(Reading time: 11 - 21 minutes)

27. யார் மீட்“டி”டும் வீணையிது? - புவனேஸ்வரி கலைச்செல்வி

Veenai             

ருத்துவமனை!

சத்யேந்திரன் மயங்கி விழுந்த செய்தி காட்டுத்தீ போல வேகமாக பரவியதின் விளைவாக, ஊடகங்களை சேர்ந்த சிலர் மருத்தவமனையில் கூடி இருந்தனர். அவர்களின் கவனத்திற்கு தீனி போடுவது போல அங்கு வந்து நின்றது சுலோட்சனாவின் கார்.

“அத்தை, மீடியா இருக்காங்க போல?” யோசனை நிறைந்த குரலில் சொன்னாள் கண்மணி.

“இதெல்லாம் ரொம்ப சகஜம்மா..”

“நானும் எதிர்ப்பார்த்தேன் தான்..ஆனால் இவ்வளவு சீக்கிரமாக எதிர்ப்பார்க்கல.. இப்போ தெரியுது ஏன் உங்க புள்ள வெளில வரதுக்கே யோசிக்கிறார்னு”என்றாள் கண்மணி நமட்டு சிரிப்புடன். அவளது சிரிப்பு சத்யனின் அன்னையையும் விட்டுவைக்கவில்லை.

“ஹா ஹா.. பாவம் தான் கண்மணி நீயும்”

“ஆமா ஆமா..காலம்  காலமா, காதலிக்க ஆரம்பிச்சதும் ஹீரோ ஹீரோயின் வெளில கூப்பிடுவாரு. நம்ம ஹீரோயின் பயந்து போயி ஐயோ அதெல்லாம் முடியாது.. வர மாட்டேன்.. யாராச்சும் பார்த்திடுவாங்கனு சொல்லுவாங்க.. என் கதையில நான்தான் ஹீரோவாக இருக்கேன்”என்றாள் கண்மணி.

“ஹா ஹா.. ரொம்பவும் சிரமமா இருக்காம்மா?” அக்கறையாய் கேட்டார் சுலோட்சனா. எதையும் தலையில் தூக்கி போட்டுக்கொண்டு தவிக்கும் குணம் அவளுக்கு இல்லையே.  அதனால் வெகு இயல்பாக பதிலுக்கு சிரித்தாள் கண்மணி.

“அட போங்கத்தை.. இந்த சூழ்நிலைகெல்லாம் என்கிட்ட எக்கசக்க ஐடியா இருக்கு.. உங்க பையனுக்கு அப்பபோ வேப்பிலை அடிச்சு பேய் ஓட்டுறேன் பாருங்க” என்றாள். தங்கள் இருவரின் பேச்சினை ரசித்து  பார்த்துக் கொண்டிருந்த வெற்றியை பார்த்து புருவம் உயர்த்தினாள் கண்மணி.

“டேய் என்ன, நாங்க பேசுறத எல்லாம் உன் படத்துக்கு யுஸ் பண்ணலாம்னு பார்க்குறியா ? கொன்னுவேன்.. அத்தை நீங்க இந்த டைரக்டரை கூட்டிட்டு முன்னாடி போங்க.. நான் வந்தேன்னு சொல்லாதிங்க..நான் நம்ம ப்ரெஸ் மக்களுக்கு ஹை சொல்லிட்டு வரேன்!” என்று முன்னே இரண்டடி வைத்தவள், ஆச்சர்யமாக வெற்றியைத் திரும்பி பார்த்தாள்.

எப்போதுமே அரணாக மாறி தன்னை தடுக்கும் நண்பன் இன்று அமைதியாக நிற்பதின் காரணமென்ன? அவனையே கேட்டாள்.

“என்னடா எப்பவுமே கண்ணு பன்னுனு என்னைய தடுப்ப..இன்னைக்கு அப்படி பண்ணலயே?”

