(Reading time: 31 - 62 minutes)

ர்மதாவிற்கும் யமுனா என்ன சொல்லப் போகிறாள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.. தற்போது யமுனாவிற்கு உறவென்று யாருமில்லை என்பதை அவள் அறிந்திருந்தாலும், யமுனா கல்லூரியில் படிக்கும் போதிலிருந்து தான் மதர் ஜெர்மன் நடத்தும் இல்லத்தில் இருந்திருக்கிறாள்.. அதற்கு முன் தன் குடும்பத்தினரோடு தான் அவள் வாழ்ந்திருக்கிறாள்.. ஆனால் தன் குடும்பத்தைப் பற்றி இதுவரை யமுனா இவளிடம் சொன்னதில்லை… தன் குடும்பத்தினரோடு தான் யமுனா குன்னூருக்கு சுற்றுலா சென்றிருப்பாளோ என்று நினைத்து தான் அவள் பதிலை இப்போது எதிர்பார்த்தாள்.

ஆனால் யமுனாவோ “ம்ம் போயிருக்கேன்” என்பதோடு முடித்துக் கொண்டாள்.

ஆறு வருடம் தன் குடும்பத்தினரோடு குன்னூரில் வாசம், இருந்தும் இப்போது அதை சொல்ல யமுனா விரும்பவில்லை.. துஷ்யந்த் குன்னூர் சென்றிருப்பதை பற்றி இவள் கேட்டதற்கு காரணமே, அடிக்கடி அவனை எங்கோ பார்த்திருப்பதாக தோன்றுகிறதே, ஒருவேளை குன்னூரில் வைத்து தான் அவனை பார்த்திருப்போமோ என்று நினைத்து தான், ஆனால் செல்வா சொன்னதைப் பார்த்தால், துஷ்யந்த் தன் சிறுவயதில் தான் அங்கு போயிருப்பான் போல, அப்போது அவனை எங்கே பார்த்திருக்கிறோம் என்று குழம்பினாள்.

“அப்போ 3 பேரும் குன்னூர் பார்த்திருக்கீங்க.. இதுக்கப்புறம் குன்னூர் போற மாதிரி இருந்தா, ரெசார்ட்ல்லாம் எடுத்து தங்காம, எங்க பங்களாலேயே தங்கிக்கலாம்.. அதுக்கு தான் சொன்னேன்.. என்கிட்ட கேக்க தயக்கமா இருந்தாலும், நீங்க மதுக்கிட்ட கேக்கலாம்..” என்று இளங்கோ மற்றும் யமுனாவிற்கு பொதுவாக சொன்னான்.

அதற்குள் அவர்கள் ஆர்டர் செய்த உணவு வந்ததும் நால்வரும்  பேசியப்படி சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்ததும் செல்வா தான் பில்லுக்கு பணம் கொடுப்பதாக முடிவாக கூறியதால், இளங்கோவும் அமைதியாகிவிட்டான். பின் நால்வரும் கிளம்ப தயாரானர்..

“யமுனா.. நீங்க பஸ்ல தானே வந்தீங்க.. போகும் போது நாங்களே உங்களை ட்ராப் செய்யறோம்.. என்ன மது ஓகே தானே..”

“இல்ல செல்வா.. நான் ஒரு ஆட்டோ பிடிச்சே போய்டுவேன்.. நான் வேற ஸ்கூல் போகனும்.. அங்க போய் என்ன ட்ராப் பண்ணிட்டு நீங்க வீட்டுக்கு போக தூரமா ஆயிடும்.. அதனால வேண்டாம்..”

“இதுல என்ன யமுனா இருக்கு.. எங்களுக்கு அதுல ஒன்னும் கஷ்டமில்ல..” செல்வா சொல்லிக் கொண்டிருந்த போதே,

“நாம இன்னும் ஷாப்பிங் செய்யனும்னு சொன்னீங்கல்ல ரிஷப்.. யமுனா ஏன் ஆட்டோல போகனும்.. அதான் இளங்கோ அண்ணா இருக்காறே.. அவர் யமுனாவை ட்ராப் செய்வாரு.. என்ன அண்ணா யமுனாவை நீங்க கூட்டிட்டுப் போறீங்களா?? என்றதற்கு இளங்கோவும் ஒத்துக் கொள்ள, இதற்கு மேல் மறுக்க முடியாதென்பதால் யமுனாவும் ஒத்துக் கொண்டாள்.

ரெஸ்ட்டாரன்ட்டை விட்டு வெளியே வந்ததும், அந்த துணிக்கடை அருகிலேயே காரை பார்க் செய்ததால், செல்வாவும் நர்மதாவும் மற்ற இருவரிடமும் விடைப் பெற்றப்படி நடக்கத் தொடங்கினர்.

