(Reading time: 21 - 41 minutes)

28. யார் மீட்“டி”டும் வீணையிது? - புவனேஸ்வரி கலைச்செல்வி

Veenai             

ஹாய் ப்ரண்ட்ஸ்! ரொம்ப நாளைக்கு அப்பறமாக அப்டேட் தரேன். மன்னிக்கவும். கதைக்கு போகுற முன்னாடி இதுவரை என்ன நடந்ததுனு சுருக்குமாக சொல்லிடுறேன். அர்ப்பணாவின் வீட்டிற்கே சென்று தனது காதலை முழுமையாக சொல்லிவிட்டிருந்தார் ராகவேந்திரன். தன்னுடைய வாழ்க்கையில் முக்கிய முடிவை தானே எடுக்க விருப்பதாக அர்ப்பணா சொல்லவும்,எப்போ கல்யாணம்னு கேட்டு ரெண்டே வார்த்தையில் வியப்பில் ஆழ்த்திவிடுகிறார்.

இன்னொரு பக்கம், ஷூட்டிங்கில் சாகசம் பண்ணி நம்ம சத்யேந்திரன் தலையில் அடிப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார். அவரை சந்திக்க வந்த கண்மணி, பத்திரிக்கையாளர்களிடம் மிகத் தெளிவாக பதில் சொல்லிட்டு நம்ம ஹீரோவை சந்திக்கிறாங்க. சத்யன் கண்களாலேயே காதல் அம்புகள் வீசிட அவர் முகத்தில் தண்ணீரை ஊற்றிவிட்டு ப்ரீஸ்ல (freeze) நிக்கிறாங்க கண்மணி. ரிலீஸ் பண்ணிடலாமா?

முகத்தில் வழியும் நீர்திவலையும், அதனால் விளைந்த குளிருமே சொன்னது சத்யனுக்கு,தான் காண்பது கனவில்லை என! “ஏன் இந்த கொலவெறி?” என அவன் விழிகளாலேயே பேசிட, அவனை நெருங்கி வந்தாள் கண்மணி.

“போச்சு நமக்கு அடி கன்ஃபார்ம்..”என்று அவன் நினைக்கும்போதே அவனது காயத்தை தொட்டுப் பார்த்தாள் அவள். மென்மையாய் புன்னகைத்த சத்யேந்திரன்,

“வலி இல்லைடா” என்றான்.

“வலிக்கிதானு நான் கேட்கவே இல்லையே! காயம் ஈரமாகிடுச்சானு செக் பண்ணேன். எங்களை பத்தி உங்களுக்கு அக்கறை இல்லாதப்போ நான் மட்டும் ஏன் அக்கறை படனும்?”என்று அவனைப் பார்த்து கேட்டாள். தன்னுடைய கேள்வியானது அவனுக்கு வலியை தந்திருக்கும் என்று அறிந்தே அப்படி கேட்டாள் கண்மணி.

“ஏன்டா இப்படி பேசுற? என் உலகமே அம்மாவும் நீயும்தானே?”

“போதும் இந்த டைலாக் எல்லாம் உங்க படத்துல யூஸ் பண்ணிக்கோங்க.. இந்த கண்மணிக்கிட்ட இதெல்லாம் நடக்காது. உங்களுக்கு எங்க ரெண்டு பேரையும் விட, உங்களுடை உணர்வுகள்தானே முக்கியம்? உங்க குற்ற உணர்ச்சியை போக்கிக்க நீங்க என்ன ரிஸ்க்கு வேணும்னாலும் எடுப்பீங்க. அதை நினைச்சு நாங்க கவலைபட்டால் உங்களுக்கு என்ன, படலன்னா உங்களுக்கு என்ன?”

“ஆனா, கண்ணம்மா இதெல்லாம் நான் ஏற்கனவே சொல்லிட்..”என்று சத்யன் முடிக்கும் முன்னரே தன்னிரு விழிகளால் அனலை கக்கியே அவன் வாயை மூடியிருந்தாள் கண்மணி.

