Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
<h3><strong>October 2018 Stars</strong></h3>

October 2018 Stars

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --
1 1 1 1 1 Rating 5.00 (7 Votes)
தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 43 - ஆதி - 5.0 out of 5 based on 7 votes

43. மலர்கள் நனைந்தன பனியாலே - ஆதி

Malargal nanainthana paniyale

ந்திதா காலையில் கண் விழித்த போது, முதலில் அவளின் கவனத்தை ஈர்த்தது அந்த அறையில் வெளிச்சம் வராமல் தடுக்கும் விதத்தில் மூடப் பட்டிருந்த திரை சீலைகள் தான்.

அது உதயின் வேலை என புரிய அவள் முகத்தில் தானாக புன்னகை தோன்றியது.

அவளின் அருகே அவளை ஒட்டி இருந்த தலையணையை பார்த்தவளின் புன்னகை பெரிதானது.

உதய் அவன் இருந்த இடத்தில் அவளுக்காக தலையணையை வைத்து விட்டு சென்றிருக்கிறான்...

க்கும்... சின்ன குழந்தைக்கு டெட்டி பேர் கொடுப்பது போல தான்... என செல்லமாக மனதினுள் சிணுங்கியபடி, தூக்கம் முழுவதுமாக கலையாத கண்களுடன் அருகே இருந்த கடிகாரத்தில் நேரம் பார்த்தவள், மணி ஏழரையை நெருங்கி கொண்டிருப்பதை உணர்ந்து எழுந்து அமர்ந்தாள்.

எப்போதும் எட்டு, எட்டரை போல கிளம்பும் உதய், இன்று இவ்வளவு சீக்கிரமா கிளம்பி விட்டான் என்ற கேள்வியுடன் அருகே இருந்த மேஜை மீதிருந்த மொபைலை கையில் எடுத்து கணவனை அழைத்தாள்.

முதல் ரிங் முழுவதும் முடியும் முன்பே, அழைப்பை ஏற்ற உதய்,

“குட் மார்னிங் நதி டியர்” என்றான்

“குட் மார்னிங் உதய்! எப்படி டக்குன்னு போனை எடுத்தீங்க? “

“உன் கிட்ட ஒரு பை கூட சொல்லாமல் வந்துட்டேனேன்னு யோசிச்சிட்டு, போன் செய்யலாமா வேண்டாமான்னு இருந்தேன்... அதுக்குள்ளே நீயே கால் செய்துட்ட...”

“அதாங்க டெலிபதி! ஆமாம், என்ன இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்டீங்க?”

“இது என்ன கேள்வி நதி? நான் தான் நேத்தே சொன்னேனே பெரியம்மா வீட்டுக்கு போறேன்..”

“ஓ... நிஜமாவே போறீங்களா?”

“ஹேய் என்ன பத்தி என்ன நினைச்ச நீ? உதய் சொன்ன வார்த்தையில் இருந்து பின் வாங்க மாட்டான்.. சொன்னால் சொனனது தான்... கடமை வீரன்!”

“ஹையோ பார்த்து...!”

“சீரியஸ் நதி! பார் டைமுக்கு கிளம்பிட்டேன்... உன்கிட்ட சொல்லாமல் வந்துட்டேனேன்னு தான் யோசிச்சிட்டு இருந்தேன்... நீயே போன் செய்துட்ட...”

“ஓஹோ!”

“வெற்றியோடு வருவேன் டியர்... எனக்கு தர வேண்டிய பரிசு ஞாபகம் இருக்குள்ள...?”

நந்திதா அமைதியாக இருந்தாள்...

“ஹேய் நதி...”

“எல்லாம் ஞாபகம் இருக்கு ஆனால் நீங்க ஜெயிச்சா தானே அதை பத்தி நான் யோசிக்கனும்... பாவம் நீங்கன்னு யோசிச்சிட்டு இருக்கேன்...”

“ஹோய்...! கிட்டத்தட்ட பத்து வருஷம் உனக்கே தெரியாம உன்னை லவ் செய்து, கல்யாணமும் செய்திருக்கேன், இன்னுமா உனக்கு என்ன பத்தி தெரியலை...”

“க்கும்...! பத்து வருஷம்...! ஏதாவது ரெகார்டா இருக்குமோ???”

“உன்னை...! இரு, இரு நான் அண்ணி கிட்ட பேசிட்டு அப்புறம் உன் கிட்ட பேசுறேன்... நீ இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கு...”

“அதையே தான் செய்ய போறேன்... பை பை...”

“பை நதி...”

உதய் அழைப்பை துண்டிக்கவும், அவன் சொன்னதை பற்றி யோசித்த நந்திதா, துளசி புகழ்ச்சிக்கு மயங்குவாளா என்று யோசித்தாள்.

‘லூசு பொண்ணு மயங்கினாலும் மயங்குவாள்... அவளை நம்ப முடியாது’ என முடிவு செய்து, கையிலிருந்த மொபைலையே யோசனையுடன் சில வினாடிகள் பார்த்தாள்...

பேசலாமா, வேண்டாமா என யோசித்தவள், உதயை கொஞ்சம் மண்டை காய விடலாம் தப்பில்லை என முடிவு செய்து மொபைலில் துளசியின் போன் எண்ணை தட்டினாள்.

