(Reading time: 31 - 62 minutes)

23. உன் நேசமதே.. என் சுவாசமாய்..!! - சித்ரா. வெ

love

தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே இருந்தது…. இது செல்வாவிற்கும், நர்மதாவிற்கும் தலை தீபாவளி.. அதனால் நர்மதாவின் பெற்றோர் தீபாவளி சீர்வரிசையோடு வீட்டுக்கு வந்திருந்தனர்.. ஏற்கனவே திருமணம் முடிந்ததும் நடக்க வேண்டிய மறுவீடு சடங்கெல்லாம் இருவருக்கும் நடக்கவில்லை..  திருமணத்தில் நடந்த சங்கடங்கள் ஒருப்பக்கம் என்றால், விஜிக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதால், இப்போது அங்கு வர முடியாதென்று நர்மதா சொல்லியிருந்ததால், மல்லிகாவும் குமாரசாமியும் சரி என்று விட்டுவிட்டனர். அதற்காகவே இப்போது அவர்களால் செய்ய முடிந்த சீர்வரிசைகளோடு வந்திருந்தனர்..

தீபாவளிக்கு நான்கு நாட்களுக்கு முன்னரே மகளும் மருமகனும் வீட்டுக்கு வர வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர்.. ஆனால் செல்வாவிற்கு அந்த வீடு வசதிபடுமா என்றும் யோசித்தனர்..

கோமதிக்கும், செல்வாவிற்கும் நர்மதாவின் பெற்றோர் சீர்வரிசையோடு வந்ததில் மகிழ்ச்சியே… அதன் மதிப்பீடை அவர்கள் எடை போடவில்லை..  சொந்தப்பந்தங்களையெல்லாம் விட்டு ஒதுங்கி நால்வர் மட்டுமே உலகம் என்றிருப்பவர்களுக்கு இதெல்லாம் பெரிய விஷயமாகவே தெரிந்தது.. இருந்தும்,

“அண்ணன் இல்லாததால ஆஃபிஸ்ல வேலை நிறைய இருக்கு மாமா.. 4 நாள்ல்லாம் அங்க தங்கறது முடியாது… நர்மதாவ வேணும்னா முன்னாடி அனுப்புறேன்.. தீபாவளிக்கு முன்னாள் கண்டிப்பா நான் அங்க வந்துட்றேன்..” என்று செல்வா தன் பிரச்சனையை எடுத்துச் சொன்னான்.

“விஜிம்மாக்கு இப்போ உடம்பு சரியில்லாத நேரத்துல நான் மட்டும் எப்படிப்பா முன்னாடியே வர்றது.. நானும் அவர் கூட முன்னாளே வர்றேன்ப்பா..” என்று நர்மதாவும் கூறினாள்.

“ம்ம் இவங்க இப்படி தான் சொல்வாங்க மல்லிகா.. 4 நாளுக்கு முன்னாடி இல்லன்னாலும், ரெண்டு நாளுக்கு முன்னாடியே ரெண்டுப்பேரையும் அனுப்பி விட்றேன்.. செல்வா அங்க இருந்தே ஆஃபிஸ்க்கு போய்ட்டு வரட்டும்..” என்று கோமதி சொன்னதும்.. இருவரும் திருப்தியுடனே கிளம்பினர்.

