(Reading time: 8 - 15 minutes)

பெங்களூரில் இருந்து மாயாம்மா வந்தாங்க வரும்போதே ஏதோ டையர்டா இருந்தாங்க வந்ததும் இந்தம்மா வாலுவாலுன்னு கத்துச்சு இப்போ முடிவா என்ன சொல்றே எம்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக்கப் போறீயா இல்லையான்னு அதுக்கு மாயாம்மா எதுவும் பேசலை அன்னைக்கு அறைக்குள்ளே போகும் போதே அவங்க கண்ணுலே ஜீவன் இல்லை மனசு கேக்காம நான் போய் சாப்பிடக் கூப்பிட்டேன் அப்பவும் பதில் இல்லை. 

ம்...அதற்குப் பிறகு மாயாவுடைய அறைக்கு யாராவது போனாங்களா ?

நான் வேலையை முடிச்சிட்டு வீட்டுக்கு கிளம்பிட்டேங்கய்யா 

சரிம்மா நீங்க போங்க. கனகு நகர, முனியனிடமும், புதிதாக சேர்ந்த டிரைவரிடம் எந்தவிதமான விஷயங்களும் கிடைக்கவில்லை. வினிதாவை அவளுடைய அறைக்கு அனுப்பிவிட்டு, மாயாவின் அறைக்குள் நுழைந்தான் கமல். அவனை எதிர்பார்த்து நின்ற கருப்பு உருவத்தைக் கண்டு திகைத்தான். அதன் கையில் சிறு கத்தி ஒன்று முளைத்திருந்தது. சில நிமிட போராட்டங்களுக்குப் பிறகு தோற்றுப்போன அவன் தோட்டத்துப் பக்கம் மறைந்து போனான். ச்சே எத்தனை முயன்றும் அவன் முகத்தைப் பார்க்க முடியவில்லையே என்று கோபத்தில் தரையை உதைத்தான் கமல். அவன் எந்தப்பக்கமாக வந்திருப்பான் ஒருவேளை அது சந்துருவாக இருக்குமோ என்று யோசனை ஓடியது அதே நேரம் வினிதாவின் அறையில் இருந்து வீல் என்ற அலறல் ஒலிகேட்க, கமல் அந்த அறையை நோக்கி ஓடினான். 

சுப்ரியா மெல்ல மேடிட்ட வயிற்றை அடிக்கடித் தடவிப் பார்த்துக்கொண்டாள். ஏழாவது மாசம் அவ்வப்போது ஏதோ சத்தம் கேட்பதும், சில நேரம் கூசுவதுமாய் இதுவரையில் உடலின் துடிப்பை மட்டுமே உணர்ந்திருந்தவளுக்கு இப்போது இன்னொரு குட்டி இதயத்தின் துடிப்பு மகிழ்வைக் கொடுத்தது. 

உணர்வுப் பூர்வமான கணவன் மனைவியின் அந்தரங்கத்தில் முளைத்த அன்பு பொக்கிஷம் அல்லவா இந்தக் குழந்தை. காமத்தை வெளிப்படுத்தும் மிருக அணைப்பில் மூச்சடைத்தவளின் நெஞ்சம். காதலோடு கூடிய காமத்தில் தான் எத்தனை இன்பம். அந்த அன்பில் திளைத்திருந்து, என்ன சுப்ரியா என்ன யோசனை ரவியும், கல்பனாவும் வர இன்பமாய் வரவேற்றாள். 

சும்மா சாயங்கால நேரத்தில ஒரு வாக்கிங் போனா நல்லதுன்னு டாக்டர் சொன்னாங்க. என்ன கல்பனா பேக்கிங் எல்லாம் பெரிசா இருக்கு

எல்லாம் உனக்குத்தான். முதல்ல இந்தப் புடவையைக் கட்டிட்டு வாங்க சுப்ரியா, அவள் கொடுத்த கவரைப் பிரித்துப் பார்த்தாள். ரொம்ப அழகா இருக்கு இந்த பட்டுபுடவை இப்போ எதுக்கு ?

