாரி சார்!உங்களைப் பார்த்ததில் சந்தோஷம்!"

"எனக்கும் தான்!"

"தப்பா எடுத்துக்கொள்ள வேணாம்!அன்னிக்கு நீங்க கலெக்டர்னு தெரிந்ததும் எப்படி ரியாக்ட் பண்றதுன்னு புரியலை!"-ஸ்ருதி இறங்கியது குரலில்!!

"கலெக்டரும் மனிதன் தானே!"-சாதாரணமாய் பதிலளித்தான் அவன்.காலம் கடக்க,நீண்ட நேரமாய் உரையாடினர் இருவரும்!எவ்வளவு நேரம் என்றால்...அந்த மழலைகள் அவர்களை விலக்கி விடும் வரை!!

"சரிங்க சார்!நான் கிளம்புறேன்!"

"ம்...."-ஏனோ அப்பிரிவு ஏற்றுக்கெள்ளப்படும் பிரிவாகவே இல்லை இருவருக்கும்!!பிரிந்தாக தானே வேண்டும்!பிரிவில் தானே அன்பின் சுவை கூடும்!!

"ப்போ பார்த்தாலும் இந்தக் கிழவனிடம் கைநாட்டு வாங்கணுமா?"-சலித்துக்கொண்டான் அதர்வ்.

"என்னப் பண்ண சொல்ற?சொத்து மொத்தம் அவர் பெயரில் தான் இருக்கு!அது உன் பெயருக்கு மாறினால் அவரை இங்கே வைத்திருக்கணும்னே அவசியமில்லையே!எதாவது ஆசிரமத்தில் கொண்டுப்போய் விட்டுவிடலாம்!"

"ப்ச்...எப்போ பார்த்தாலும் இதையே சொல்லு!ச்சே...!சீக்கிரம் சொத்தை என் பெயரில் மாற்றுகிற வழியைப் பார்!இந்தப் பத்திரத்தில் கைநாட்டு வாங்கி வை!கை,கால் விழுந்தாலும் அவனையே நம்பி வாழ வேண்டியதா இருக்கு!"-சலிப்புடன் வெளியேறினான் அதர்வ்.அந்தப் பத்திரத்தை எடுத்துப் படித்துப் பார்த்தார் அவன் தாய் மதுமதி.இருபது கோடி ரூபாய் நிலம் வாங்குவதற்கான கிரய பத்திரம்!!

"ம்...பையன் விவரம் தான்!"-பெருமிதமும் பட்டுக் கொண்டார்.

பத்திரத்துடன் அந்த அறைக்குள் நுழைந்தார் மதுமதி.மீண்டும் படுத்தப்படுக்கையாய் விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தார் சூரிய நாராயணன்.

நேராக அவர் அருகில் வந்தவர்,அவரது கட்டை விரலில் மை தடவினார்.மனையாளின் இச்செயல் சட்டென அச்சம் கொள்ள வைக்க,தனது கரத்தை அவர் பிடியிலிருந்து விடுவிக்க முயன்றார் சூரிய நாராயணன்.

"ஏ...!அசைக்காதே!"-தனது அதிகாரத்தை பிரயோகப்படுத்தி கைநாட்டுப் பெற்றார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.