“மது… யமுனாவ நம்ம கார்லயே ட்ராப் செஞ்சுருக்கலாமே.. நாம க்ராக்கரஸும் அப்புறம் ஸ்வீட்ஸும் தான் ஆர்டர் கொடுக்கனும்.. அதான் லன்ச் சாப்ட்டுட்டோமே, அப்புறம் என்ன..?? மெதுவா யமுனாவே ட்ராப் செஞ்சுட்டே ஷாப்பிங் செஞ்சுருக்கலாம்..”

“நமக்கு தேவையில்லாத அலைச்சல் எதுக்கு.. அதான் இளங்கோ அண்ணா ட்ராப் பண்றேன்னு சொல்லிட்டாரே..”

“மது… நாம ரெண்டுப்பேரும் டைம் ஸ்பெண்ட் பண்ணனும்னு தானே, யமுனா இளங்கோ கூடவே போகட்டும்னு நீ நினைச்ச..” என்று சொல்லி அவள் முறைப்பை பரிசாக வாங்கிக் கொண்டான்.

“ஹலோ… நான் இப்படி சொன்னதுக்கு காரணம், இளங்கோ அண்ணாக்கும் யமுனாவுக்கும் தனிமை கொடுக்கத் தான்.. ரெண்டுப்பேரும் எதேச்சையா ரெஸ்ட்டாரன்ட்ல மீட் பண்ணிக்கிட்டாங்க, இருந்தும்… நாம போய் அவங்கள டிஸ்டர்ப் பண்ணிட்டோம்.. அதான் அவங்க இளங்கோ அண்ணாக் கூட பைக்ல போகட்டும்னு நினைச்சு தான்..”

“மது… அப்படின்னா யமுனா, இளங்கோக்குள்ள சம்திங் சம்திங்கா… சொல்லியிருந்தா விஷ் பண்ணியிருப்பேனே..”

“இளங்கோ அண்ணா தான் ப்ரோபோஸ் பண்ணியிருக்காரு… யமுனா அதை இன்னும் அக்சப்ட் செய்யல..”

“ஆனா இளங்கோக்கு என்ன..?? யமுனா எதுக்கு இளங்கோ காதலை ஏத்துக்கல..”

“தெரியல.. நானும் எவ்வளவோ சொல்லிட்டேன்.. இருந்தும் அவ ஏன் இப்படி ஒத்துக்க மாட்றான்னு புரியல.. இருந்தும் இளங்கோ அண்ணா தீவிரமா தான் இருக்கார்… அவ மனசை கண்டிப்பா மாத்துவார்..” இருவரும் பேசியப்படியே கார் அருகே வந்தவர்கள், காரில் ஏறி கிளம்பினர்.

நர்மதா, செல்வா அப்படி போனதும், இளங்கோவும் பைக்கை எடுத்துக் கொண்டு யமுனா அருகில் வந்தான்.. அவளோ பைக்கில் ஏறாமல், “ஆமாம் உங்களுக்கு முன்னாடியே துஷ்யந்தை தெரியுமா?? அன்னிக்கு நான் கேட்டப்போ ஏன் தெரியாதுன்னு சொன்னீங்க..” என்று அவன் நினைத்தப்படியே கேட்டாள்.

“என்ன யமுனா… இப்போ அது ரொம்ப முக்கியமா?? உன்னை பைக்ல ஏத்திக்கிட்டுப் போற சான்ஸ் கிடைச்சதுல நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா?? நீ இப்போ என்னோட பைக்ல உட்காரனும், நான் பைக்கை ஸ்டார்ட் பண்ணனும், பின்னாடி பேக் க்ரவுண்ட்ல பார்த்த முதல் நாளே சாங் ப்ளே ஆகனும்.. எப்படி இருக்குமில்ல..”

“ம்ம் இருக்கும் இருக்கும்… நர்மதாவும் செல்வாவும் தனியா ஷாப்பிங் வந்துருக்காங்களே, அவங்க கூட போய் அவங்கள டிஸ்டர்ப் செய்யக் கூடாதேன்னு தான், நான் உங்கக் கூட வர ஒத்துக்கிட்டேன்… நான் ஆட்டோல போறேன்னு சொன்னா அவங்க கேக்க மாட்டாங்க அதான், இப்படியெல்லாம் நீங்க பேசினா, நான் ஆட்டோல போய்டுவேன்..”

“சரி நான் எதுவும் பேசல… நீ உக்காரு நான் உன்னை ஸ்கூல்ல ட்ராப் செய்றேன்..” என்று அவன் சொன்னதும், அவள் ஏறி உட்கார,

“எப்படியோ துஷ்யந்த் பத்தி கேட்டதை திசை திருப்பியாச்சு..” என்று மனதில் நினைத்தப்படி வண்டியை கிளப்பினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.