தன் கணவர் இறந்ததற்கு பின்னர் கோமதி எந்த பண்டிகைகளையும் பெரிதாக கொண்டாடுவதில்லை.. இதில் மகன்கள் இருவரும் தொழிலை கவனித்துக் கொள்வதிலேயே கவனத்தை செலுத்துவதால் பண்டிகைகள் சிறப்பாக இருக்காது… விஜி தான் ஏதாவது பலகாரம் செய்வார்.. பண்டிகைக்கு என்று புது ஆடைகள் எடுப்பது என்பதெல்லாம் இல்லை.. இருந்தாலும் இது செல்வா, நர்மதாவின் தலை தீபாவளி.. அதனால் நர்மதா வீட்டில் சென்று தீபாவளி கொண்டாடினாலும், அவளின் பெற்றோரே இருவருக்கும் புது ஆடைகள் எடுத்து வந்திருந்தாலும், நர்மாதாவிற்கும் தம் வீட்டு சார்பாக புது ஆடைகள் எடுத்து தர வேண்டும்.. நர்மதா வீட்டுக்கு செல்லும்போது வெறும் கையோடு போகாமல், நர்மதா வீட்டினருக்கு துணிமணிகள், இனிப்பு, பட்டாசு என்று எல்லாமே வாங்கிச் செல்ல வேண்டுமென்று கோமதி கூறினார்… விஜியை விட்டுவிட்டு நான் வர முடியாது அதனால், நீங்கள் இரண்டுபேர் மட்டும் சென்று எல்லாம் தேவையானதை வாங்கி வாருங்கள் என்றார். கோமதியின் சொல்படி, அடுத்து வந்த ஒரு ஞாயிற்றுக் கிழமையில் செல்வா, நர்மதா இருவரும் ஷாப்பிங் சென்றனர்.

து ஒரு பெரிய துணிக்கடை…. செல்வா நர்மதாவை அங்கே தான் அழைத்துச் சென்றிருந்தான்… தி.நகரில், அவள் எப்போதும் செல்லும் இடத்தில் இல்லாமல், இந்த கடை வேறு பக்கம் இருந்ததது..  வழக்கமாக அவள் செல்லும் கடைகளை விட இது பெரிது… ஒவ்வொரு ஆடைகளுக்கும் ஒவ்வொரு மாடி என்று பிரிக்கப்பட்டிருந்தது… வழக்கமாக பண்டிகை தினங்களின் கூட்ட நெரிசல்கள் இல்லாமல், ஒவ்வொரு பிரிவிலும் எண்ணிவிடக் கூடிய அளவில் தான் ஆட்கள் இருந்தனர்..

கொஞ்சம் பிரம்ம்பிப்போடு அந்த கடையை பார்த்தப்படி நின்றிருந்தவளை முதலில் டிசைனர் சேலைகள் இருக்கும் பகுதிக்கு அழைத்து சென்றான்… அங்கே தொங்க விடப்பட்டிருந்த சேலைகளில்  அவள் பார்வை சென்றது… ஒவ்வொன்றையும் பார்த்தப்படி நடந்தவளின் விழிகளுக்கு அந்த சேலை கண்ணில்பட்டது.. அது சில நாட்களுக்கு முன்பு அவள் வாங்க நினைத்த சேலை..

திருமணத்திற்கு முன்பு மாப்பிள்ளை வீட்டு சார்பாக ஒரு நாள் ஷாப்பிங் போனதில்லாமல், யமுனாவோடு மட்டும் ஒருநாள் தனியாக நர்மதா ஷாப்பிங் சென்றிருந்தாள்.. திருமணத்திற்கு பின் அவள் தினசரி தேவைகளுக்கான சேலைகள் மற்றும் பிற அத்தியாவசியமான பொருட்களை வாங்க சென்றிருந்தாள்…

சேலைகள் வாங்குவதற்கான அவளுடைய பட்ஜெட் 5,000.. அதில் ஒரு 6,7 சேலைகள் வாங்குவது அவளுடைய திட்டம்.. ஆனால் அன்றும் இதே போல் அங்கே தொங்கிக் கொண்டிருந்த சேலைகளை நோட்டம் விட்டவள், அந்த குறிப்பிட்ட சேலையின் மேல் ஈர்ப்பு ஏற்பட்டு அந்த சேலையின் அருகில் சென்றாள்.. அங்கிருந்த விற்பனையாளரிடம் அந்த சேலையின் விலையை கேட்க.. அவர் மூவாயிரத்து ஐநூறு என்றார்..

