(Reading time: 8 - 16 minutes)

செழியன் கடையில் மேற்பார்வை பார்த்துக் கொண்டே மனதினுள்

“ஷப்பா.. எப்படியோ அப்பா கிட்டேர்ந்து மூணு நாள் தான் இருப்பெனுட்டு தப்பிச்சச்சு.. அங்க போயிட்டு வேலை இருக்குன்னு ரெண்டு நாள்லே கிளம்பிடணும். இருக்க போற ரெண்டு நாளும் பொங்கலும், கரிநாளும் தான்.. அதுனாலே எந்த பேச்சு வார்த்தையும் ஆரம்பிக்க மாட்டங்க.. அவங்க மூணு நாள் கழிச்சு சொந்தக்கரங்கள கூப்ட்டு ஆரம்பிக்க்ரதுக்குலே நாம எஸ்கேப் ஆகி வந்துட்டோம்னா. முடிவு எதவும் எடுக்க மாட்டாங்க.. இங்கே வந்து நாம அத ஆற போட்டுடலாம்.. “

என்று மிக பெரிய மனக் கோட்டை கட்டினான்.. ஆனால் அவனின் அப்பாவின் கில்லாடித்தனம் அவனுக்கு தெரியவில்லை.

இங்கே கோவிலுக்கு சென்ற சிவஞானமும் , பார்வதியும் கோவிலில் அர்ச்சனை முடித்து விட்டு அமர, பார்வதி தன் கணவரிடம்

“என்னங்க.. நானும் கொஞ்ச நாளா பாக்கறேன்.. ஒரு மாதிரியாவே இருக்கீங்க.. “

“ஒன்னும் இல்லமா.. இந்த பைய கல்யாண விஷயம் தான் என்னை போட்டு அரிச்சுட்டு இருக்கு..”

“அதிலே என்னங்க பிரச்சினை.. தை பொறந்து பேச்சு வார்த்தை ஆரம்பிக்கலாம்னு தான் முடிவு பன்னிருக்கீங்களே.. “

“எனக்கு என்னவோ..  இந்த பைய லேசிலே சம்மதிப்பான்னு தோனல..”

“அவன் நம்ம புள்ளைங்க.. அப்படி எல்லாம் உங்கள மீறி நடந்துகிட மாட்டான்..”

“அது சரிதான். ஆனால் அவன் கல்யாணம் நடக்குரதுக்குள்ளே உன்பாடு.. என்பாடு ஆயிடும்னு .. ஜோசியர் பார்த்துட்டு சொன்னார்.. அது தான் கவலையா இருக்கு..”

“அப்படி எல்லாம் எதவும் ஆகாது.. நாம தெய்வத்த நம்புவோம்..”

“ஹ்ம்ம்.. நானும் அதுதான் நினைக்கேன்.. பார்க்கலாம்..”

என்றபடி வீட்டிற்கு கிளம்பினர் இருவரும்.

செழியன் எட்டு மணிக்கு தன் வீட்டிற்கு போன் செய்து தனக்கு சாப்பாடு வேண்டாம் என்றும், அம்மா, அப்பா இருவரையும் சாப்பிட்டு படுத்து விடுமாறும் கூறினான். அதோடு தன்னிடம் சாவி இருப்பதால் கதவு திறக்க முழித்து இருக்க வேண்டாம் என்றும் சொல்லி விட்டான்.

அவன் கடை அடைத்து, கணக்கு வழக்கெல்லாம் கொஞ்சம் பார்த்து விட்டு வீட்டிற்கு வரும்போது மணி பதினொன்று ஆகி விட்டது. அவன் வரும்போது பெற்றோர் இருவரும் உறங்கி இருக்க, தன் அறைக்கு சென்றான்.

அவன் உணவு வேண்டாம் என்றதால், பால் காய்ச்சி பிளாஸ்க்கில் வைத்து இருந்தார் அவன் அம்மா..

“எவ்ளோ சொன்னாலும் கேட்க மாட்டீங்களே நீங்க..” என்று மானசீகமாக அன்னையுடன் பேசிவிட்டு, அந்த பாலை குடித்து, பிளாஸ்கை கழுவி வைத்தான்.

பிறகு தன் போனில் மணி பார்த்தவன், வாட்ஸ் அப் பார்க்க, அங்கே மலர் ஆன்லைனில் இருப்பது தெரிந்தது.

“ஹாய். குட்டிமா.. “ என டைப் செய்ய,

“ஹாய் இளா” என பதில் கொடுத்தாள்.

“என்னடா.. தூங்கலையா “

“ஹ்ம்ம். இல்லை.. “

“ஏனோ.. இந்த அத்தானின் நினைவா ?”

“அட.. நினைப்புதான்..”

“அதான் கேட்டேன்.. என் நினைவா.. “

“ஹ்ம்ம்.. இல்லை.. சும்மாதான் முழிச்சு இருக்கேன்..”

“ஹ்ம்ம்.. நம்பிட்டேன்..” என அவன் சிரிக்கும் ஸ்மைலி.. அனுப்ப, மலர் பதிலுக்கு உர்ர் என்ற ஸ்மைலி அனுப்பினாள்.

சற்று நேரம் ஸ்மைலி ஓடு விளையாடினார்கள்.

செழியன் “இந்த மெசேஜ் எல்லாம் பார்த்தா நம்ம ரெண்டு பேரும் லெக்சரர்ன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டங்க.. டீனேஜ் பசங்க மாதிரி விளையாடிட்டு இருக்கோம்..” என அனுப்ப

மலரும் “அது என்னவோ உண்மைதான் “ என்று ஒரு சிரிக்கும் ஸ்மைலி அனுப்பினாள்.

பிறகு “மலர் உன்கிட்ட பேசணுமே. இப்போ கால் பண்ணவா...”

“இப்போவா.. நாளைக்கு காலேஜ்லே பேசலாமே..”

“இல்லை .. அது விஷயமாத்தான்.. “

“இந்த நேரம் பேசற சத்தம் கேட்டா அம்மா முழிச்சுப்பாங்களே இளா”

“நீ பேச வேண்டாம்.. நான் பேசுறத கேட்டுக்கோ.. போன சைலென்ட்லே போட்டு நான் கால் பண்ணவுடனே எடு..” என,

அவளும் சரி என்று அனுப்பினாள்.

அவள் பதில் வந்தவுடன் ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணிவிட்டு கால் பண்ணினான் செழியன்.

மலர் அட்டென்ட் செய்தவுடன்,

“சாரி டா.. மலர்.. உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.. அதான் இப்போ கால் பண்ணிட்டேன்.. ஓகே வா.. “

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.