“என்ன ஏற்கனவே சொல்லியே என்கிட்ட ஒப்புதல் பத்திரத்துல கையெழுத்து வாங்குனிங்களாக்கும். மக்கு நாம் அப்போ டீப்பா லவ் பண்ணவே ஆரம்பிக்கல. அதுக்குள்ள இப்படி இருக்காதிங்க, அப்படி இருக்காதிங்கனு சொன்னா நான் உங்க கண்ணுக்கு சர்வாதிகாரியாக தெரிஞ்சிருக்க மாட்டேன்?” என்று சிரிக்காமலே கிண்டலாக வினவினாள் கண்மணி. அவளது பாவனையில்சத்யன் தான் வாய்விட்டு சிரித்தான்.

“நீங்க சிரிச்சாலுமே அதுதான் உண்மைப்பா. நீங்க இப்படி பண்ணுறீங்கனு என்கிட்ட சொன்னப்போவே வேண்டாம் இதெல்லாம் தப்புன்னு சொல்லிருக்க முடியும். ஆனா நீங்க அப்போ ரொம்ப இமொஷனலா இருந்தீங்க. அந்த நிமிடங்கள் உங்களுக்கும் மாமாவுக்குமான நேரமாக என் கண்ணுல பட்டிச்சு. அதான் நேரம் வரும்போது வறுத்து எடுக்கலாம்னு காத்திருந்தேன்.”

“ஹீ ஹீ.. அடிப்பாவி..”

“ஹும்கும்.. நீங்க பார்க்கத்தான் ரொம்ப கெத்து.. ஆனா சரியான மக்கு. ஒரு கருப்பு கூலிங் க்ளாஸ் போட்டுகிட்டு மூஞ்சிய உர்ருனு வெச்சுகிட்டு நீங்க உலகத்தை ஏமாத்துங்க. கண்மணியை ஏமாத்த முடியாது.”

“..”

“மாமாவை நீங்க புரிஞ்சுக்கல. அவரை கஷ்டப்படுத்திட்டீங்கன்னே வெச்சுக்கலாம். அதுக்கு பிராயர்சித்தமாய் நீங்க என்ன பண்ணனும்? அவருடைய மகனான நீங்க எவ்வளவு அருமையான நடிகர்னு பேரு வாங்கனும். எல்லாரோடும் அன்பா இருந்து நல்லா பேரை சம்பாதிக்கனும். நடிகர் சத்யன் அப்படியே அவங்க அப்பா மாதிரினு மத்தவங்க  பேசுற மாதிரி இருக்கனும்!”

“..”

“ரிஸ்க் எடுத்து நடிச்சிட்டா மாமா மனசு குளிர்ந்திடுமா? மீடியாவை புடிக்கல, சினிமா அரசியல் புடிக்கல, இது புடிக்கல அது புடிக்கல ஸ்கூல் படிக்கிற பிள்ளை மாதிரி கம்ப்லைண்ட் பண்ணுறீங்க.. உங்களை சுத்தி சந்தோஷமான விஷயங்கள் நிறைய இருக்கு. யாரோ ஒரு இயக்குனர் அவருடைய கற்பனைக்கு உங்க முகத்தை தேர்ந்தெடுக்குறார், யாரோ ஒரு தயாரிப்பாளர் உங்களை நம்பி பணம் போடுறார், இதெல்லாம் விட உங்களை நேரில் பார்க்கவே இல்லன்னாலும், அண்ணனா,தம்பியா, தோழனா பார்க்குற ரசிகனின் இன்னசன்ஸ் (innocence)  இதை எல்லாம் ரசிக்கத் தெரியல உங்களுக்கு!”

“..”

“அந்த கருப்புகண்ணாடி உங்க ப்ரச்சனையை சரி பண்ணிடுமா? சிடுமூஞ்சியா இருந்தா நிம்மதி கிடைச்சிருமா? நீங்க ஒரு தைரியமான கோழை!” ஒரே போடாக போட்டு அவனது வாயை அடைத்தாள் கண்மணி. என்ன சொல்வதென்றே புரியாமல் அமர்ந்திருந்தான் சத்யேந்திரன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.