“ஹா ஹா .. அப்போ நீ எனக்கு தோழி மட்டும்தான்..இப்போ சத்யனுக்கும் நீ சரிபாதி. அவர் லைஃப்ல இருக்குற விஷயங்களை நேர்த்தி பண்ணவேண்டிய கடமை உனக்கு நிச்சயம் இருக்கு.. சோ நீயே கவனிச்சுக்கோ..”என்றான் வெற்றி. கட்டைவிரலை நீட்டி வெற்றியிடமும் சுலோட்சனாவிடமும் வெற்றிக்குறி காட்டிவிட்டு பத்திரிக்கையாளர்கள் நிறைந்திருந்த இடத்திற்கு தானே சென்றாள் கண்மணி. கேமராக்கள் தன்னை கண்டு கண் சிமிட்டுவதை புன்னகையுடன் வரவேற்றாள் அவள்.

சத்யனின் உடல்நிலையில் ஆரம்பித்த கேள்விகளானது,அவர்களது உறவுவரை தொடர்ந்தது. அனைத்தையுமே புன்னகையுடன் எதிர்கொண்டாள் கண்மணி. அவளது சிரிப்பும், தெளிவான விடைகளும் அனைவரையும் கவர்ந்தது.

“ஆக, சத்யன் சாரை நீங்க தான் கல்யாணம் பண்ணிக்க போறிங்கன்னு உறுதியா மேடம்?” ஒருவர் கேட்கவும்,

“வார்த்தைகள் விட  செயல்களை நம்புங்க சார்.. அதுவே நிறைய சொல்லும். அவர் மருத்துவமனையில் இருக்கார்னு தெரிஞ்சதும் ஓடி வந்தது அவருடைய அம்மாவும் நானும் தானே.. எங்கள் உறவை இதைவிட விளக்கமா வார்த்தையால சொல்லுனுமா என்ன?” . ஆம்,இல்லை என இரண்டையுமே சொல்லாமல் சுவாரஸ்யமாக இன்னும் கொஞ்சம் பேசி அவர்களை அனுப்பியே வைத்திருந்தாள் கண்மணி. அடுத்து நம்ம கண்மணி என்ன பண்ணுறாங்கன்னு பார்க்குறதுக்கு முன்னாடி, அர்ப்பணாவின் வீட்டிற்கு போன, ராகவேந்திரன் என்ன ஆனார்னு பார்ப்போம்.

ண்களின் கண்ணீர் கொட்டிட, இடுப்பில் சேலையை சொருகி கொண்டு, வெங்காயம் நறுக்கி கொண்டிருந்தாள் அர்ப்பணா. அவளை ஓரக்கண்ணால் ரசித்தபடியே தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான் ராகவேந்திரன்.

“ உள்ளமெனும் ஜன்னலை இன்று தொட்ட தென்றலே

 காயம் ஆற்றினாயடி என் கதாநாயகி ” அர்ப்பணா நடித்த படத்தில் இடம்பெற்ற பாடல் அது. அந்த படப்பிற்காக குறைந்தபட்சம் ஐம்பது முறையாவது அந்த பாட்டினை கேட்டிருப்பாள் அவள். அதனால் இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பது போல வேலையில் மூழ்கினாள் அர்ப்பணா.

எதிர்ச்சையாக அவள் நிமிர்ந்திட, ராகவ் வைத்தக்கண் வாங்காமல் அவளது நடிப்பினை ரசித்துக் கொண்டிருந்தான். அவனையெ இமைக்காமல்பார்த்தாள் அர்ப்பணா.

“எப்படிப்பட்ட காதல் இது? இது போன்றகாதல் எல்லாமே இன்னும் இருக்கிறதா என்ன? அன்று நிரூபணா மட்டும் ராகவனின் காதலைப் பற்றி சொல்லாமல் இருந்திருந்தால்? இன்னமும் தெரிந்திருக்காது ,தன்னை நேசிக்க இப்படி ஒருத்தன் இருக்கிறான் என்று!”

“இதோ சற்றுமுன்பு கூட அவன் நடந்து கொண்ட விதத்தை எப்படி பாராட்டுவது?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.