ந்திதாவிடம் பேசி விட்டு, மொபைலை காலியாக இருந்த சீட்டில் வைத்த உதய், நந்திதாவை பற்றி நினைத்தபடியே காரில் சரத்தின் வீட்டை அடைந்தான்.

துளசியை தனியாக இல்லை என்றாலும், சரத் மற்றும் பெரியம்மா துணையுடன் ஈசியாக சமாதானப் படுத்தி விடலாம் என்ற நம்பிக்கையுடன், காரை பார்க் செய்து விட்டு வீட்டினுள் நுழைந்தான்.

சரத் அப்போது தான் காலை உணவை உண்டுக் கொண்டிருந்தான்... துளசி அவனுக்கு பரிமாறிக் கொண்டிருந்தாள்...

காமாட்சி மகனின் அருகே அமர்ந்து பேசியபடி சாஹித்யாவிற்கு உணவை ஊட்டி விட்டுக் கொண்டிருந்தாள்.

“என்னண்ணா ராஜ உபசாரம் போலிருக்கே! அண்ணி ஒரு பக்கம்.. பெரியம்மா ஒரு பக்கம்... சின்னக் குட்டி ஒரு பக்கம்....! நடத்துங்க நடத்துங்க...” என்றபடி சாதாரணமாக சென்று டைனிங் டேபிளில் காலியாக இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்தவன்,

“பெரியப்பா மட்டும் மிஸ்ஸிங்... எங்கே பெரியம்மா அவர்?” என காமாட்சியிடம் கேட்டான்.

“அவர் ஆபிஸ் கிளம்பி போய் ஒரு மணி நேரம் ஆச்சு... அம்மா, நந்து எல்லாம் எப்படி இருக்காங்க?”

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7  8 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 43 - ஆதிTamilthendral 2017-10-07 01:54
Nandhitha mission ethavathu puyala kilappiricha :Q:
Priya marathukku pinnadi irunthu Santosh pesuratha kettuttu summa vanthirukkalam..
Uday-ku ethavathu prachanaiya :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 43 - ஆதிDevi 2017-10-06 19:36
Nandhitha ... voda Mission success ..aachu :clap: .. Udhay Thulasi kkaga edutha steps .. oothikiche ;-) 8) always Thulasi sema smart :clap: .. Priya andha santhosh kitterndhu escape anadhu great (y) .. Last le vacha suspense enna :Q: why Nandhu shocking :Q: eagerly waiting to know
Nice update Bindu ji :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 43 - ஆதிAdharvJo 2017-10-04 21:31
Well said nandhitha Ji fantastic :hatsoff: :clap: but ninga betting la cheat panitinga :angry: Udai ji u don't worry Bindu ma'am next arrow enan secret ah solli tharuvanga ;-) Cool update Bindu ma'am and priya oda reaction also much appreciated...indha dubukk Sandosh-k idhu podadhey facepalm :yes: sariyana punishment kudunga silly fellow 3:) BTW indha suspense why why why :Q: okay mudinja konjam happy shock ah mathaparungale :D waiting to know watsup la ena vandhu irukkum avanga brain numb aguramathirin therindhu kola. :thnkx: for this cool update ma'am (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 43 - ஆதிU.Banu 2017-10-04 17:12
super update :clap: :clap: :clap: last susbense is not a chance :yes: :yes: :yes:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 43 - ஆதிSaaru 2017-10-04 07:46
Nice update bindhu Ana Ena last la twist. Nalatha tan irukum nu nambuvom
Priya decision super
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 43 - ஆதிChithra V 2017-10-03 23:38
Nice update BV (y)
Last ah nandhitha shock aga enna reason?
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 43 - ஆதிAnubharathy 2017-10-03 22:16
Nice epi :clap: . Nandhitha plan super. And priya udaiya approach padikka poren nu sonnathu super (y) . Enna msg vanthuchu? ntha santhosh ethavathu pannitaano. Waiting to read more :-) .
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 43 - ஆதிsaju 2017-10-03 20:33
NICE UD SIS
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 43 - ஆதிmadhumathi9 2017-10-03 20:25
:Q: eathaavathu problem ah. Nice epi. Waiting to read more Adutha epiyai seekkiram koduppeengala?. :clap: (y) :thnkx: 4 this epi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 43 - ஆதிJansi 2017-10-03 19:07
Marubadiyum suspense aa ?

Nice epi BV
Advice ellam romba nalla iruntatu
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

Today's Specials

Poetry

Chillzee 2018 Stars

Ithaya siraiyil aayul kaithi

Books

Kathalaana nesamo

Jokes

Kathalai pera yathanikkiren

Announcements

Chillzee Stars

Chillzee Contests

Chillzee Featured

Chillzee Forum

அதிகம் வாசித்தவை

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
03
EVUT

PVOVN

NiNi
04
MINN

PPPP

MAMN
05
VD

EMPM

KIEN
06
VMKK

KaNe

KPY
07
Sush

UVME

Enn
08
VVUK

NKU

Tha
09
KI

-

-


Mor

AN

Eve
10
EVUT

ST

NiNi
11
MMSV

PPPP

MAMN
12
GM

EMPM

KIEN
13
ISAK

KaNe

KPY
14
EU

Ame

-
15
VVUK

NKU

Tha
16
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top