(Reading time: 11 - 21 minutes)

அவனையே இமைக்காமல் பார்த்தாள் அர்ப்பணா. வயதில் யுவதி என்றாலும் அவள் வாழ்க்கை அனுபவங்கள் சிறியதா என்ன? எத்தனை பேரை சந்தித்திருக்கிறாள் வாழ்க்கையில்! அதில் எத்தனை சுயநலவாதிகள்? பெற்றோர் உட்பட! முதன்முறையாக தனக்காக தன்னை நேசிக்கும் உயிரை காண்கிறாள். அவன் நெற்றியில் மிருதுவாய் முத்தமிட்டு தன் காதலை வெளிப்படுத்தினாள் அர்ப்பணா. கடிகாரமே சோர்ந்து போகும் மட்டிலும் அவன் தோளில் தோய்ந்திருந்தாள் பாவை அவள்.

“உன்னை பார்க்குற ஆர்வத்துல சாப்பிட்டாம வந்துட்டேன்.. பசிக்கிதுடா”என்று ராகவேந்திரன் சொன்னதும்தான் அவனை விலகி சமையல் வேலையில் மூழ்கினாள். நிகழ்காலத்திற்கு வந்தவள் தன் முன்னே கைகட்டி நின்றவனை பார்த்து வெட்கத்துடன் சிரித்தாள்.

“எவ்வளவு நேரமாக கண்ணு திறந்து வெச்சுட்டே கனவு கண்டேனோ தெரியலையே”என்று மானசீகமாக சொல்லிக் கொண்டவள், ஏதோ ஒரு முடிவை எடுத்துவிட்டது போல ராகவனிடம் கேட்டாள்.

“ராகவ், என் வாழ்க்கையை தூரத்தில் இருந்து பார்த்தவர் நீங்க.. இனி பக்கத்தில் இருந்து வாழ்ப்போறவரும் நீங்கத்தான். இதுவரைக்கும் என் லைஃப்ல எல்லாரும் அவரவருக்கு சாதகமான முடிவு எடுத்தாங்க.. நானுமே கட்டுப்பட்டு நடந்தேன்.. ஆனா, இன்னைக்கு அதையெல்லாம் மீறி நானே ஒரு முடிவு எடுத்துருக்கேன்.. சம்மதிப்பிங்களா?” என்றாள் அர்ப்பணா.

அவள் சொல்லும்முன் அனைத்தையுமே அறிந்திவிட்டிருந்தவன் போல,

“எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்..?”என்று கேட்டான் ராகவேந்திரன்.

ன்னை பார்க்க வந்த அன்னைக்கு பதில் சொன்னாலும் சத்யேந்திரனின் நேத்திரங்கள் ஏதோ தேடலில் கர்ம சிரத்தையுடன் இறங்கி அறையெங்கும் அலைபாய்ந்தன. புரியாதவர் இல்லையே சுலோட்சனா..எனினும் மருமகளுக்கு தந்த முதல் வாக்கினை மீறிடும் எண்ணமும் இல்லை.

கேட்கலாமா? வேண்டாமா? என அலைபாய்ந்த மனதினை கட்டுக்குள்கொண்டு வந்து வெற்றியைக் கேள்வி கேட்டான் சத்யன்.

“வெற்றி.. தனியாகத்தான் வந்தீயா?”

“இல்லையா..உங்க அம்மாவும்தானே வந்துருக்காங்க..?”எதுவும் அறியாத பிள்ளையென உரைத்தான் வெற்றி.

“ஜோக்கா.. க.... கண்மணி வரலையா?அவளுக்கு தெரியுமா?”என்றான் சத்யேந்திரன்.

“தெரியும்..நல்லாவே தெரியும்..”என்றபடி அறைக்குள் நுழைந்தாள் கண்மணி கையில் வடையுடன்.

“ஹேய் கண்ணம்மா..”என அவளை நோக்கி கை நீட்டினான் சத்யேந்திரன்.

“ஐயே..நானே கஷ்டப்பட்டு கியூல நின்னு வடை வாங்கினேன்..அதெல்லாம் உங்களுக்கு தர முடியாது போங்க” என்று அவள் சிலுப்பிக் கொண்ட விதத்தில் மற்ற மூவருமே சிரித்தனர்.

“மக்கு..ஆரம்பிச்சுட்டியா? எங்கத்தான் போன நீ?”என்று வெற்றி அவள் தலையில் செல்லமாய் கொட்டு வைத்தான்.

“அதுவா பேசி பேசி பசிச்சது டா..எப்படியும் என்னை தேடி, சத்யன் உங்க ரெண்டு பேரையும் பாடா படுத்துவாருன்னு தெரியும்… அந்த இன்ப அவஸ்தையை நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் நல்ல அனுபவிக்கலாமேனு நல்ல எண்ணத்துல கேண்டினுக்கு போனேன்..செம்ம டேஸ்ட்டு வடை..”என்று சப்பு கொட்டி சாப்பிட்டாள் அவள்.

“ஹாஹா.. ஏம்மா.. வடையா இல்லை என் பையனானு கேட்டாஎதை தேர்ந்தெடுப்ப?” சிரிப்புடன் கேட்டார் சுலோட்சனா.

“இப்போ இருக்குற நிலைமைக்கு வடைதான் அத்தை..”என்று கண்மணி சீரியசான பாவத்தில் சொல்லவும் மற்ற மூவரும் சிரிக்கத் தொடங்கினர்.

“வெற்றி, அவங்க பேசிட்டு இருக்கட்டும்..வா நாம அந்த வடையில் என்னத்தான் இருக்குனு சாப்பிட்டு பார்ப்போம்”என்று அவனை அழைத்துக் கொண்டு கிளம்பினார் சுலோட்சனா. அவர் போகும் வரை காத்திருந்தாள் கண்மணி.

பெட்டில் தலையணையின் துணையால் நன்றாக சாய்ந்து அமர்ந்திருந்தான் சத்யன். நீரில் குதித்த வேகத்தில் கூரிய கல்லொன்று அவன் நெற்றியை பதம் பார்த்திருக்க அங்கு கட்டு இடப்பட்டு இருந்தது. அந்த கட்டை மிருதுவாய் தடவி,

“ரொம்ப வலிக்கிதா சத்யூ??” என்று கேட்டாள் கண்மணி. அவளை ஆழ்ந்து பார்த்து ரசித்தவன், தன்னையும் மறந்த குரலில்,

“ம்ம்மஹ்ம்ம்..ஒன்னும் வலி இல்லடா கண்ணம்மா..நான் நல்லா இருக்கேன் ..”என்றான்.

“அப்படியா? நல்லாதா போச்சு..”என்றவள் அவன் சுதாரிக்கும் முன், சத்யனின் முகத்தில் நீரை ஊற்றி அபிஷேகம் நடத்தினாள். அந்த ரணகளத்திலும் அவனது காயத்தில் நீர் பாடாமல் லாவகமாய் ஊற்றிவிட்டு,அவனை பார்த்து முறைத்தாள்.

என்ன ஆச்சுன்னு அடுத்த வாரம் சொல்லுறேன்..

-வீணை இசைந்திடும்-

Episode # 26

Episode # 28

{kunena_discuss:1055}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.