மூச் முதல்ல கட்டிட்டு வாங்க அப்பறம் மத்ததைப் பேசலாம் சுப்ரியா பட்டுபுடவைக்கட்டி வரவும் அதற்கு முன்னதாகவே தாம்பூலம் வைத்து நலங்கு வைப்பதற்கான ஏற்பாடுகளோடு, வளையல்கள் அணிவகுத்து இருந்தது

இது...

உனக்கு இது ஏழாவது மாதம், வளைகாப்பு செய்யணுமில்லை அதுக்குத்தான் இந்த ஏற்பாடு கல்பனா நலங்கு வைத்து கண்ணாடி வளையல்களை கைநிறைய அணிவித்தாள். இப்போ சந்தோஷமா சுப்ரியா

ம்.. எனக்கு சந்தோஷத்தில் பேச்சே வரலை கல்பனா. இது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி கண்களில் அவளையும் அறியாமல் நீர் வழிந்தது.

ப்ச்..அட இதென்ன குழந்தை மாதிரி ஒரு அழுகை, குழந்தை பெறப்போகும் பெண்ணுக்கு செய்யும் சடங்குதானே சுப்ரியா இது, ஒரு விஷயம் செய்யத் தொடங்கினா அது முழுமையா இருக்கணும். அன்னைக்கு நீங்க டிவி தொடர் பாக்கும் போது ஒரு வளைக்காப்பு நிகழ்ச்சியை ரொம்பவே ஆர்வமா பாத்திங்க அப்போவே உங்க அடி மனசிலும் இந்த ஆசை இருக்குன்னு தோணுச்சு. அதனால் தான்

எனக்கு என்ன வேணுன்னு நான் கேட்காமலேயே நீங்க ரொம்ப வித்தியாசமான பெண் கல்பனா எந்த பொண்ணும் செய்ய முடியாத விஷயங்களை செய்யறீங்க 

கர்ப்பிணிப் பெண் சந்தோஷமா இருந்தா பிள்ளைக்கும் நல்லது இதுலே என் சுயநலமும் அடங்கியிருக்கு அதனால ரொம்ப புகழவேண்டாம் சரி உங்க சீமந்த சாப்பாடு தயார் சாப்பிடலாமா ? ரவி இதையெல்லாம் ஒண்ணுவிடாம நீங்க சுப்ரியாவிற்கு ஊட்டிவிடணும் சரியா....?! கணவனிடம் சொல்லிவிட்டு தன் அறைக்குள் புகுந்து கொண்டாள் கல்பனா.

ரவி நீங்க போய் கல்பனாவைப் பாருங்க ஒரு பொண்ணா இப்போ அவங்க படற கஷ்டத்தை என்னால உணர முடியும். தாய்மையோட புனிதத்தை அனுபவிக்க முடியாம ஏற்கனவே அவங்க மனசு வேதனைப்படுது. இப்போ எனக்காக எத்தனை மெனக்கெடல்கள், என் சந்தோஷத்திற்கு இவ்வளவு செய்தவங்களை தனியா சங்கடப்பட விடறது தப்பு இப்பத்தான் அவங்களுக்கு உங்க துணை தேவை. வற்புறுத்தி கல்பனாவின் அறைக்கு ரவியை அனுப்பிவைத்தாள் சுப்ரியா.... !

அங்கே சுப்ரியாவிற்கு போட்டு மீதமிருந்த வளையல்களை ஒவ்வொன்றாய் எடுத்து உடைத்துக்கொண்டு இருந்தாள் கல்பனா அவளின் கண்களில் தென்பட்ட வெறி ரவியையே அச்சம் கொள்ள வைத்தது. 

மாயா வருவாள்

Epsiode # 11

Epsiode # 13

{kunena_discuss:1142}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.