ஒரு சேலைக்கே இவ்வளவு பணத்தையும் செலவழிக்க அவளுக்கு மனம் வரவில்லை… அதிலும் திருமணத்திற்காக இப்போது தான் நிறைய சேலைகள் எடுத்திருந்தார்கள்… இப்போது அவளுக்கு தேவை திருமணத்திற்கு பின் புகுந்த வீட்டில் அணிந்துக் கொள்ள நல்ல சேலைகள் வேண்டும்… அவளிடம் இருக்கும் சேலைகளெல்லாம் தினமும் பள்ளிக்கு அணிந்து சென்றதால் கொஞ்சம் பழசாகிவிட்டது… என்னதான் பணம் படைத்தவர்கள் என்றாலும், புகுந்த வீட்டிற்கு போனதுமே அவர்களுக்கு செலவு வைக்க இவளுக்கு மனம் வரவில்லை… எனவே தன்னுடைய சேமிப்பிலிருந்து இப்போது தேவையானவற்றை வாங்கிக் கொள்ள அவள் நினைத்தாள்…

அன்றே ஒருவேளை ரிஷ்ப் ஐ மணக்கப்போவது அவளுக்கு தெரிந்திருந்தால், அவனே எல்லா செலவும் செய்யட்டும் என்று வெறுங்கையோடு சென்றிருப்பாள்… ஆனால் அன்றைய சூழ்நிலை தான் வேறாயிற்றே… அதனால் ஆசையாய் பார்த்து வாங்கலாம் என்று நினைத்த சேலையை வேண்டாமென்று நிராகரித்துவிட்டாள்.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த யமுனா.. “ஏன் நர்மதா.. பிடிச்சிருந்தா அந்த சாரிய எடுத்துக்க வேண்டியது தானே..” என்றுக் கேட்டாள்.

“இல்ல யமுனா.. இப்போ தானே நிறைய சாரிஸ் எடுத்தோம்.. இது எதுக்கு.. இப்போ நாம சிம்பிளா சில சாரிஸ் தானே எடுக்க வந்தோம்.. அதை மட்டும் எடுப்போம்..”

“இங்கப் பாரு பிடிச்சிருக்குல்ல அப்புறம் யோசிக்கக் கூடாது… இந்த சாரி புது மாடல்னு சொல்றாங்க.. நல்லாவும் இருக்கு.. அதனால எடுத்துக்கோ.. பணம் குறைவா இருந்தா நான் தர்றேன்…”

“அதெல்லாம் பிரச்சனை இல்லை.. கையில் கார்ட் இருக்கு.. இருந்தும் எதுக்கு இப்படி அநாவசியமா செலவு செய்யனும்னு யோசிக்கிறேன்..”

“வேணும்னா இந்த சாரிய என்னோட மேரேஜ் கிஃப்ட்டா வாங்கிக்க.. நான் எடுத்து தர்றேன்..”

“ஹே அதெல்லாம் வேணாம்.. நீ வேற ஏதாச்சும் கிஃப்ட் வாங்கனும்னு முடிவு செஞ்சிருப்ப.. உனக்கு மட்டும் என்ன காசு செடியிலையா முளைக்குது… உன்னோட தேவைகள் போக மீதிய நீ ஹோம்க்கு கொடுக்கறன்னு எனக்கு தெரியாதா..?? இப்போ இந்த சாரி இல்லன்னா என்ன..?? இதை விட அழகா இன்னொரு நியூ மாடல் சாரி வரும்… அப்போ இது பிடிக்காம போய்டும்.. நான் என்ன சின்ன குழந்தையா.. இது கிடைக்கலன்னா கவலைப்பட.. அதனால நீயும் கவலைப்படாத.. வா நாம வந்த வேலையை கவனிப்போம்..” என்று யமுனாவின் கைப்பிடித்தப்படி அவர்கள் எடுக்க நினைத்த சேலைகள் இருந்த பகுதிக்கு சென்றனர்.. நர்மதாவிற்கு வாங்கிக் கொடுக்கக் கூடிய கிஃப்ட் என்றைக்கும் இவளின் ஞாபகமாக நர்மதா வைத்திருப்பதாக இருக்க வேண்டுமென்று யமுனாவும் நினைத்ததால், அமைதியாக அவளுடன் நடந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.